Las Vegas Gun Shot: காலையிலேயே சோகம்.. அமெரிக்காவில் 5 பேர் சுட்டுக் கொலை - தற்கொலை செய்து கொண்ட கொலையாளி..!
Las Vegas Gun Shot: அமெரிக்காவில் பொதுமக்கள் மத்தியில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், தற்கொலை செய்துகொண்டதாக காவல்துற தெரிவித்துள்ளது.
Las Vegas Gun Shot: அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 5 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
5 பேர் சுட்டுக் கொலை:
வடக்கு லாஸ் வேகாஸில் உள்ள இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளில் இந்த தககுதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. போலீசார் இரவு முழுவதும் துப்பாக்கிச் சூடு நடத்தியவரைத் தேடி கண்டுபிடித்த நிலையில், கைது நடவடிக்கைக்கு முன்பாகவே அவர் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு குடியிருப்புகளில் தாக்குதல்..!
காசா நோர்டே டிரைவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் சம்பவ இடத்தை அடைந்ததும், 40 வயதை கடந்த ஒரு பெண்ணும், 50 வயதை கடந்த மற்றொரு பெண்ணுன் குண்டடி காயங்களுடன் மீட்கப்பட்டனர். ஆனால், அவர்கள் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் அருகிலுள்ள மற்றொரு அடுக்குமாடி வளாகத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்பட்டனர். 20 வயதுக்கு இடைப்பட்ட இரண்டு பெண்கள் மற்றும் 20 வயதை கடந்த ஒரு ஆண் என மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். ஐந்து பேர் இறந்த நிலையில், துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13 வயது சிறுமி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கொலையாளி தற்கொலை:
இதையடுத்து துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை தேடும் பணியை போலீசார் முடுக்கி விட்டனர். கிடைத்த ஆதாரங்களின்படி, எரிக் ஆடம்ஸ் (47) வயது) என்பவர் தான் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. அவர் ஆடம்ஸ் ஈஸ்ட் லேக் மீட் பவுல்வார்டில் உள்ள ஒரு உள்ளூர் வணிக தளத்தில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் அந்த இடத்தை அடைந்ததும், எரிக் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார். துப்பாக்கியை கீழே போட்டுவிட்டு சரணடையும்படி போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், அதை கேட்காமல் எரிக் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அவர் எதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தினார் என்பதற்கான தகவல் இதுவரை வெளியாகவில்லை. அதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
அதிகரிக்கும் துப்பாக்கிச் சூடு:
கடந்த சில ஆண்டுகளாகவே குறிப்பாக அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. ஏறக்குறைய ஒவ்வொரு நாளும், சாலைகளிலும், மளிகைக் கடைகளிலும் மற்றும் வெளியேயும் அப்பாவி மக்கள் மற்றும் பள்ளிகளில் குழந்தைகள் மத்தியில் கூட துப்பாக்கிச் சூடு சம்பவங்களால் உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகின்றன. அதற்கு சட்டவிரோத துப்பாக்கி விற்பனையும் ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. அண்மையில் அதிபர் பைடனின் மகனும், சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கிய வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.