திருமணம் செய்வதாக காதலியை ஏமாற்றிய காதலன் - 7 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு
அந்த பெண்ணை பெரியசாமி, அவரது தந்தை மாரி, தாய் சந்திரா, உறவினரான காரனூரை சேர்ந்த கருப்பதுரை ஆகியோர் சேர்ந்து திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி காதலியை ஏமாற்றியவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகா பூட்டை கிராமத்தை சேர்ந்த 20 வயதுடைய பெண்ணும், பால்ராம்பட்டை சேர்ந்த கூலித்தொழிலாளியான மாரியின் மகன் பெரியசாமி (31) என்பவரும் கடந்த 2018ம் ஆண்டில் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். அப்போது அந்த பெண்ணிடம் பெரியசாமி, திருமணம் செய்து கொள்வதாக கூறி நெருக்கமாக இருந்துள்ளார். பின்னர் அந்த பெண், பெரியசாமியின் வீட்டிற்கு சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி கேட்டதற்கு அவர் திருமணம் செய்ய மறுத்து விட்டார்.
மேலும் அந்த பெண்ணை பெரியசாமி, அவரது தந்தை மாரி, தாய் சந்திரா, உறவினரான காரனூரை சேர்ந்த கருப்பதுரை ஆகியோர் சேர்ந்து திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரியசாமி, மாரி, சந்திரா, கருப்பதுரை ஆகிய 4 பேரையும் கைது செய்து விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) சாந்தி, குற்றம் சாட்டப்பட்ட பெரியசாமிக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும், மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக ரூ.3 லட்சம் வழங்க வேண்டும் என்றும், மாரி உள்பட மற்ற 3 பேரை இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்தும் தீர்ப்பு கூறினார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட பெரியசாமி, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் சங்கீதா ஆஜரானார்.
போக்சோ சட்டம் என்றால் என்ன?
போக்சோ சட்டத்தின்படி குழந்தைகளிடம் பாலியல் ரீதியான செய்கைகள் காட்டுவது, தொலைபேசி, அலைபேசியில் ஆபாசமாக பேசுவது, மின்னஞ்சல் அனுப்புவது, திட்டுவது, பாலியல் இச்சைக்கு அழைப்பது, பாலியல் உறவில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றம். பாலியல் வன்கொடுமைகளில் இருந்து குழந்தைகளைக் காப்பாற்ற கடந்த 2012ல் உருவான சட்டமே போக்சோ சட்டம் (Protection of Children from Sexual Offence). சட்டம் இருந்தாலும் கூட இச்சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கின்றன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்