Weambreiche Viral Video: மாட்டு மூளையை பச்சையா சாப்டுவேன்! தண்ணிக்கு பதிலா முட்டை காபி! ஃபிட்னஸ் ஆர்வலரின் அடடே லிஸ்ட்!
உடற்பயிற்சி ஆர்வலாரான வீம் பிரிச்சே பச்சை மாட்டின் இறைச்சி மற்றும் முட்டைகளை சாப்பிடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உடற்பயிற்சி மீது தீவிர ஆர்வம் கொண்ட வீம் பிரிச்சே (Weambreiche) தீவிரமாக உடற்பயிற்சி செய்வதோடு, அதற்காக தான் எடுத்துக்கொள்ளும் புரோட்டீன் நிறைந்த அசைவ உணவுகளை அப்படியே சமைக்காமலே சாப்பிட்டு வருகிறார்.
View this post on Instagram
தொடர்ந்து இதை செய்து வரும் அவர் தனது இன்ஸ்டாகிராம், டிக்டாக் பக்கங்களில் இது தொடர்பான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்வது வழக்கம். அவரது பாலோயர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் வீடியோக்களில் சில, அவ்வப்போது சமூகவலைதளங்களில் வைரலாவது உண்டு. அப்படி அண்மையில் வீம் பிரிச்சே வெளியிட்டு இருக்கும் ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
அந்த வீடியோவில் பேசும் வீம் பிரிச்சே, “காலை வேளையில் உங்களுக்கு சமைக்க நேரமில்லாத போது, அதிக புரோட்டீன் கொண்ட உணவுகளை எப்படி உண்பது என்று உங்களுக்கு சொல்லிக்கொடுக்கிறேன் என்றவர் சமைக்கப்படாத மாட்டு மூளையை ஒரு கடி கடித்தவர், இந்தப்பக்கம் க்ளாசில் உடைத்து வைத்திருந்த 6 முட்டைகள் கலந்த கலவையை காபியை போல எடுத்து குடிக்கிறார். கடந்த மார்ச் 14 ஆம் தேதி டிக்டாக் வீடியோவாக பதிவிடப்பட்ட இந்த வீடியோவை 1 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
இது குறித்து உணவியல் நிபுணர் ஒருவர் கூறும் போது, பச்சையாக இறைச்சியை உண்ணும் போது அது ஃபுட் பாய்சன் ஆக வாய்ப்பு இருக்கிறது என்றும் பச்சை இறைச்சியில் புழுக்கள் போன்ற ஒட்டுண்ணிகள் இருக்கலாம் என்றும் கூறியிருக்கிறார்.