’மழைச்சாரல் மாதிரி தங்கத்தைத் தூவி...’ - இது விலையுயர்ந்த ஃபிரெஞ்சு ஃப்ரைஸ் உருவான கதை!
உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த ஃபிரஞ்சு ஃபிரைஸ் ஒன்றை அமெரிக்க ஓட்டல் ஒன்று சமைத்துள்ளது.
மழை நேரத்தில் நமக்கு அதிமாக நினைவிற்கு வருவது இதமான தேநீர் மற்றும் அத்துடன் ருசித்து சாப்பிட ஒரு பஜ்ஜி அல்லது போண்டா. வீட்டின் பால்கனியில் ஒரு கையில் தேநீர் மற்றொரு கையில் சூடான பஜ்ஜி பின்னணியில் ஒரு இளையராஜா சாரின் பாடல்...அடடா! ஆஹா...ஒஹோ...நினைத்து பார்த்தாலே அது ஒரு இன்ப அனுபவம்தான், இதைப்படிக்கும் போதே சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் வருதா..? அப்போ ஒரு டீ குடிச்சிட்டு இதையும் தெரிஞ்சுக்கோங்க.
உங்களை மாதிரி மழை நேரத்தில் ஸ்நாக்ஸ் சாப்பிட விரும்புவர்களுக்கு அமெரிக்காவில் ஒரு புதிய ஸ்நாக்ஸ் கண்டுபிடிச்சிருக்காங்க. அது என்னன்னு தான கேட்கிறீங்க. அது ஃபிரஞ்சு ஃபிரைஸ்தான். இதுல என்னப்பா புதுச? வழக்கமா சாப்பிடறதுதான என்று நினைக்கிறீர்களா? இந்த இடத்தில்தான் உங்களுக்கு பெரிய ட்விஸ்ட். இப்போ சொல்ற ஃபிரஞ்சு ஃபிரைஸுக்கு ஒரு சிறப்பு இருக்கு. அது என்னவென்றால் இதுதான் உலகிலேயே மிகவும் அதிகமான விலை மதிப்பு கொண்ட ஃபிரஞ்சு ஃபிரைஸ். இதன் விலை 200 அமெரிக்க டாலர். இந்திய மதிப்பில் இதன் மதிப்பு சுமார் 14,922 ரூபாய் மட்டுமே. ’உருளைக்கிழங்கு சிப்ஸூ அவ்வளவு ரூவாய்க்கா?’ என நீங்கள் வாய்பிளந்து பார்ப்பது புரிகிறது..
View this post on Instagram
இவ்வளவு காசு இந்த சாதாரண ஃபிரஞ்சு ஃபிரைஸுக்கு எதுக்குனுதான அடுத்த கேள்வி கேட்பீங்க. அதுவும் இதை தயாரிச்ச ஓட்டல் ஒரு பெரிய ட்விஸ்டை வச்சிருக்கு. இந்த உணவு என்னமோ வழக்கம் போல உருளைக்கிழங்கை வைத்துத்தான் செய்யப்பட்டது. ஆனால் அந்த உருளைக்கிழங்கு ஃபிரஞ்சு ஃபிரைஸ் ஆக வறுத்து எடுப்பதற்கு முன்பாக செஞ்சதுதான் பெரிய ஹைலைட். இந்த சிப்பர் பெக் உருளை கிழங்கை(Chipperbeck potatoes) விலை அதிகமான டாம் பெரிகான் ஷாம்பெய்ன் மற்றும் லெட்பிளாங் ஃபிரஞ்சு ஷாம்பெய்ன் (Dom Perignon Champagne and J. LeBlanc French Champagne ) ஆகியவற்றில் ஊர வைத்து பின்னர் வினிகர் சேர்த்து வறுத்து எடுக்கப்பட்டுள்ளது. இறுதியாக 23k தங்கத்துகள்கள் தூவப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக தன் இந்த ஃபிரஞ்சு ஃபிரைஸிற்கு இவ்வளவு அதிகமாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram
அமெரிக்காவில் உள்ள ஒரு தனியார் ஓட்டல் ஒன்றில் இது தயாரிக்கப்பட்டது. இதை கின்னஸ் சாதனை அமைப்பு அங்கீகரித்துள்ளது. அத்துடன் இதுதான் உலகிலேயே மிகவும் அதிக விலை மதிப்பை கொண்ட ஃபிரஞ்சு ஃபிரைஸ் என்ற கின்னஸ் சாதனை அங்கீகாரத்தையும் வழங்கியுள்ளது. என்னல்லாம் கண்டுபிடிக்கறாங்க பாருங்க!