China Covid: நாளுக்கு நாள் எகிறும் எண்ணிக்கை: ஒரேநாளில் 37மில்லியனை தாண்டிய கொரோனா பாதிப்பு! திண்டாடும் சீன அரசாங்கம்..
சீன அரசாங்கத்தின் சுகாதார ஆணையத்தின் மதிப்பீடுகளின்படி, ஒரே நாளில் சீனாவில் கிட்டத்தட்ட 37 மில்லியன் மக்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம், இது இதுவரை ஏற்பட்ட தொற்றில் இது மிகவும் அதீதமானது.
சீன அரசாங்கத்தின் உயர்மட்ட சுகாதார ஆணையத்தின் மதிப்பீடுகளின்படி, இந்த வாரம் ஒரே நாளில் சீனாவில் கிட்டத்தட்ட 37 மில்லியன் மக்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம், மேலும் இதுவரை ஏற்பட்ட தொற்றில் இது மிகவும் அதீதமானது.
சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் தரவுகளின்படி டிசம்பர் மாதம் முதல் 20 நாட்களில் 248 மில்லியன் மக்கள் அல்லது கிட்டத்தட்ட 18% மக்கள் வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெய்ஜிங்கின் சீரோ கோவிட் கட்டுப்பாடுகளை தளர்த்தியதியதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் மக்களிடையே தொற்று பரவல் அதிகரித்துள்ளது.
சீனாவின் தென்மேற்கில் உள்ள சிச்சுவான் மாகாணம் மற்றும் தலைநகர் பெய்ஜிங்கில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது. சீன சுகாதார அமைச்சகம் இந்த பாதிப்பை எவ்வாறு கணக்கிட்டது என்பது தெரியவில்லை. சீன அரசாங்கம் நாடு முழுவதும் இருக்கும் PCR சோதனைச் சாவடிகளை முடியது குறிப்பிடத்தக்கது. சீனாவில் உள்ள மக்கள் கொரோனா தொற்றை உறுதி செய்ய rapid antigen testing kit பயன்படுத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் பரிசோதனை முடிவுகளை கட்டாயம் தெரிவிக்க தேவையில்லை.
அறிகுறிகள் இல்லாத கொரோனா நோயாளிகளில் தினசரி எண்ணிக்கையை வெளியிடுவதை அரசாங்கம் நிறுத்தியுள்ளது. டேட்டா கன்சல்டன்சியான MetroDataTech இன் தலைமைப் பொருளாதார நிபுணர் சென் கின், ஆன்லைன் முக்கிய தேடல்களின் பகுப்பாய்வின் அடிப்படையில் பெரும்பாலான நகரங்களில் டிசம்பர் நடுப்பகுதியிலிருந்து ஜனவரி பிற்பகுதியில் சீனாவின் தற்போது இருக்கும் தொற்று பரவலைக் காட்டிலும் பல மடங்கு அதிகரித்து உச்சம் பெரும் என கணித்துள்ளார்.
ஷென்சென், ஷாங்காய் மற்றும் சோங்கிங் நகரங்களில் கட்டுப்பாடுகளை தளர்த்தியதால் தொற்று பரவல் அதிகரித்துள்ளது என கூறப்பட்டுள்ளது. கொரோனா தொற்று முதலில் பெய்ஜிங் நகரத்தில் பரவத்தொடங்கியது. ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் தன்மை குறைந்திருந்தால் கூட கொரோனா பரவும் விகிதம் அதிகமாக இருக்கிறது.
சீனாவில் இருக்கும் ஊரக பகுதிகளில் தொற்று பரவத் தொடங்கியுள்ளது. ஊரக பகுதிகளில் மருத்துவ வசதிகள் குறைவாக இருக்கும் நிலையில் அனைத்து பகுதியினரும் இந்த நோய் தொற்றை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது. டிசம்பர் மாதம் முதல் 20 நாட்களில் சுமார் 37 மில்லியன் மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஏற்பட்ட தொற்று அளவில் இது அதீதமானது. ஜனவரி 19,2022ல் 4 மில்லியன் நபர்கள் பாதிக்கப்பட்டு வரலாறு காணாத பதிப்பு பதிவானது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )