உலக பத்திரிக்கை புகைப்பட விருதுகள் அறிவிப்பு
உலக பத்திரக்கை அமைப்பான World Press Photo, 2021 ஆண்டின் சிறந்த புகைப்படமாக, 85 வயது நிரம்பிய பிரேசிலிய மூதாட்டி தன்னை ஐந்து மாதங்களாக கவனித்த செவிலியரை அரவணைக்கும் புகைப்படத்தை தேர்வு செய்துள்ளது.
'முதல் அரவணைப்பு' எனும் தலைப்பிடப்பட்ட இந்த புகைப்படத்தை, டேனிஷ் புகைப்படக் கலைஞர் மேட்ஸ் நிசென் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை நெருங்குகிறது. கொரோனா நோய்த் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள சமூக விலகல் விதிமுறைகள் மற்றும் வீட்டைவிட்டு வெளியில் காலடி எடுத்து வைக்கும் போது முகக்கவசம் அணிவது போன்ற நடைமுறைகளை பின்பற்றுவது முக்கியமானதாக உள்ளது. இயல்பு வாழ்க்கை முழுவதுமாக மறக்கப்கடிக்கப்பட்டது. இதனால், மக்கள் தங்களுக்கான இணக்கத்தை தொலைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். இந்த இக்கட்டான வாழ்க்கையை எடுத்துரைக்கும் விதமாக உலக பத்திரக்கை அமைப்பு இந்தாண்டுக்கான சிறந்த புகைப்படத்தை தேர்வு செய்துள்ளது.
உலக முழுவதும் உள்ள கோடிக்கணக்கான முனகல பணியாளர்கள் தங்கள் உயிரைக் கொடுத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.