அன்புஜோதி ஆசிரமம் தொடர்பான அறிக்கை மனித உரிமைகள் ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும் - ஆட்சியர் பழனி
விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமம் தொடர்பாக ஆறு வார காலத்திற்குள் விரிவான அறிக்கை தயார் செய்து மனித உரிமைகள் ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும் என ஆட்சியர் சி. பழனி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம்: குண்டலப்புலியூர் அன்புஜோதி ஆசிரமம் தொடர்பாக ஆறு வார காலத்திற்குள் விரிவான அறிக்கை தயார் செய்து மனித உரிமைகள் ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சி. பழனி தெரிவித்துள்ளார்.
குண்டலப்புலியூர் அன்பு ஜோதி ஆசிரமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அடித்து துன்புறுத்திய வழக்கில் ஆசிரம நிர்வாகி ஜீபின் பேபி அவரது மனைவி மரியா பணியாளர்கள் சதீஷ், கோபிநாத், பிஜீ மேனன் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 8 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கு விசாரனை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு சிபிசிஐடி எஸ்.பி அருன் பாலகோபாலன் தலைமையில் 25 பேர் கொண்ட குழுவினர் விசாரனை செய்து வருகின்றனர்.
சிபிசிஐடி போலீசார் அன்பு ஜோதி ஆசிரமத்தில் ஆய்வு மேற்கொண்டு கூடுதல் ஆவணங்களை கைப்பற்றி சென்று விசாரனை செய்து வருகின்றனர். சிபிசிஐடி போலீசார் அன்புஜோதி ஆசிரமத்தின் இணைதள முகவரியை முடக்கி உள்ளனர். மனித உரிமைகள் ஆணையம் அன்பு ஜோதி ஆசிரமம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென விழுப்புரம் ஆட்சியர் மற்றும் எஸ்பிக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் விழுப்புரம் தனியார் கல்லூரியில் தமிழ் கனபு நிகழ்ச்சியில் ஆட்சியர் சி.பழனி கலந்து கொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மனித உரிமைகள் ஆனையம் விளக்கம் கேட்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளதால் இவ்விவகாரம் தொடர்பாக ஆறு வார காலத்திற்குள் விசாரனை அறிக்கை தயார் செய்து சமர்பிக்கபடும் என தெரிவித்தார். மேலும் சமூக நலத்துறை சார்பில் அன்பு ஜோதி ஆசிரமம் உரிமம் இன்றி செயல்பட்டது குறித்து மாற்றுதிறனாளி நலத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்த செய்தியாளர்கள் கேள்விகளுக்கு தொடர்ந்து விசாரணை செய்து வருவதாக பதில் அளித்தார்.
இவ்விவகாரம் நடந்து 13 நாட்கள் ஆகியும் இது தொடர்பாக மாற்றத் திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் ஒருவர் மீது கூட துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏற்கனவே அன்பு ஜோதி ஆசிரமத்திற்கு முன்பு இருந்த ஆட்சியர் மோகன் ஆய்வு செய்துள்ளார். ஆனால் உரிமம் பெறாமல் இருந்தது குறித்து அவர் நடவடிக்கை எடுக்கவில்லை, ஆசிரமத்தினர் 300 அனாதை பிணங்களை புதைத்துள்ளனர். அது உண்மையிலையே அனாதை பிணங்கள் தான் என்பது குறித்து வழக்கும் பதியவில்லை என்பது குறிப்பிடதக்கது.