Watch Video | புது ஏரியா போறோம்.. படகு மூலம் வீட்டையே அலேக்காக மாற்றிய ஜோடி.. வீடியோ வைரல்..
கனடாவில் உள்ள ஒரு ஏரியாவில் இரண்டு அடுக்குமாடியில் வசித்து வந்துள்ளனர் டேனியலும், கிரேக்கும்.
புதிய வீடு மாற்றம் என்பதே அனைவருக்குமே தலைவலியான விஷயம். வீட்டு பொருட்களை மறுபடி பேக்கிங் செய்து புதிய இடத்துக்கு மாற்றம் செய்து அந்த வீட்டில் செட்டில் ஆவதற்குள் போதும் போதுமென ஆகிவிடும். ஆனால் ஒரே வீட்டில் வசிப்பதற்கு பலருக்கும் வாய்ப்பதில்லை. வேலை நிமித்தமாக பலரும் வீடு மாற வேண்டிய சூழல் உண்டாகிறது. ஆனால் கனடாவில் வீடு மாறவேண்டிய ஒரு சூழலில் ஒரு குடும்பம் வேற லெவல் ஐடியாவை கையில் எடுத்து வீட்டை மாற்றியுள்ளது. அந்த தம்பதிக்கு தன் வீட்டை மாற்றவும் விருப்பம் இல்லை. ஆனால் வீடு மாறவும் வேண்டும். இதனால் ஐடியா செய்த அந்த தம்பதி தன்னுடைய வீட்டையே வேறு ஏரியாவுக்கு மாற்றியுள்ளது. டேனியல் பென்னேவும் அவரது காதலரும் கிரேக்கும் இந்த அசாத்திய வேலையை செய்துள்ளனர்.
கனடாவில் உள்ள ஒரு ஏரியாவில் இரண்டு அடுக்குமாடியில் வசித்து வந்துள்ளனர் டேனியலும், கிரேக்கும். அவர்களுக்கு வேறு ஏரியாவில் சென்று தங்க வேண்டுமென விருப்பம். அதனால் முடிவு செய்த அந்த தம்பதி தன்னுடைய வீட்டையே அங்கு எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளன. தரை வழியாக வீட்டை நகர்த்தி செல்வது ஆகாத காரியம் என்பதால் தன் வீட்டில் அருகேயுள்ள நதியை அவர்கள் பயன்படுத்த திட்டமிட்டனர். வீட்டை முற்றிலும் பெயர்த்து எடுத்து மிதக்கும் டயர்களின் மூலம் தண்ணீரில் நிலைநிறுத்தினர். பின்னர் படகுகள் இழுக்க, 3 படகுகள் தள்ள வீட்டை மெல்ல மெல்ல தண்ணீரில் நகர்த்தி கொண்டு சென்றுள்ளனர்.
இது குறித்து ஆச்சரியமாக பேசிய டேனியல், வீட்டை கையோடு கொண்டு செல்ல திட்டமிட்டோம். இது குறித்து நண்பர்களுடனும், உறவினர்களுடனும் பேசினோம். அப்போது அந்த வீடு மீது நான் கொண்ட காதலை அவர்கள் தெரிந்துகொண்டார்கள். இந்த வீட்டை நகர்த்திச் செல்ல 8 மணி நேரம் ஆனது. வீட்டை நகர்த்திச் செல்லும் போது ஒரு படகு உடைந்துவிட்டது. இது பெரிய பதட்டத்தை உண்டாக்கிவிட்டது. எப்படியோ சமாளித்து சென்றுவிட்டோம். இது நிஜமா என்பதை என்னால் இன்னமும் நம்ப முடியவில்லை. ஆனால் நாங்கள் செய்துகாட்டியுள்ளோம். நாங்கள் ஒரு வரலாறையே உருவாக்கியுள்ளோம் என்றார்.
வீடு மாறியபோது தன் வீட்டைடையே கையோடு அழைத்துச் சென்ற தம்பதிக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்