
China Online Auction: 29 மணி நேர ஏலத்தில் ரூ.18.5 லட்சத்துக்கு ஏலம் போன வைரல் நாய்..!
முதலில் 24 மணி நேரம் நடைபெறுவதாக ஏல நேரம் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், உலகெங்கிலும் இருந்து ஏலதாரர்கள் விருப்பம் காட்டியதால், 24 மணி நேரத்தை கடந்து ஏலம் தொடர்ந்தது.

சீனாவைச் சேர்ந்த வீடற்ற நாய் ஒன்று ஏலத்தின்போது 25,000 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனையான செய்தி வைரலாகி உள்ளது. 29 மணி நேரம், 480 ஏலதாரர்கள் பங்கேற்றிருந்த இந்த ஆன்லைன் ஏலத்தின் முடிவுதான் இன்றைய வைரல். இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 18.5 லட்ச ரூபாய் ஆகும்.
ஆன்லைன் ஆக்ஷன் தொடங்கும்போது, 78 அமெரிக்க டாலர் மட்டுமே தொடக்கநிலை விலையாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. முதலில் 24 மணி நேரம் நடைபெறுவதாக ஏல நேரம் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், உலகெங்கிலும் இருந்து ஏலதாரர்கள் விருப்பம் காட்டியதால், 24 மணி நேரத்தை கடந்து ஏலம் தொடர்ந்தது.
2. The auction attracted 480 bidders and more than 165,000 views. The auction website didn’t say who the buyer was.
— BFM News (@NewsBFM) November 5, 2021
The male dog, named Deng Deng, was left by its owner at a pet school at the end of 2014. The owner, surnamed Xiao, paid the centre a one-year long fostering fee.
டெங் டெங் என பெயர் கொண்ட இந்த சீன நாய், கடந்த 2014-ம் ஆண்டு முதல் பராமரிப்பிற்கான உரிமையாளர் இன்றி வீடற்று இருந்திருக்கிறது. 2018-ம் ஆண்டு சீனாவைச் சேர்ந்த உள்ளூரு செய்தித்தாளில் வெளியான ஒரு செய்தியால், டெங் டெங் நாய் சீனாவில் பிரபலமானது.
இந்நிலையில், ஏழாண்டுகளுக்கு பிறகு பெரிய விலை மதிப்பில் இந்த நாய் ஏலம் சென்றிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆனால், ஆன்லைன் ஏலத்தை நடத்திய அலிபாபா நிறுவனம், நாயை ஏலத்தில் எடுத்த நபரின் விவரங்களை வெளியிடவில்லை.
6. The potential new owner, who doesn’t need to cover Xiao’s unpaid fees, must pick up the dog from the centre in Beijing.
— BFM News (@NewsBFM) November 5, 2021
The centre said it will visit Deng Deng in the future to check on him. pic.twitter.com/TepIuTXJCY
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

