மேலும் அறிய

இலங்கைக்கு வரும் அதிநவீன சீன கப்பல்...இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா? முழு விவரம்..

சீன நாட்டின் ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு கப்பல் ஒன்று, இலங்கையில் சீனாவால் பராமரிக்கப்பட்டு வரும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு ஆகஸ்ட் 11ஆம் தேதி வரவுள்ளது.

சீன நாட்டின் ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு கப்பல் ஒன்று, இலங்கையில் சீனாவால் பராமரிக்கப்பட்டு வரும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு ஆகஸ்ட் 11ஆம் தேதி வரவுள்ளது. இது இந்திய நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை தரும் என இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. இச்சூழலில், நிலைமை கண்காணித்து வருவதாக இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படியான சூழலில், இந்த விவகாரம் பற்றிய முக்கியமான தகவல்களை கீழே காண்போம்

  • சீன கப்பல் இலங்கைக்கு வரவிருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் படைத்தலைவர் நளின் ஹேரத், "இந்த கப்பல் ராணுவத்தை கண்காணிக்கும் திறன் கொண்டிருப்பதால் இந்தியாவின் கவலையை இலங்கை புரிந்து கொண்டுள்ளது. 
    ஆனால் இது ஒரு வழக்கமான பயிற்சியே.
  • இந்தியா, சீனா, ரஷியா, ஜப்பான் மற்றும் மலேசியா நாடுகளின் கடற்படை கப்பல்களை இலங்கையில் நிறுத்த அவ்வப்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோலதான், சீனாவுக்கு அனுமதி வழங்கியுள்ளோம். அணு ஆயுதம் தாங்கும் திறன் கொண்ட கப்பல் நம் வழிக்கு வந்தால் மட்டுமே அணுமதி மறுக்க முடியும். இது அணு ஆயுதம் தாங்கும் வகையிலான கப்பல் அல்ல.
  • இந்தியப் பெருங்கடலில் கண்காணிப்பு மற்றும் வழிசெலுத்தலுக்காக கப்பலை அனுப்புவதாக சீனா இலங்கையிடம் முன்னதாக தெரிவித்திருந்தது" என்றார்.
  • யுவான் வாங் 5 என்ற சீனக் கப்பலானது, தேவையான பொருள்களை நிரப்புவதற்கு இலங்கையிடம் அனுமதி கோரியுள்ளது. ஆகஸ்ட் 11 முதல் 17 வரை, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இந்த கப்பல் நிறுத்தப்படவுள்ளது.
  • குறிப்பிட்ட அந்த சீனக் கப்பல் மிகவும் திறன் வாய்ந்த, அதிநவீன உதிரிபாகங்களைக் கொண்ட மேம்பட்ட கடற்படைக் கப்பல்  என இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
  • 2014ஆம் ஆண்டு இரண்டு சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்தபோதும் இதேபோன்றதொரு நிலை ஏற்பட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது சீனா, நீர்மூழ்கிக் கப்பலை அனுப்பியதைக் கூட, இலங்கைக்கு, குறிப்பாக இந்தியாவுக்கு தெரிவிக்கவில்லை. அதன்பிறகு, இலங்கைத் துறைமுகங்களுக்கு சீன நீர்மூழ்கிக் கப்பல் பயணம் எதுவும் நடைபெறவில்லை.
  • சீன கப்பல் விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள இந்திய தரப்பு, "இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் எந்த ஒரு செயலையும் உன்னிப்பாகக் கண்காணித்து, அவற்றைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்" என தெரிவித்துள்ளது.
  • 1.4 பில்லியன் டாலர் மதிப்புள்ள அம்பாந்தோட்டை துறைமுகம் உள்பட உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக சீனாவிற்கு பெரும் தொகையை இலங்கை செலுத்த வேண்டியுள்ளது. இச்சூழலில், இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவது குறித்து இந்தியா சந்தேகித்து வருகிறது.
  • கொடுத்த கடனை திருப்பி செலுத்த முடியாததால், கிழக்கு-மேற்கு சர்வதேச கப்பல் பாதையில் அமைந்துள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு சீன நிறுவனத்திற்கு இலங்கை 2017 இல் வழங்கியது. ஏப்ரல் மாதத்தில் 51 பில்லியன் டாலர் வெளிநாட்டுக் கடனை இலங்கையால் செலுத்து முடியவில்லை. இதையடுத்து, உதவியை நாடும் வகையில் சர்வதேச நிதியத்திடம் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

US New Immigration Bill: அமெரிக்காவில் ‘க்ரீன் கார்டுக்கு க்ரீன் சிக்னல்‘; லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு குட் நியூஸ்; புதிய மசோதா
அமெரிக்காவில் ‘க்ரீன் கார்டுக்கு க்ரீன் சிக்னல்‘; லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு குட் நியூஸ்; புதிய மசோதா
Iran Vs Trump: ''நாங்க பேசனும்னு சொன்னோமா.? அவர் தானாவே போர நிறுத்திட்டார்''; ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்
''நாங்க பேசனும்னு சொன்னோமா.? அவர் தானாவே போர நிறுத்திட்டார்''; ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்
Crime News: 5 வயது சிறுவனின் பிறப்புறுப்பில் சூடு வைத்த ஆசிரியை - காரணம் என்ன? கொதித்து எழுந்த பெற்றோர்
5 வயது சிறுவனின் பிறப்புறுப்பில் சூடு வைத்த ஆசிரியை - காரணம் என்ன? கொதித்து எழுந்த பெற்றோர்
US Iran War: “நிறுத்தி இருக்கோம், ஆனா நிறுத்தல“ ஈரான் மீதான தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகை முக்கிய அறிக்கை
“நிறுத்தி இருக்கோம், ஆனா நிறுத்தல“ ஈரான் மீதான தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகை முக்கிய அறிக்கை

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
RB Udhayakumar: ”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
TN Weather News: சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
அடி தூள்.! மகளீருக்கு கொட்டப்போகுது பணம்.! 7,000 கோடியை கடன் உதவியாக அள்ளிக்கொடுக்கும் சிஎம் விஜய்
அடி தூள்.! மகளீருக்கு கொட்டப்போகுது பணம்.! 7,000 கோடியை கடன் உதவியாக அள்ளிக்கொடுக்கும் சிஎம் விஜய்
Honda QC3 Scooter Vs Rivals: ஹோண்டா QC3 மின்சார ஸ்கூட்டரின் போட்டியாளர்கள் எப்படி? விலை, பேட்டரி, ரேஞ்ச், வசதி - முழு ஒப்பீடு
ஹோண்டா QC3 மின்சார ஸ்கூட்டரின் போட்டியாளர்கள் எப்படி? விலை, பேட்டரி, ரேஞ்ச், வசதி - முழு ஒப்பீடு
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Embed widget