மேலும் அறிய

Child Labour | குழந்தை தொழிலாளர்களை அதிகரித்த கொரோனா; எச்சரிக்கை மணி அடிக்கும் யுனிசெஃப்!

கடந்த 20 ஆண்டுகளில் இப்போது குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யுனிசெஃப் கூறியுள்ளது

கொரோனா காலம் மக்களின் இயல்பு வாழ்க்கையை பெருமளவில் மாற்றியுள்ளது. தொற்று, மருத்துவமனை, உயிரிழப்புகள் என்ற நேரடி பிரச்னைகள் மட்டுமின்றி மறைமுகமாகவும் கொரோனா பல இடர்பாடுகளை உண்டாக்கியுள்ளது. கொரோனாவால் போடப்படும் ஊரடங்கு, அதனால் ஏற்படும் பொருளாதார சிக்கல்கள், வருடக்கணக்கில் பள்ளிகள் மூடிக்கிடப்பதும், அதனால் குழந்தை திருமணங்கள் அதிகரிப்பதும் என ஒரு சங்கிலித் தொடர்பாக கொரோனாவின் தாக்கம் தொடர்கிறது. அந்த வகையில் கொரோனாவால் தலைதூக்கியுள்ள மற்றொரு பிரச்னை குழந்தை தொழிலாளர்கள். 


Child Labour | குழந்தை தொழிலாளர்களை அதிகரித்த கொரோனா; எச்சரிக்கை மணி அடிக்கும் யுனிசெஃப்!

கொரோனா இல்லாத காலத்திலேயே குழந்தை தொழிலாளர்கள் உருவாகி வந்த நிலையில் கொரோனா காலம் அந்த பிரச்னைக்கு தீனி போட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இப்போது குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்துள்ளதாக யுனிசெஃப் கூறியுள்ளது. எல்லாம் கொரோனாவால் தான். 10 குழந்தைகளில் ஒரு குழந்தை , தொழிலாளராக இருப்பதாக இடியை இறக்குகிறது புள்ளி விவரம். 2016ம் ஆண்டு152 மில்லியனாக இருந்த குழந்தை தொழிலாளர்கள் இப்போது 160 மில்லியனாக அதிகரித்துள்ளனர். குறிப்பாக ஆப்ரிக்காவில் அதிகரிக்கும் மக்கள் தொகை, வறுமை போன்றவை அங்கு குழந்தை தொழிலாளர்களை அதிகம் உருவாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து வருத்தம் தெரிவித்துள்ள யுனிசெஃப்,  குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான போரில் களம் இறங்க வேண்டும். கொரொனா காலக்கட்டதால் ஊரடங்கு தொடர்கிறது. இதனால் ஏற்படும் பொருளாதார சிக்கல்களும், பள்ளிகள் மூடப்பட்டிருப்பதும் குழந்தைகளை வேலையை நோக்கி தள்ளுகின்றன. வேறு வழியின்றி குடும்பத்தினரே குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்கிறது.


Child Labour | குழந்தை தொழிலாளர்களை அதிகரித்த கொரோனா; எச்சரிக்கை மணி அடிக்கும் யுனிசெஃப்!

இதில் மேலும் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த கொரொனா காலத்து பொருளாதார சிக்கல்களை நிவர்த்தி செய்ய குழந்தைகள் அதிக நேரம் வேலை செய்கின்றனர். இதனால் அவர்களின் ஆரோக்கியம் விரைவில் பாதிக்கப்படும் என கவலை தெரிவிக்கிறது யூஎன். 5-11 வயதிலான குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் டேட்டா தெரிவிக்கிறது.

குழந்தை தொழிலாளர்கள் குறித்து பேசிய யுனிசெஃபின் நிர்வாகி ஒருவர், நாம் என்ன முடிவெடுக்கப் போகிறோம் என்ற முக்கியமான கட்டத்தில் நாம் இருக்கிறோம். குழந்தை தொழிலாளர் பிரச்னையை அடித்து நொறுக்க நாம் மிகுந்த ஆற்றலுடன் செயலாற்ற வேண்டிய நேரம் இது. ஒரு எச்சரிக்கை மணி நமக்கு அடிக்கப்பட்டுள்ளது. நாம் எதிர்த்து நிற்கவில்லை என்றால் எதிர்கால சந்ததி துயரத்தில் சிக்கிவிடும் என்றார்.


Child Labour | குழந்தை தொழிலாளர்களை அதிகரித்த கொரோனா; எச்சரிக்கை மணி அடிக்கும் யுனிசெஃப்!

குழந்தை தொழிலாளர்கள் போலவே குழந்தை திருமணமும் கொரோனா காலத்தில் அதிகரித்துள்ளது. குறிப்பாக பள்ளிகள் தொடர்ச்சியாக மூடப்பட்டிருப்பதும், பொருளாதார நெருக்கடியுமே குழந்தைகள் மீதான பிரச்னைகளுக்கு காரணமாகிறது. கொரோனா காலத்தில் செலவின்றி திருமணம் செய்துவிடலாம் என்ற திட்டமும் குழந்தை திருமணம் அதிகரிக்க காரணமாக கூறப்படுகிறது. குழந்தை தொழிலாளர், குழந்தை திருமணம் என கொரோனா மறைமுகமாக எதிர்கால சந்ததிகளின் வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றி வருகிறது.

ஒரே ஒரு வாந்தி... ஓவர் நைட்டில் கோடீஸ்வரனான மீனவர்கள்!

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
Embed widget