Syria Clash: பழிக்குப் பழி.. ஆயிரத்திற்கும் அதிகமான பிணங்கள், சாலைகளில் ரத்த வெள்ளம் - சிரியாவில் என்ன பிரச்னை?
Syria Clash: சிரியாவில் வெடித்துள்ள மோதலில் இரண்டே நாட்களில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Syria Clash: சிரியாவில் சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் 700-க்கும் அதிகமானோர் சாதாரண பொதுமக்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆயிரத்திற்கும் அதிகமானோர் சுட்டுக் கொலை:
சிரியா பாதுகாப்புப் படையினருக்கும், பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபர் பஷார் அசாத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இதனால் இரண்டு நாட்களாக அரங்கேறி வரும் பழிவாங்கும் சம்பவங்களால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,000 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக போர் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. 14 ஆண்டுகளுக்கு முன்பு சிரியாவின் மோதல் தொடங்கியதிலிருந்து, அரங்கேறிய மிகவும் மோசமான வன்முறைச் செயலாக இது கருதப்படுகிறது.
பிரிட்டனை தளமாகக் கொண்ட சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம், 745 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. பெரும்பாலும் மிக அருகில் இருந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், 125 அரசு பாதுகாப்புப் படை உறுப்பினர்களும், அசாத்துடன் தொடர்புடைய ஆயுதக் குழுக்களைச் சேர்ந்த 148 போராளிகளும் கொல்லப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது. லடாகியா நகரைச் சுற்றியுள்ள பெரிய பகுதிகளில் மின்சாரம் மற்றும் குடிநீர் துண்டிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கம் சொல்வது என்ன?
வியாழக்கிழமை வெடித்த மோதல்கள், அசாத்தை அதிகாரத்தில் இருந்து அகற்றிய பின்னர் கிளர்ச்சியாளர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய மூன்று மாதங்களுக்குப் பிறகு, டமாஸ்கஸில் புதிய அரசாங்கத்திற்கு எதிரான சவாலில் ஒரு பெரிய முன்னெடுப்பை குறித்தது. அசாத்தின் படையில் மீதமிருப்பவர்களின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுப்பதாக அரசாங்கம் கூறியதுடன், பரவலான வன்முறைக்கு "தனிப்பட்ட செயல்கள்" காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளது.
Reports in Syria of no fewer than 2,400 Alawite civilians being massacred in coastal cities by the armed forces of the new Syrian regime.
— Cheryl E 🇮🇱🇮🇱🇮🇱🎗️ (@CherylWroteIt) March 8, 2025
Preparations are underway in the Syrian coastal city of Banias for the mass burial of hundreds of those killed in the massacre carried out by… pic.twitter.com/TiO6ScS2zS
பழிக்குப்பழி கொலைகள்:
வெள்ளிக்கிழமை அரசாங்கத்திற்கு விசுவாசமான சன்னி முஸ்லிம் ஆயுதக்குழுவினர், அசாத்தின் சிறுபான்மை அலவைட் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு எதிராகத் தொடங்கிய பழிவாங்கும் கொலைகள், முன்னாள் அரசாங்கத்தை கவிழ்க்க வழிவகுத்த பிரிவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாமுக்கு பெரும் அடியாகும். பல தசாப்தங்களாக அசாத்தின் ஆதரவுத் தளத்தில் அலவைட்டுகள் பெரும் பங்கைக் கொண்டிருந்தனர்.
ஆயுதக்குழுவினர் அலவைட்களை, தெருக்களில் அல்லது அவர்களின் வீடுகளின் வாயில்களில் வைத்து சுட்டுக் கொன்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் குறிப்பிடுகின்றனர். அலவைட் மக்களின் பல வீடுகள் சூறையாடப்பட்டு, பின்னர் வெவ்வேறு பகுதிகளில் தீ வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்புக்காக அருகிலுள்ள மலைகளுக்கு ஓடிவிட்டதாகவும் கூறினார்.
ராணுவ கட்டுப்பாடு:
சனிக்கிழமை அதிகாலையில் பழிவாங்கும் கொலைகள் நின்றுவிட்டன என்று போர் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கைக்கான அதிகாரப்பூர்வ இறுதி அறிக்கை இதுவரை வெளியாகவில்லை. அசாத் விசுவாசிகளிடமிருந்து பெரும்பாலான பகுதிகளை அரசாங்கப் படைகள் மீண்டும் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மீறல்களைத் தடுக்கவும் படிப்படியாக நிலைத்தன்மையை மீட்டெடுக்கவும், கடலோரப் பகுதிக்கு செல்லும் அனைத்து சாலைகளையும் அதிகாரிகள் மூடிவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலோர நகரமான ஜப்லே அருகே தேடப்படும் ஒருவரை அரசாங்கப் படைகள் தடுத்து வைக்க முயன்றபோது, அசாத் விசுவாசிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் இருந்து சமீபத்திய மோதல்கள் தொடங்கியதாக கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

