பணிப்பெண்ணை படுக்கைக்கு அழைத்த பயணி: நடுவானில் விமானத்தின் கதவை திறந்து அட்டூழியம்! என்ன நடந்தது?
அமெரிக்காவில் நடுவானில் பறந்த விமானத்தின் கதவை பயணி ஒருவர் திறக்க முயற்சித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவில் அமைந்துள்ளது சியாட்டில். சியாட்டி நகரத்தில் இருந்து டாலஸ் நகரத்திற்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த நாட்டில் இயங்கி வரும் அமெரிக்கன் ஏர்லைன்சின் விமானம் ஒன்று சியாட்டில் இருந்து டாலசுக்கு பறந்த்து.
உடலுறவுக்கு அழைத்த பயணி:
இந்த விமானத்தில் 26 வயதான எரிக் நிகோலஸ் காப்கோ என்ற இளைஞரும் பயணித்தார். அவர் நியூ ஜெர்சியை சேர்ந்தவர். விமானத்தில் ஏறியது முதலே காப்கோ விமான பணிப்பெண் ஒருவரிடம் தகாத வார்த்தைகளில் பேசி வந்துள்ளார். மேலும், அந்த பெண்ணிடம் உடலுறவு கொள்ள வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து காப்கோ அந்த பெண்ணை வலியுறுத்தி வர, அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென காப்கோ எழுந்து, விமானத்தின் கதவை திறக்க முயற்சித்தார். பல முறை அவர் இவ்வாறு விமானத்தின் கதவை திறக்க முயற்சித்ததை பார்த்த சக பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். அவரை அவர்கள் சமாதானப்படுத்த முயற்சித்தனர்.
போதை:
மேலும், விமானத்தில் இருந்தபோது தனது சட்டையை கழற்றி அவர்கள் மீது வீசினார். மேலும், விமானத்தில் இருந்த விமான ஊழியர் ஒருவரையும் தாக்கினார். இதையடுத்து, காப்கோவின் கை மற்றும் கால்களை கட்டி அமர வைத்தனர். இதையடுத்து, விமானம் அவசரம், அவசரமாக சால்ட் லேக் சிட்டியில் தரையிறக்கப்பட்டது. இதையடுத்து, போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு காப்கோவை கைது செய்தனர்.
போலீசார் காப்கோவை கைது செய்து விசாரணை நடத்தியபோது காப்கோ விமான பயணத்திற்கு முன் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது தெரியவந்தது. இதன் காரணமாகவே அவர் இவ்வாறு நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
பெரும் பரபரப்பு:
நடுவானில் பயணிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக நடந்து கொண்டது, பெண்ணிடம் அவதூறாக நடந்து கொண்டது உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வரும் வியாழக்கிழமை அவர் மீதான வழக்கு விசாரணைக்கு வருகிறது.
நடுவானில் விமானப் பணிப்பெண்ணை உடலுறவுக்கு அழைத்ததுடன், பயணிகளின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக விமானத்தின் கதவை திறக்க முடிவு செய்திருப்பதும் பெரும் பரபரப்பை அங்கு ஏற்படுத்தியுள்ளது.