Crime : தாயுடன் உறவில் இருந்தவர் மீது ஆத்திரம்.. இளைஞர் செய்த வெறிச்செயலால் அதிர்ந்த கிராமம்..
கள்ளக்குறிச்சி : தாயுடன் கள்ள உறவு வைத்திருந்த வாலிபரை பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்த வழக்கில் மகன் மற்றும் அவரது நண்பருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
கள்ளக்குறிச்சி :தாயுடன் கள்ள உறவு வைத்திருந்த வாலிபரை பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்த வழக்கில் மகன் மற்றும் அவரது நண்பருக்கு இரட்டை ஆயுள் தண்டனை. கடந்த 2019 ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் மட்டிகைக்குறிச்சி கிராமத்தில் தனது தாயுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த வெங்கடேசன் என்பவரை சடையம்பட்டி கிராமத்தில் உள்ள கோமுகி ஆற்றில் தங்கம் என்பவரது மகன் சிவா மற்றும் அவரது நண்பர் வெற்றிவேல் சேர்ந்து மது பாட்டிலால் குத்தி கொலை செய்தனர். அதில் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
RB Udhayakumar Speech : அவர் உயரத்தை யாராலும் தொட முடியாது - OPS-சை திடீரென புகழ்ந்த R.B.உதயகுமார்
இந்த கொலை குறித்து கச்சிராயபாளையம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சிவா மற்றும் வெற்றிவேல் ஆகிய இருவரை கைது செய்தனர். இந்த நிலையில் தாயின் கள்ளக் காதலனை தனது நண்பருடன் சேர்ந்து பீர் பாட்டிலால் குத்திக் கொலை செய்த சிவா மற்றும் அவரது நண்பர் வெற்றிவேல் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் இருவருக்கும் தலா 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
OPS Photo Removed : ஓபிஎஸ் பெயர்,புகைப்படம் அழிப்பு.. ஆட்டத்தை தொடங்கிய சி.வி.சண்முகம்! CV Shanmugam
மேலும் அபராதம் கட்ட தவறினால் ஆறு மாத சிறை தண்டனை கூடுதலாக விதிக்கப்படும் என்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கீதாராணி தீர்ப்பு வழங்கினார். இதனையடுத்து கொலைக் குற்றவாளிகளான சிவா மற்றும் வெற்றிவேல் ஆகிய இருவரையும் போலீசார் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தாயுடன் கள்ள உறவு வைத்திருந்த வாலிபரை மகன் மற்றும் அவரது நண்பர் சேர்ந்து மது பாட்டிலால் குத்தி கொலை செய்யும் இருவருக்கும் இரட்டை ஆயுள் தன்னை வழங்கியுள்ள சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் பரபரப்பாக மாறியுள்ளது.
மது போதை....குடும்ப பிரச்னை - அடுத்தடுத்து தந்தை, மகன் தற்கொலை... நடந்து என்ன ?
Anbil Mahesh Speech : அறிவாலயத்தில் இருப்பது போல் உணர்கிறேன் - அன்பில் மகேஷின் அசத்தல் பேச்சு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்