திண்டிவனத்தில் டெஸ்ட் டிரைவ் செல்வதாக காரை திருடி சென்ற கில்லாடி திருடன் கைது
விழுப்புரம் : திண்டிவனத்தில் டெஸ்ட் டிரைவ் செல்வதாக காரை திருடி சென்ற கில்லாடி திருடன் கைது...
திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் பகுதியை சேர்ந்தவர் அமர்ந்த லிங்கம் வயது 25,என்பவர் தனது மாருதி சுசுகி ஈகோ காரை 6 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்வதாக சமூக வலைதளங்களான ஓஎல்எக்ஸ் மற்றும் பேஸ்புக்கில் கடந்த மாதம் 7ம் தேதி விளம்பரம் செய்திருந்தார். அதைப் பார்த்த சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த சுலைமான் வயது 40, என்பவர் திண்டிவனத்திற்கு வந்து அந்த காரை வாங்கிக் கொள்வதாக கூறியதன் பெயரில் அமிர்தலிங்கம் செய்யார் ரில் இருந்து அந்த காரை திண்டிவனம் ரயில் நிலையத்திற்கு எடுத்து வந்தார். அப்பொழுது சுலைமான் அந்த காரை ஓட்டி பார்த்து வாங்கிக் கொள்வதாக கூறி அவரிடம் தனது ஆதார் கார்டை கொடுத்து காரை ஓட்டி சென்றுள்ளார்.
காரை எடுத்துச் சென்ற சுலைமான் வெகுநேரமாக வராததால் திண்டிவனம் காவல் நிலையத்தில் இது சம்பந்தமாக புகார் அளித்தார். இது சம்பந்தமாக திண்டிவனம் ஏஎஸ்பி அபிஷேக் குப்தா குப்தா சப் இன்ஸ்பெக்டர் ஆனதராசன் தலைமையில் தனிப்படை அமைத்து சுலைமான் தந்த ஆதார் கார்டில் இருந்த முகவரியில் போலீசார் விசாரித்ததில் அது போலியாக தயாரித்த ஆதார் கார்டு என்பது தெரிய வந்தது.இது எடுத்து பல்வேறு இடங்களில் இருந்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் சோதனை செய்து விசாரணை செய்து வந்தனர் இந்த நிலையில் இன்று திண்டிவனம் மேம்பாலம் கீழ் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
சென்னை நோக்கி வந்த காரை சோதனைத்ததில் அதில் நம்பர் பிளேட் மாறி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் அவர்கள் பாணியில் விசாரித்ததில் அவர் அமிர்தலிங்கத்திடம் காரை திருடி சென்றதுவிசாரணையில் தெரிய வந்ததுமேலும் இவர் கடந்த மரம் ஆறாம் தேதி தனியார் லாட்ஜில் ரூம்பெடுத்து தங்கியதும் விசாரணையில் தெரிய வந்தது. இவர் ஆடம்பரமாக வாழ்வது போல் காண்பித்துக் கொள்வதற்கு பணத்தை கையில் வைத்துக் கொண்டு செல்பி எடுப்பதும்,அதை தனது பேஸ்புக் வாட்ஸ் அப் யில் முகப்புகளில் வைத்து தன்னை பெரிய ஆளாக காமித்துக் கொள்வது இவரின் வழக்கமாக உள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவித்தனர். மேலும் இவர் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தற்போது கம்பி எண்ணுகிறார். அவர் மீது வழக்குப்பதிவு செய்து காரை மீட்டி அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.