மேலும் அறிய

போலீஸ் வாகனத்தை வழிமறித்த இளம்பெண் யார்? நாடு முழுவதும் பேசப்படும் ரியா அஹிரின் பின்னணி!

நீட் போராட்டத்தின் வைரல் முகமாக மாறிய ரியா அஹிர் யார்? போலீஸ் வாகனத்தை வழிமறித்த இளம்பெண்ணின் பின்னணி.

நீட் தேர்வு முறைகேட்டை எதிர்த்து நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கிடையே, மும்பையில் போலீஸ் வாகனத்தின் முன் நின்று அதை வழிமறித்த இளம்பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த இளம்பெண் யார் என்ற கேள்வி இணையத்தில் அதிகம் தேடப்பட்ட நிலையில், தற்போது அவரது பின்னணி வெளியாகியுள்ளது.

போலீஸ் வாகனத்தை வழிமறித்த ரியா அஹிர்

வைரலான அந்த இளம்பெண் ரியா அஹிர். 27 வயதான அவர், மும்பையைச் சேர்ந்த மாடல், நடிகை மற்றும் தொழில்முனைவோர் ஆவார். 'ரியாசத்' (Riyasat) என்ற ஆடை பிராண்டுடனும் அவர் தொடர்புடையவர். போராட்டத்திற்கு முன்பு ஃபேஷன் மற்றும் பொழுதுபோக்கு துறையில் மட்டுமே அறியப்பட்ட ரியா, இந்த ஒரு சம்பவத்தால் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளார்.

மும்பையில் நடைபெற்ற நீட் தேர்வு முறைகேடு தொடர்பான போராட்டத்தின் போது, சில போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர். அப்போது அந்த வாகனத்தின் முன் நின்று, கைது செய்யப்பட்டவர்களை ஏன் அழைத்துச் செல்கிறீர்கள் என்று போலீசாரிடம் ரியா அஹிர் கேள்வி எழுப்பினார். அந்தக் காட்சி வீடியோவாக சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

தனது செயல் குறித்து ரியா அஹிர்

பின்னர் NDTV-க்கு அளித்த பேட்டியில், "நான் நீட் தேர்வு எழுதிய மாணவி அல்ல. ஆனால் மாணவர்களுக்காக குரல் கொடுப்பது அவசியம் என்று நினைத்தேன். டெல்லியில் மாணவர்கள் மீது நடந்த போலீஸ் நடவடிக்கை தவறானது. போலீசார் பொறுப்புடன் செயல்படவில்லை என்றால், குடிமக்களாகிய நாம்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று தோன்றியது" என்று ரியா அஹிர் தெரிவித்துள்ளார். மேலும், போலீஸ் வாகனத்தை தடுக்க வேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிடவில்லை; அங்கு நடந்த சம்பவத்தை பார்த்த பிறகே உணர்ச்சிவசப்பட்டு அந்த முடிவை எடுத்ததாகவும் அவர் விளக்கியுள்ளார்.

ரியா அஹிர் போலீஸ் வாகனத்தை வழிமறித்த அந்தக் காட்சி சமூக வலைதளங்களில் கோடிக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. சிலர் அவரது துணிச்சலை பாராட்டி ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், மற்றொருபுறம் அவரது செயல் குறித்து சட்டம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விவாதங்களும் இணையத்தில் எழுந்துள்ளன. இருப்பினும், நீட் தேர்வு முறைகேடு தொடர்பான போராட்டங்களில் அதிகம் பேசப்பட்ட முகங்களில் ஒருவராக ரியா அஹிர் மாறியுள்ளார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

Independence Day 2026: சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் யார்? முதல் பட்ஜெட், தேர்தல் எப்போது நடந்தது? - சுவாரஸ்ய தகவல்கள் இதோ
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் யார்? முதல் பட்ஜெட், தேர்தல் எப்போது நடந்தது? - சுவாரஸ்ய தகவல்கள் இதோ
சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட் 15) தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்யும்? - வானிலை வெளியிட்ட லிஸ்ட்
சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட் 15) தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்யும்? - வானிலை வெளியிட்ட லிஸ்ட்
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
Brezza vs Venue EMI Comparison: மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
Upcoming Hybrid SUVs: அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
Embed widget