மேலும் அறிய

கடவுளை நேரில் சந்திக்க முயற்சி; உணவு, தண்ணீர் இன்றி உண்ணாவிரதம் இருந்த 4 பேர் மரணம்...! மூடநம்பிக்கையின் உச்சம்..!

மத போதகர் ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில் சிலர் இயேசு கிறிஸ்துவை சந்திப்பதற்காக உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கென்ய நாட்டின் கடலோர பகுதியில் அமைந்துள்ளது கிலிஃபி கவுண்டி. இயேசு கிறிஸ்துவை சந்திப்பதற்காக இங்குள்ள சிலர் சாப்பிடாமல் விரதம் இருந்ததாக கூறப்படுகிறது. சாப்பிடாமலே பட்டினி கிடந்தவர்களில் நான்கு பேர் உயிரிழந்தனர். கிட்டத்தட்ட ஆறு பேர் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மூளை செலவு செய்த பாதிரியார்:

மத போதகர் ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில் சிலர் இயேசு கிறிஸ்துவை சந்திப்பதற்காக உண்ணாவிரதம் இருந்துள்ளனர். குட் நியூஸ் இன்டர்நேஷனல் தேவாலயத்தில் வழிபாடு மேற்கொண்டு வந்த நான்கு பேர், மாகரினி பகுதியில் உள்ள ஷகாஹோலா கிராமத்தில் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் பல நாட்கள் விரதம் இருந்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் இறந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து காவல்துறை தரப்பு பேசுகையில், "இயேசுவைச் சந்திக்க உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்று உள்ளூர் போதகர் ஒருவர் கூறியுள்ளார். பின்னர், அவர்கள் வனத்திற்கு சென்று விரதம் இருந்துள்ளனர்.  பிரார்த்தனை நடைபெறுவதாக எங்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸார் வனப்பகுதிக்கு சென்றனர். உண்ணாவிரதத்தில் 15 பேர் பங்கேற்பதை கண்டோம். ஆனால், 11 பேர் மட்டுமே உயிருடன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். குட் நியூஸ் இன்டர்நேஷனல் சர்ச்சின் தலைவரான மாக்கன்சி என்தெங்கே என்பவரால் இந்த குழு மூளைச்சலவை செய்யப்பட்டது.

உலகம் அழிவதை தவிர்க்க விரதம்:

உலகம் அழிவதை தவிர்க்க உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என மத போதகர் சொன்னதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். மேலும், விரைவாக பரலோகத்திற்கு சென்று இயேசுவைச் சந்திக்க தங்களைப் உண்ணாவிரதம் இருக்கும்படி அவர் அறிவுறுத்தினார் என்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. குட் நியூஸ் இன்டர்நேஷனல் சர்ச்சின் பாதிரியார் பால் மகென்சி என்தெங்கே என்ற நபரால் இவர்கள் மூளைச் சலவைக்கு உள்ளாகியுள்ளனர்.

காட்டில் மர்மம்:

அந்த காட்டுப்பகுதியில் மேலும் எந்த விசாரணையும் செய்ய முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர். ஏனென்றால், மத போதகரை பின்பற்றுபவர்கள் காவல்துறையை எதுவும் செய்ய விடாமல் தடுத்தி நிறுத்தியுள்ளனர்.

ஏற்கனவே, கடந்த மாதம் இரண்டு குழந்தைகளின் மரணம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட போதகர் தற்போது போலீஸ் ஜாமீனில் வெளியே இருக்கிறார். அவரது பெற்றோர்கள் அவரைப் பின்பற்றி வந்துள்ளனர். பெற்றோரை 'ஹீரோ' ஆக்குவதாகக் கூறி, இரண்டு குழந்தைகளையும் அந்த கல்லறையில் புதைக்க வைத்துள்ளார் போதகர் என்தெங்கே. இந்த சம்பவம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கென்யாவில் பிரதான மதம் கிறிஸ்தவம். 2019ஆம் ஆண்டு வெளியான தகவலின்படி, சுமார் 85.5% கென்ய மக்கள் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!கோதாவில் இறங்கிய அமைச்சர்  VOLLEYBALL ஆடிய செ.பாலாஜி  CHEER செய்த மாணவர்கள்மாணவி கொடுத்த HINT.. சிக்கிய ஞானசேகரன் கூட்டாளி!  திருப்பூர் விரையும் போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Jagdeep Singh: நாளொன்றிற்கு ரூ.48 கோடி, ஆண்டிற்கு? உலகின் அதிக சம்பளம் வாங்கும் சிஇஒ..! யார் இந்த இந்தியர்?
Jagdeep Singh: நாளொன்றிற்கு ரூ.48 கோடி, ஆண்டிற்கு? உலகின் அதிக சம்பளம் வாங்கும் சிஇஒ..! யார் இந்த இந்தியர்?
PM Modi : ரூ. 12,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி; எங்கு தெரியுமா?
ரூ. 12,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி; எங்கு தெரியுமா?
IND vs AUS: 1 ரன்ல எல்லாம் போச்சு! ஸ்மித் ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட இந்தியா!
IND vs AUS: 1 ரன்ல எல்லாம் போச்சு! ஸ்மித் ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட இந்தியா!
Embed widget