விழுப்புரம் அருகே சோகம்... பள்ளி செப்டிக்டேங்கில் தவறி விழுந்து 3 வயது குழந்தை உயிரிழப்பு
விழுப்புரம்: விக்கிரவாண்டி தனியார் பள்ளியில் மூன்று வயது குழந்தை செப்டிக் டேங்கில் தவறி விழுந்து உயிரிழப்பு.
விழுப்புரம்: விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் ஒப்பந்த பணியாளராக பணிபுரியும் பழனிவேல் சிவசங்கரி தம்பதியின் 3 வயது குழந்தை லியா லட்சுமி, தனியார் மெட்ரிக் பள்ளியின் செப்டக் டேக்கில் விழுந்து உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி மெயின் ரோடு பகுதியில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் ஒப்பந்த பணியாளராக பணிபரியும் பழனிவேல் சிவசங்கரி இவர்களின் தம்பதி மூன்று வயது குழந்தை லியோ லட்சுமி எல்கேஜி படித்து வந்தார்.
இந்த நிலையில் இன்று வழக்கம் போல் பள்ளிக்கு வந்த நிலையில் மதியம் வகுப்பறை அருகே விளையாடிக் கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த செப்டிக் டேங்கில் தவறி விழுந்துள்ளார். செப்டிக் டேங்கில் சுற்றி அமைக்கப்பட்ட வேலி தரமற்ற முறையில் இருந்தது. மேலும் செப்டிக் டேங்க் மூடிசேதம் அடைந்திருந்த நிலையில் குழந்தை தவறி விழுந்துள்ளது. இதனைக் கண்ட குழந்தைகள் அலறி அடித்துக் கொண்டு கொண்டு ஆசிரியர்களிடம் தெரிவித்த நிலையில் ஆசிரியர்கள் விக்கிரவாண்டி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பெயரில் விரைந்து வந்த விக்கிரவாண்டி தீயணைப்பு துறையினர் குழந்தையை மீட்ட நிலையில் குழந்தை செப்டிக் டேங்கில் ஏற்பட்ட மூச்சு திணறலால் பரிதாபமாக உயிரிழந்தது. குழந்தையின் உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்குறை ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி வளாகத்தில் தற்போது பெற்றோர்கள் உறவினர்கள் சூழ்ந்துள்ளதால் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இதுகுறித்து லியோ லட்சுமி அம்மா கூறுகையில்., மூன்று மணிக்கு பள்ளி முடிந்து விட்டதாக செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்ததாகவும் அதனைத் தொடர்ந்து நமது குழந்தையை பள்ளியில் இருந்து அழைத்துச் செல்வதற்காக லியோ லட்சுமியின் அம்மா சிவசங்கரி பள்ளிக்கு வந்து லியோ லட்சுமி வகுப்பறையில் தேடிய பொழுது காணவில்லை இதனைத் தொடர்ந்து ஆசிரியர்களிடம் கேட்டபோது ஆசிரியர்கள் சரிவர பதிலளிக்காமல் மறுத்துள்ளனர், இதைத்தொடர்ந்து லியோ லட்சுமியின் அப்பாவிற்கு பள்ளி நிர்வாகம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வருமாறு அழைத்துள்ளனர், அங்கு சென்று பார்த்த பொழுது லியோ லட்சுமி இறந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
இச்சம்பவத்தால் விக்கிரவாண்டி பகுதி மக்கள் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர் பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பள்ளி முதல்வரை கைது செய்ய வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஐந்து கிலோ மீட்டருக்கு மேலாக வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பள்ளிக்குச் சென்ற குழந்தையை திரும்பி வீட்டிற்கு அழைத்து வர சென்ற தாய்க்கு நேர்ந்த சோகம் அப்பகுதியில் பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.