Villupuram: சாலையில் தேங்கிய மழைநீர்; கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகம் - பொதுமக்கள் ஆத்திரம்
திண்டிவனம் - மரக்காணம் பிரதான சாலையில் தேங்கிய மழை நீர்.நடவடிக்கை எடுக்காத ஊராட்சி நிரவகம்.
![Villupuram: சாலையில் தேங்கிய மழைநீர்; கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகம் - பொதுமக்கள் ஆத்திரம் Villupuram Stagnant rain water on Tindivanam - Marakkanam main road siruvadi Panchayat administration not taking action TNN Villupuram: சாலையில் தேங்கிய மழைநீர்; கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகம் - பொதுமக்கள் ஆத்திரம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/04/218da515504d645d0b31ca0bd68350681683200859728194_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விழுப்புரம்: சிறுவாடி கிராமத்தில் ஒருநாள் பெய்த கனமழையின் காரணமாக சாலையில் தேங்கி நின்ற மழை நீர் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த சிறுவாடி கிராமத்தில் இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக திண்டிவனம் - மரக்காணம் பிரதான சாலையில் மழை நீர் தேங்கி நின்றது, மழை நீர் தேங்கி நின்றதன் காரணமாக சாலை அருகில் இருந்த வீடுகளிலும் கடைகளிலும் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் என அனைவரும் அவதிக்குள்ளாகினர். மேலும் காலை முதல் ஊராட்சி நிர்வாகமும், துறை சார்ந்த அதிகாரிகளும் மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்தனர்.
இதனால் சிறுவாடி கிராம பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் ஒன்றிணைந்து சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது, இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பிரம்மதேசம் போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி மழை நீர் வடிவதற்கு நெடுஞ்சாலைத்துறையினரின் உதவியுடன் மழைநீர் வடிவதற்கு ஏற்படுகளை செய்தனர், இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து களைந்து சென்றனர் மேலும் சிறுவாடி கிராமத்தில் ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் போது இதே நிலை ஏற்படுவதாகவும் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் சாலையில் நிற்க்கும் மழைநீர் செல்லும் வழிகள் ஆக்கிரமிப்பில் உள்ளதால் மழை நீர் சாலையில் நிற்பதகா கூறுகின்றனர். மழை நீர் செல்லும் வழியினை சரிசெய்யுமாறும் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளின் நடவடிக்கை தேவையாக உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)