(Source: ECI/ABP News/ABP Majha)
Watch Video: கூடுதல் சாஸுக்கு காசு கேட்ட ஊழியர்கள்...கோபத்தில் ருத்ர தாண்டவம் ஆடிய பெண்கள்!
நியூயார்க் நகர உணவகம் ஒன்றில் கூடுதல் சாஸுக்கு 1.75 டாலர் வசூலித்ததால் மூன்று வாடிக்கையாளர்கள் சேர்ந்து அங்குள்ள ஊழியர்களை தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நியூயார்க் நகர உணவகம் ஒன்றில் கூடுதல் சாஸுக்கு 1.75 டாலர் வசூலித்ததால் மூன்று வாடிக்கையாளர்கள் சேர்ந்து அங்குள்ள ஊழியர்களை தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Just another typical day in NYC pic.twitter.com/vcnz2YQnp0
— Libs of TikTok (@libsoftiktok) July 6, 2022
இரும்பு நாற்காளி, கண்ணாடி பாட்டில்கள் என கைக்கு கிடைக்கூடிய எதையும் கொண்டு உணவக ஊழியர்களை மூன்று பெண்கள் சேர்ந்து தாக்கும் வீடியோ டிக்டாக்கில் பகிரப்பட்டுள்ளது.
அதில் இரண்டு பெண்கள் கவுண்டரின் மீது ஏறி, அருகாமையில் இருந்து சாஸ் பாட்டில்களை தூக்கி அடிப்பதையும் காணலாம். ஒரு கட்டத்தில், பெண்களில் ஒருவர் கவுண்டரில் நடனமாடுகிறார். மற்ற இருவரும் உணவகத்தின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துகின்றனர்.
இந்த சம்பவம் ஜூலை 4 அன்று மன்ஹாட்டனின் லோயர் ஈஸ்ட் சைடில் உள்ள பெல் ஃப்ரைஸில் நடந்துள்ளது. கொள்ளை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். உணவகத்தின் செஃப் ரஃபேல் நுனேஸ் இதுகுறித்து கூறுகையில், "மூன்று வாடிக்கையாளர்களும் ஃப்ரைஸுக்கு கூடுதல் சாஸ் வேண்டும் என்று கேட்டனர்.
இருப்பினும், அதன் விலை 1.75 டாலர் என்று ஊழியர் விளக்கியபோது, அவர்கள் கோபம் அடைந்தனர். அங்கு தான் பிரச்னை தொடங்கியது. குற்றம்சாட்டப்பட்டவர்கள், 27 வயதான பேர்ல் ஓசோரியா, 25 வயதான சித்தாரா பிளாசென்சியா மற்றும் 23 வயதான தட்டியன்னா ஜான்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மூன்று வாடிக்கையாளர்களும் உணவகத்தில் இருந்த கணினிகள், பணப் பதிவேடு மற்றும் பிற பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும் ஒரு தொழிலாளி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஓசோரியா கைது செய்யப்பட்டபோது போலீஸ் அதிகாரியின் முகத்தில் குத்தியதாகக் கூறப்படுகிறது. போலீஸ் அதிகாரியைத் தாக்குதல், கைது செய்யும்போது ஒத்துழைக்காததல், அரசு அலுவலர்களை வேலை செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் ஒழுங்கீனமான நடந்து கொண்டுதல் போன்ற பிரிவுகளின் கீழ் ஓசோரியா கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற இரண்டு பெண்கள் மீதும் ஆயுதம் வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உணவகத்தின் இணை உரிமையாளர் தனது ஆறு பணியாளர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்து உள்ளதாகவும் அவர்கள் வேலைக்குத் திரும்ப விரும்பவில்லை என்று கூறியுள்ளார். "அவர்கள் நொறுங்கிவிட்டனர். அச்சத்தில் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் இன்னும் வீட்டை விட்டு வெளியேற விரும்பவில்லை. அவருக்கு ஒரு மகன். அவர் உயிருக்கு பயப்படுகிறார்" என அவர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்