மேலும் அறிய

America Quits WHO: உலக சுகாதார அமைப்புக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; பல மில்லியன் டாலர்கள் உதவி கட்; காரணம் என்ன.?

உலக சுகாதார அமைப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது அமெரிக்கா. இதனால், அந்த அமைப்பிற்கு கிடைத்துவந்த பல மில்லியன் டாலர்கள் உதவியை அது இழந்துள்ளது. ட்ரம்ப் வில காரணம் என்ன.?

உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவதாக ஓராண்டுக்கு முன்னரே ட்ரம்ப் அறிவித்திருந்த நிலையில், தற்போது அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அந்த அமைப்பிலிருந்து விலகியுள்ளது. இதனால், பல மில்லியன் டாலர்கள் உதவியை உலக சுகாதார அமைப்பு இழந்துள்ளது. ட்ரம்ப்பின் இந்த முடிவிற்கு காரணம் என்ன.? பார்க்கலாம்.

உலக சுகாதார அமைப்பு மீது குற்றம்சாட்டிய ட்ரம்ப்

கொரோனா பெருந்தொற்று காலத்திலேயே, உலக சுகாதார அமைப்பு சீனாவிற்கு ஆதரவாக செயல்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டினார். அதோடு நிறுத்தாமல், கடந்த ஆண்டே அந்த அமைப்பிலிருந்து விலகுவதற்கான நிர்வாக உத்தரவில் அவர் கையெழுத்திட்டார். இந்நிலையில், ஒரு வருடத்திற்கு பிறகு, தற்போது அந்த விலகல் நடைமுறைக்கு வந்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு, கொரோனா பெருந்தொற்றை கையாண்ட விதம் தவறானது என்றும், தன்னைத்தானே சீர்திருத்திக்கொள்ளும் திறன் அந்த அமைப்பிற்கு இல்லை என்று குற்றம்சாட்டப்பட்டது. மேலும், அதன் உறுப்பு நாடுகளின் அரசியல் செல்வாக்கிற்கு அது கட்டுப்பட்டுள்ளது என்றும் கூறி, அதிலிருந்து விலகும் முடிவை எடுத்ததாக, அமெரிக்க சுகாதார மற்றும் மனித சேவைகள் துறை தெரிவித்துள்ளது. 

உலக சுகாதார அமைப்பு கூறுவது என்ன.?

அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டுகளை, உலக சுகாதார அமைப்பு மறுத்துள்ளது. அதோடு, இந்த விலகல் அமெரிக்காவிற்கும், உலகிற்கும் ஒரு இழப்பு என்றும் அந்த அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, பாரம்பரியமாக உலக சுகாதார அமைப்பின் மிகப்பெரிய நன்கொடையாளர்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால், 2024 மற்றும் 2025-ம் ஆண்டுகளுக்கான தனது கட்டணத்தை அமெரிக்கா செலுத்தவில்லை என்றும், இது ஏற்கனவே அந்த நிறுவனத்தில் பெரும் வேலை இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறப்படுகிறது.

பெரும் உதவித் தொகையை இழந்த WHO

உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகியதன் மூலம், பல மில்லியன் டாலர்கள் உதவியை அந்த அமைப்பு இழந்துள்ளது. மேலும், ஏற்கனவே அமெரிக்கா செலுத்த வேண்டிய தொகையும் நிலுவையில் உள்ளது. இது குறித்து பேசியுள்ள அந்த அமைப்பின் வழக்கறிஞர்கள், அமெரிக்கா நிலுவைத் தொகையை செலுத்த கடமைப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும், அவ்வாறு செய்ய எந்தக் காரணத்தையும் தாங்கள் காணவில்லை என்று அமெரிக்கா கூறியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் கதவலின்படி, அமெரிக்கா, அந்த அமைப்பிற்கு 130 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை செலுத்த வேண்டியுள்ளது.

மேலும், இந்த விலகலின் மூலம், ஒரு புதிய தொற்றுநோய் குறித்து அமெரிக்காவிற்கு முன்கூட்டியே எச்சரிக்கை அளிக்கக்கூடிய பிற நாடுகளின் தரவுகளுக்கான அணுகல் தடுக்கப்படும். புதிய நோய் தொற்றுக்களுக்கு எதிராக தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை உருவாக்குவதற்கு அமெரிக்க விஞ்ஞானிகளின் திறனை முடக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

தலைப்பு செய்திகள்

Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
லேட்டா வந்தா அவ்ளோதான்! ஊழியரை வேலையை விட்டு தூக்கிய AI மேனேஜர்... உச்சக்கட்ட பரபரப்பு!
லேட்டா வந்தா அவ்ளோதான்! ஊழியரை வேலையை விட்டு தூக்கிய AI மேனேஜர்... உச்சக்கட்ட பரபரப்பு!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
Trump on Hormuz: ''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
BMW X1 LWB Petrol Review: பிஎம்டபிள்யூ X1 LWB பெட்ரோல் SUV எப்படி இருக்கு.? பணத்துக்கு ஏற்ற மதிப்புள்ள சொகுசுக் காரா.? ரிவ்யூவ்
பிஎம்டபிள்யூ X1 LWB பெட்ரோல் SUV எப்படி இருக்கு.? பணத்துக்கு ஏற்ற மதிப்புள்ள சொகுசுக் காரா.? ரிவ்யூவ்
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Embed widget