(Source: ECI/ABP News/ABP Majha)
Turkey Earthquake: அதிகாலையில் நடந்த துயரம்.. துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 500-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு.. மீட்பு பணிகள் தீவிரம்..
துருக்கியில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பல நாடுகளில் உணரப்பட்டது. இஸ்ரேல் மற்றும் லெபனான் வரை இந்த நடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
துருக்கியில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பல நாடுகளில் உணரப்பட்டது. இஸ்ரேல் மற்றும் லெபனான் வரை இந்த நடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
A Massive 7.8 Magnitude Earthquake has struck Central Turkey within the last hour, Severe Damage and multiple Casualties are being reported across the Region. pic.twitter.com/qILgKNAHMK
— OSINTdefender (@sentdefender) February 6, 2023
இன்று அதிகாலை மத்திய துருக்கியில் ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்று ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகி நகருக்கு கிழக்கே 26 கி.மீ தொலைவில் 17.9 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Spinney’s Supermarket in Beirut after tonight’s earthquake #Lebanon #Turkey pic.twitter.com/AMnJo7dkRH
— Firas Maksad (@FirasMaksad) February 6, 2023
இதில் பலியானோரின் எண்ணிக்கை காலை 9 மணி நிலவரப்படி 15 பேர் என தெரிவிக்கப்பட்டது. சேதம் மற்றும் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் எனவும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டூள்ளது. சமூக ஊடகங்களில் பதிவுகள் மற்றும் வீடியோக்கள் பல உயிரிழப்புகள் இருப்பதை சுட்டிக்காட்டுகின்றன.
آثار الدمار الذي خلفه الزلزال في #تركيا#earthquake #turkey pic.twitter.com/rvpNBXL5JU
— Sahar®️AlAtrash سَحَرْ (@SahaR_bei) February 6, 2023
நிலநடுக்கம் அல்லது பூகம்பம் என்பது பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகி அதனால் சக்தி வெளியேற்றப்படும்போது, தளத்தட்டுகள் நகர்வதனால் இடம்பெறும் அதிர்வைக் குறிக்கும். இதனை டெக்டோனிக் தட்டுகள் என்று கூறலாம். அதிர்வுகள் 3 ரிக்டருக்கும் குறைவாக இருந்தால் நிலநடுக்கங்களை உணர்வது கடினமாகும். லேசான நிலநடுக்கம் ஏற்படும். அதேவேளை 7 ரிக்டருக்கும் கூடுதலான அதிர்வுகள் பதிவாகியிருந்தால் அது பூமியில் பலத்த சேதம் மற்றும் சுனாமியை ஏற்படுத்தும்.
டெக்டோனிக் தட்டுகள் தொடர்ந்து மெதுவாக நகரும் போது அவை உராய்வு காரணமாக அவற்றின் விளிம்புகளில் சிக்கிக்கொள்ளும். விளிம்பில் உள்ள அழுத்தம் உராய்வைக் கடக்கும்போது, அது பூகம்பத்தை விளைவிக்கும். அத்தகைய எதிர்வினை அலைகளின் வடிவத்தில் ஆற்றலை வெளியிடுகிறது. இது இறுதியில் பூமியின் மேற்பரப்பான நிலப்பரப்பை உலுக்குகிறது. இந்த பூகம்பம் சம அளவிலான ஒரே மூலத்தால் உருவாக்கப்பட்டு பூமிக்குள்ளேயே அல்லது அதன் மேற்பரப்பில் பரப்பப்படுவதால் அவை நில அதிர்வு அலைகள் என்றும் அழைக்கப்படுகின்றன.