விழுப்புரம்: மனைவியின் தங்கையை காரில் கடத்திய மாமா... எதிர்ப்பு தெரிவித்து காரில் தொங்கியபடி சென்ற அக்கா...
விழுப்புரம்:மனைவியின் தங்கையை காரில் கடத்திய மாமா... எதிர்ப்பு தெரிவித்து காரில் தொங்கியபடி சென்ற அக்கா... பொதுமக்கள் காரை விரட்டி பிடித்ததால் பரபரப்பு...
விழுப்புரம் : காதல் மோகத்தில் மனைவியின் தங்கையை காரில் கடத்திச்சென்ற மாமா, எதிர்ப்பு தெரிவித்து காரில் தொங்கியபடியே சென்ற மற்றொரு சகோதரியால் பரபரப்பு. விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அடுத்த சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், தனது மனைவி பிள்ளைகளுடன், சென்னையில் வசித்து வருகிறார். இதற்கிடையே, வெங்கடேசன் தனது மனைவி விஜயாபானுவின் தங்கையான, தியாகதுருகத்தைச் சேர்ந்த மருத்துவர் விஜயமஞ்சுவை காதலித்து வந்துள்ளார்.
Crime : தாயுடன் உறவில் இருந்தவர் மீது ஆத்திரம்.. இளைஞர் செய்த வெறிச்செயலால் அதிர்ந்த கிராமம்..
இதற்கு அந்தக் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில், விஜயமஞ்சு தனது மற்றொரு அக்கா கனிஷ்காவுடன், விழுப்புரம் மேற்கு காவல் நிலையம் எதிரில் உள்ள ஜிஆர்டி நகைக் கடைக்கு இன்று வந்துள்ளார். அப்போது, சென்னையில் இருந்து வந்திருந்த வெங்கடேசன், தனது காதலியும் மனைவியின் தங்கையுமான விஜயமஞ்சுவை காரில் கடத்தியுள்ளார். இதையடுத்து, விஜய மஞ்சுவுடன் வந்திருந்த அவரது அக்கா கனிஷ்கா, அந்தக் காரில் தொங்கியபடியே சென்றுள்ளார். இந்தக் கார், விழுப்புரம் நான்குமுனைச் சந்திப்பில் இருந்து, சென்னை மார்க்கமாக சென்றுள்ளது.
OPS Photo Removed : ஓபிஎஸ் பெயர்,புகைப்படம் அழிப்பு.. ஆட்டத்தை தொடங்கிய சி.வி.சண்முகம்! CV Shanmugam
சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு, கனிஷ்கா காரில் தொங்கியபடி சென்றுள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் காரை விரட்டிச் சென்று, மடக்கிப் பிடித்துள்ளனர். பின்னர் காரில் கடத்தப்பட்ட விஜய மஞ்சுவை மீட்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், வெங்கடேசனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திரைப்படத்தை மிஞ்சும் அளவுக்கு நடந்த இச்சம்பவத்தால், விழுப்புரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆப் மூலம் கடன்; ஆபாசமாக சித்தரித்து மிரட்டல் - கண்ணீருடன் அரசுக்கு பெண் கோரிக்கை
மது போதை....குடும்ப பிரச்னை - அடுத்தடுத்து தந்தை, மகன் தற்கொலை... நடந்து என்ன ?
Anbil Mahesh Speech : அறிவாலயத்தில் இருப்பது போல் உணர்கிறேன் - அன்பில் மகேஷின் அசத்தல் பேச்சு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்