World wildlife Day: அழிவின் விளிம்பில் வன உயிரினங்கள்! மானுடம் மீட்க வனங்களைக் காப்போம்! சர்வதேச வன உயிரின தினம் இன்று!
புள்ளிவிவரங்களின்படி, 8,400 க்கும் மேற்பட்ட வன விலங்குகள் மற்றும் தாவரங்கள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளன. 30,000 க்கும் மேற்பட்ட இனங்கள் அழிந்தபோதும் அதிகம் வாய்ப்புள்ளவை என்ற நிலையில் இருக்கிறது.
பலவேறு காரணங்களால் அழிந்து வரும் வன விலங்குகளை பாதுகாக்கவும், அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இன்று சர்வதேச வன உயிரின தினம் கொண்டாடப்படுகிறது.
உலக வெப்பமயமாதல், காலநிலை மாற்றம், நவீனமயமாக்கல் ஆகியவற்றின் விளைவு பெரும்பாலான காடுகள் அழிக்கப்பட்டு வருவதுதான். வனப்பகுதிகள் நிறுவனங்களின் லாபம் கொழிக்கும் முதலீட்டு தளங்களாக மாறிபோனது வேதனைக்குரியது. இதனால் குறைந்து வருவது வனத்தின் பரப்பளவு மட்டுமல்ல. அங்கு வசிக்கும் உயிரினங்களும்தான். பல லட்சக்கணக்கான உயிரினங்களின் வாழ்விடம் தொடந்து அழிக்கப்பட்டு வருகிறது.
வன உயிரினங்களுக்கு நேரிடும் பாதிப்புகள் மற்றும் அழிவுகள் காரணமாக, இயற்கை சூழல் சங்கிலி அறுபட்டு, பூமியே மூச்சுவிட வழியில்லாமல் தவித்து வருகிறது.
இது குறித்து விழிப்புணர்வு மேற்கொள்ளும் வகையில், வன உயிரினங்களை பாதுகாக்கவும், அவற்றுக்கான உணவு, பாதுகாப்பு ,வாழ்விடத்தை உறுதி செய்யும் நோக்கில், ஆண்டுதோறும் மார்ச் 3 ஆம் தேதி சர்வதேச வன உயிரின தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 2013 - ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி கூடிய ஐநா பொதுச்சபையில், இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அந்த வகையில், இந்தாண்டு சர்வதேச வன உயிரின தினத்திற்கான கருப்பொருளாக (theme) ’சுற்றுச்சூழல் அமைப்பின் மறுசீரமைப்பிற்காக முக்கியத்துவம் வாய்ந்த உயிரினங்களை மீட்போம்’ (Recovering key species for ecosystem restoration) என்பதை கொண்டுள்ளது.
In 2022, under the theme of "Recovering key species for ecosystem restoration", #WorldWildlifeDay will raise awareness of the threats weighing on endangered species and their habitats, and of the power of efforts aimed at conserving them: https://t.co/zlgjdUeqf5 #WWD2022 pic.twitter.com/0BEw5Tjb28
— World Wildlife Day (@WildlifeDay) November 15, 2021
இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் அச்சுறுத்தப்பட்ட உயிரினங்களின் சிவப்புப் பட்டியலின் புள்ளிவிவரங்களின்படி, 8,400 க்கும் மேற்பட்ட காட்டு விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளன. அதே சமயம் 30,000 க்கும் மேற்பட்ட இனங்கள் ஆபத்தானவை அல்லது பாதிக்கப்படக்கூடியவை என்ற நிலையில் இருக்கிறது. இந்த மதிப்பீடுகளின் அடிப்படையில், ஒரு மில்லியனுக்கும் அதிகமான உயிரினங்கள் அழிந்துபோகும் அபாயத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
உணவு, மருந்துகள் மற்றும் ஆரோக்கியம் முதல் எரிபொருள், வீடு, உடை என அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்ய வனவிலங்குகள் மற்றும் பல்லுயிர் அடிப்படையிலான வளங்களை மக்கள் அதீத அளவில் பயன்படுத்துவதன் விளைவு; உயிரினங்களின் இழப்பு வாழ்விடங்கள் அழிக்கப்படுதல் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் சீரழிவு ஒட்டுமொத்த மனிதகுலத்தின் அழிவின் தொடக்கமாக இருக்கிறது. இனியும் மனிதன் விழித்துக்கொள்ளாமல் இருந்தால் நாம் இப்பூமியில் உயிர்வாழ்வது மிகவும் கடினமானதாகிவிடும்.
Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora (CITES)-ன் தலைமை செயலகம், ஐ.நா. உலக வனவிலங்கு தினம் 2022 இன் கருப்பொருளை அறிவித்தத அறிக்கையில், " உயிரினங்கள் அழிவின் விளிம்பிலிருந்து மீட்கப்பட சிறந்த நடைமுறை உலக நாடுகள் முன்னெடுக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை ஊக்குவிக்க வேண்டும். நம் வாழ்வின் நிலையான எதிர்காலத்திற்கு ஒரே தீர்வு, நம் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதுதான்.” என்று குறிப்பிட்டுள்ளது.
ஐ.நா. சர்வதேச வன உயிரின தின குறித்து வெளியிட்டுள்ள வீடியோவைக் காண யுடியூப் லிங்க்--- https://www.youtube.com/watch?v=A_HZwK0abIg