வங்கதேசம் - பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட தம்பதி.. மகனுக்கு இந்தியா என பெயர் சூட்டி அசத்தல்
பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை பூர்வீகமாக கொண்ட தம்பதியினர் தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு செல்லமாக ’இந்தியா’ என பெயரிட்டுள்ளனர்.
பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை பூர்விகமாக கொண்ட தம்பதியினர் தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு செல்லமாக ’இந்தியா’ என பெயரிட்டுள்ளனர். தற்போது இந்த செய்தி அனைவரது மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் ஒமர் இசா. இவர் அந்நாட்டில் பாடகராக மிகவும் பிரபலம். இவரது மனைவி பேகம் வங்கதேசத்தை பூர்வீகமாக கொண்டவர். இந்தநிலையில், தங்களது குழந்தைக்கு இந்தியா என செல்லமாக பெயரிட்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், புதிய பெற்றோர் அனைவருக்கும் என்னுடைய எச்சரிக்கை. எங்களது குழந்தை இப்ராஹிம் பிறந்தவுடன் அவனை எங்கள் அறையிலேயே படுக்க வைத்துக் கொண்டோம். புதிதாக பெற்றோரான எங்களுக்கு அவன் பாதுகாப்பு குறித்து அதீத அக்கறை இருந்தது. இப்ராஹிம் வளர்ந்த பிறகும் கூட எங்கள் அறையிலேயே படுத்து உறங்குகிறான். அவனுக்கென தனி அறை இருந்தாலும் கூட எங்கள் அறையையே தூங்குவதற்கு பயன்படுத்திக் கொள்கிறான்.
நான் பாகிஸ்தானிய வம்சாவளி மற்றும் எனது மனைவி பங்களாதேஷை பூர்வீகமாகக் கொண்டதால், நாங்கள் இப்ராஹிமுக்கு புதிய பெயரை வைத்துள்ளோம், நாங்கள் அவரை இப்போது இந்தியா என்று அழைக்கிறோம் 'இந்தியா' எனது வாழ்க்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது” என்று தனது பதிவில் நகைச்சுவையாக குறிப்பிட்டு இருந்தார். தற்போது இந்த பதிவு வேகமாக வைரலாகி வருகிறது.