மேலும் அறிய

Viral Video: கூகுள் மேப்பை பார்த்து ஓட்டிய ஓட்டுநர்; கழிவு நீர் வாய்க்காலில் இறங்கிய கார் - வைரல் வீடியோ

திருக்கோவிலூரில் கூகுள் மேப்பை பார்த்தவாறு பயணம்; கழிவு நீர் வாய்க்காலில் இறங்கிய கார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் கூகுல் மேப் பார்த்தவாரே காரை ஓட்டிச்சென்றவர் வழி தவறிச்சென்று கழிவு நீர் கால்வாய்க்குள் காரை இறக்கிய சம்பவம்  அரங்கேறி இருக்கின்றது.

சென்னையை சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் தனது குடும்பத்தினருடன் திருக்கோவிலூர் அருகே உள்ள ஸ்ரீ ஞானானந்தகிரி தபோவனம் மடத்திற்கு சென்றுள்ளார். அங்கிருந்து இரவு கூகுள் மேப் உதவியுடன் கீழையூர் பகுதியில் உள்ள வீரட்டேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் தபோவனம் மடத்திற்கு செல்வதற்காக கூகுள் மேப்பை பார்த்து காரை ஓட்டிச்சென்றுள்ளார்.

இந்த நிலையில், கோவிலில் இருந்து நேராக சென்று வலப்புறம் உள்ள பாலத்தில் ஏறி திரும்பி செல்ல வேண்டும் என்று கூகுள் மேப் காட்டியுள்ளது. ஆனால் அதனை சரியாக புரிந்து கொள்ளாத ஸ்ரீராம், மெயின் ரோட்டில் செல்வதற்கு பதிலாக தென்பெண்ணை ஆற்றுக்குள் செல்லும் குறுகிய சாலைக்குள் காரை விட்டுள்ளார். இருள் சூழ்ந்து காணப்பட்டதால், கூகுள் மேப்பை பார்த்தவாரே காரை ஓட்டிச் சென்ற போது, எதிர்பாராத விதமாக குறுகிய சாலையில் உள்ள கழிவு நீர் கால்வாயில் காரின் முன்பக்க சக்கரம் இறங்கிச்சிக்கிக் கொண்டதால் காரை மேற்கொண்டு இயக்க முடியாமல் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் ஸ்ரீராம், குடும்பத்துடன் இரவு நேரத்தில் ஆற்றுக்குசெல்லும் வழியில் காருடன் தவித்து நின்ற ஸ்ரீராமிடம் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் விசாரித்தனர்.

அது தவறான பாதை என்றும், கால்வாய்க்குள் கார் சிக்காமல் இன்னும் கொஞ்ச தூரம் இருட்டுக்குள் வழிதவறி சென்றிருந்தால் கார் ஆற்றுக்குள் விழுந்திருக்கும் என்றும் எச்சரித்த உள்ளூர் வாசிகள் அந்த காரை எடுப்பதற்கு உதவினர். காரில் இருந்த அனைவரையும் கீழே இறங்கச் செய்து, காரை கிரேன் உதவியுடன் பெல்ட் கட்டி மீட்க முயன்றனர். ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பின்னர், கால்வாயில் இருந்து கார் பத்திரமாக மீட்கப்பட்டது. காரின் இடது பக்கம் மட்டும் லேசான கீறல்கள் ஏற்பட்டிருந்தது. கூகுல் மேப் உதவியுடன் பயணிப்பவர்கள் இரவு நேர பயணத்தை தவிர்ப்பது நல்லது, அதே நேரத்தில் முன் கூட்டியே ரூட் மேப்பை பார்த்து ஆய்வு செய்த பின்னர் காரை இயக்கினால் இது போன்ற விபரீதங்களை தடுக்கலாம் என்பதே காவல்துறையினரின் அறிவுறுத்தலாக உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Virat, Rohit, Jadeja: இரண்டு நாளில் மூன்று ஜாம்பவான்கள் ஓய்வு - கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்!
Virat, Rohit, Jadeja: இரண்டு நாளில் மூன்று ஜாம்பவான்கள் ஓய்வு - கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்!
PM Modi: மனதின் குரல்! தாய், சுதந்திர போர், சமஸ்கிருதம் குறித்து பிரதமர் பேசியது என்ன?
PM Modi: மனதின் குரல்! தாய், சுதந்திர போர், சமஸ்கிருதம் குறித்து பிரதமர் பேசியது என்ன?
Breaking News LIVE: திருவண்ணாமலையில் விவசாயிகளிடம் ரூபாய் 10 கோடி மோசடி - 2 பேர் கைது
Breaking News LIVE: திருவண்ணாமலையில் விவசாயிகளிடம் ரூபாய் 10 கோடி மோசடி - 2 பேர் கைது
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு.. ஜடேஜா அறிவிப்பு!
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு.. ஜடேஜா அறிவிப்பு!
Embed widget