மேலும் அறிய

Russia Ukraine War: உக்ரைன் மீது ரஷ்யா சரமாரி ட்ரோன் தாக்குதல் - 2 பேர் உயிரிழப்பு

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். 18 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி, உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த நிலையில், கிட்டத்தட்ட 18 மாதங்களாக போர் தொடர்ந்து வருகிறது. ஆரம்பத்தில் போரில் உக்ரைன் சற்று பின் தங்கியிருந்தாலும் அமெரிக்கா மற்றும் இதர நாடுகளின் உதவியுடன் தற்போது வரை தாக்குப்பிடித்து வருகிறது. பெரும்பாலான நகரங்களில் இருந்து ரஷியா, தங்களின் படைகளை திரும்பப்பெற்றது. சமீப காலமாகவே, போரில் ரஷியா பின்னடைவுகளை சந்தித்து வந்த நிலையில், கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் அந்நாடு மீண்டும் தாக்குதல் நடத்த தொடங்கியது.

உக்ரைன் - ரஷ்யா போர்:

இந்த போரை நிறுத்த இரு நாடுகளுக்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும் இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. பள்ளிக்கூடங்கள், கட்டடங்கள், அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகள் போன்றவை இரு நாட்டு தாக்குதலில் சிக்கி கடுமையாக சேதமடைந்து வருகிறது.

இதனால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த போரினால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர், ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் அண்டை நாடுகளுக்கு தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த போரில் உக்ரைன் நாட்டுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகிறது.

ட்ரோன் தாக்குதல்:

இந்நிலையில் சமீபகாலமாக உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர். நேற்றைய தினம் உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதல் மூலம் 2 பேர் உயிரிழந்தனர். நேற்று உக்ரைனின் தலைநகரான கிவ் மற்றும் கார்கிவ் ஆகிய பகுதிகளில் சரமாரியாக ட்ரோன் தாக்குதல் நடத்தியது.

இதில் அப்பகுதியில் இருக்கும் ஏராளமான குடியிருப்புகள், வணிக வளாகங்கள் இடிந்து விழுந்தது. இந்த தாக்குதலில் குடியிருப்பு இடிபாடுகளில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். அதே சமயம் 18 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக உக்ரைன் நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் உக்ரைன் நாட்டிற்கு 2.5 பில்லியன் டாலரை அமெரிக்கா வழங்கியது. மேலும் 31 போர் பீரங்கிகளை வழங்கவும் உறுதியளித்துள்ளது. ஓராண்டுக்கும் மேலாக இந்த போர் நடைபெற்று வருவது சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில், அமெரிக்கா மேலும் 250 மில்லியன் மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்ததிலிருந்து அமெரிக்கா இதுவரை 10 பில்லியன் டாலருக்கு அதிகமான பொருளாதார மற்றும் ராணுவ ரீதியிலான உதவிகளை செய்துள்ளது.

பல காலமாக உக்ரைன் பிரச்னை நிலவி வந்தாலும், உக்ரைன் நேட்டோவில் இணைய வேண்டும் என்று கடந்த சில வருடங்களாக காட்டி வரும் ஆர்வம்தான்தான் இந்த போருக்கு காரணமாக அமைந்தது. கடந்த 1960களில், அமெரிக்க ரஷ்யாவுக்கு இடையில் நிலவி வந்த உச்சக்கட்ட பனிப்போருக்கு பிறகு, நடந்த மிக மோசமான மோதலாக மாறியுள்ளது உக்ரைன் போர். இதனால், அமெரிக்க, ரஷ்ய நாடுகளின் உறவில் பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. 

India vs Canada Issue: ”தீவிரவாதிகளுக்கு இடமளிக்காதீர்கள்” - கனடா பிரச்னைக்கு மத்தியில் தொலைக்காட்சிகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget