Forbes List : அமெரிக்காவில் கொடிகட்டி பறக்கும் இந்திய பெண் தொழிலதிபர்கள்.. ஃபோர்ப்ஸ் வெளியிட்ட பட்டியல்..
ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள சுயமாக உருவான அமெரிக்க பெண் தொழிலதிபர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜெயஸ்ரீ உல்லால் 15வது இடம் பிடித்துள்ளார்.
ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள சுயமாக உருவான அமெரிக்க பெண் தொழிலதிபர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜெயஸ்ரீ உல்லால் 15வது இடம் பிடித்துள்ளார்.
முதலிடம் பிடித்த ஜெயஸ்ரீ உல்லால்:
உலகப் புகழ்பெற்ற ஃபோர்ப்ஸ் நிறுவனமானது தொழிலதிபர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பல பிரிவுகளில் பட்டியலை வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் ஃபோர்ப்ஸ் நிறுவனம் சுயமாக உருவான அமெரிக்க பெண் தொழிலதிபர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 5 பெண் தொழிலதிபர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் ஜெயஸ்ரீ உல்லால் 1.9 பில்லியன் டாலர்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அமெரிக்காவில் இயங்கிவரும் அரிஸ்டா கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங் நிறுவனத்தின் சிஇஓ மற்றும் தலைவராக கடந்த 2008ம் ஆண்டு முதல் ஜெயஸ்ரீ உல்லால் இருந்து வருகிறார். 61 வயதான ஜெயஸ்ரீ உல்லால் அரிஸ்டா நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை வைத்துள்ளார். சில பங்குகளை அவரது பிள்ளைகள் இரண்டு பேர் மற்றும் உறவினர்களின் பெயரில் வைத்துள்ளார். அரிஸ்டா மட்டுமல்லாமல், க்ளவுட் கம்ப்யூட்டிங் நிறுவனமான ஸ்னோஃப்ளேக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்களில் ஒருவராகவும் இருக்கிறார். இந்த நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பரில் பொதுவெளிக்கு வந்தபோது சுமார் 2.3 பில்லியன் டாலர்களை அதே ஆண்டில் வருமானமாக ஈட்டி சாதனை படைத்தது.
அமெரிக்காவின் செல்வப் பெண்மணிகளில் ஒருவராக உருவாகியுள்ள ஜெயஸ்ரீ உல்லால் லண்டனில் பிறந்து டெல்லியில் வளர்ந்தவர். ஜீசஸ் அண்ட் மேரி கான்வெண்ட்டில் தனது பள்ளிப்படிப்பை படித்தார். மேல் படிப்பிற்காக அமெரிக்காவின் சான்ஃப்ரான்ஸிஸ்கோ மாகாணப் பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் இஞ்சினியரிங் படித்தார். அதுமட்டுமல்லாமல் சாண்ட்டா க்ளாரா பல்கலைக்கழகத்தில் பொறியியல் மேலாண்மை படிப்பையும் படித்தார். அங்கேயே வேலை பார்க்கத்தொடங்கிய உல்லால், பின்னர் அரிஸ்டா நெட்வொர்க்கிங் நிறுவனத்தின் தலைவரானார். ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள சுயமாக உருவான அமெரிக்க பெண் பில்லியனர்கள் பட்டியலில் 15வது இடம் பிடித்திருக்கிறார் ஜெயஸ்ரீ உல்லால்.
நீரஜா சேதி:
ஜெயஸ்ரீ மட்டுமல்லாமல் 1 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் நீரஜா சேதி 24வது இடம் பிடித்திருக்கிறார். இவர் சிண்டெல் நிறுவனத்தை அவரது கணவர் பாரத் தேசாயுடன் சேர்ந்து 2000 அமெரிக்க டாலர்கள் முதலீட்டைக் கொண்டு 1980ல் தொடங்கினார்.
நேஹா நர்கெடே:
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் நேஹா நர்கெடே ஃபோர்ப்ஸ் பட்டியலில் 57வது இடம் பிடித்துள்ளார். கான்ஃப்ளூயண்ட் க்ளவுட் நிறுவனத்தின் இணைநிறுவனரான இவரது சொத்து மதிப்பு 900 மில்லியன் டாலர்களாகும்.
இந்திரா நூயி:
நாம் எல்லோருக்கும் மிகவும் பரிட்சயமான இந்திரா நூயி பெப்சி சிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கிறார். இவர் 320 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் ஃபோர்ப்ஸ் பட்டியலில் 85வது இடமும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் தொழிலதிபராக 4வது இடமும் பெற்றுள்ளார்.
ரேஷ்மா ஷெட்டி:
இறுதியாக, 41 வயதான ரேஷ்மா ஷெட்டி 220 மில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் கடைசி இடத்தைப் பிடித்திருக்கிறார். கின்கோ பயோ ஒர்க்ஸ் நிறுவனத்தின் இணைநிறுவனரான இவர் இந்திய வம்சாவளியினத்தைச் சேர்ந்த பெண் தொழிலதிபராக கடைசி இடத்தைப் பிடித்துள்ளார்.