மேலும் அறிய

ரூ.60 கோடியில் தயாராகும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை - எங்கு தெரியுமா..?

விழுப்புரம் : ரூ.60 கோடியில் நவீன வசதிகளுடன் திண்டிவனம் அரசு மருத்துவமனை தயாராகி வருகிறது.

விழுப்புரம்: நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு உடனடி நவீன சிகிச்சை அளிக்கும் வகையில் ரூ.60 கோடியில் நவீன வசதிகளுடன் திண்டிவனம் அரசு மருத்துவமனை தயாராகி வருகிறது.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, சென்னை-திருவண்ணாமலை நெடுஞ்சாலை பகுதிகளில் நடக்கும் விபத்துகளில் உயிருக்கு போராடுபவர்களை காப்பாற்ற சென்னை அல்லது செங்கல்பட்டு, புதுச்சேரி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைகளுக்கே கொண்டு செல்ல வேண்டிய சுழல் உள்ளது. இதனால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. அதோடு இப்பகுதிகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிப்பவர்கள் நவீன மருத்துவ வசதிகளை பெறுவதற்கும் புதுச்சேரி, சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் போன்ற அரசு மருத்துவமனைகளைத்தான் நாட வேண்டியிருக்கிறது.

எனவே விபத்தில் சிக்குபவர்களுக்கும், கிராம மக்களுக்கும் உடனடி சிகிச்சை அளிக்க வசதியாக அருகில் உள்ள விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அரசு தலைமை மருத்துவமனையை ரூ.60 கோடியில் தரம் உயர்த்த இரண்டு வகையான கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 50 ஆண்டுகளாக குறுகிய இடத்தில் போதிய இட வசதியின்றி இயங்கிய நிலையில், மாவட்ட மருத்துவமனையாக இதை தரம் உயர்த்தி புதிய கட்டிடங்கள் கட்டுவதற்காக ரூ.60 கோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கீடு செய்து மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக மாற்றம் செய்வதற்கான அரசாணையை கடந்த 2023 அக்டோபர் 28ம் தேதி பிறப்பித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அங்கு பிரசவ வார்டு, குழந்தைகள் சிகிச்சை பிரிவு கட்டிடங்கள் காலி செய்யப்பட்டு தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு பணிகள் துவங்கியது. இப்புதிய கட்டிடத்தின் மூலம், 400 உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் அளவுக்கு வசதி வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. மேலும் மகப்பேறு மருத்துவ பிரிவிற்காக பிரத்யேகமாக தரை தளத்துடன் சேர்ந்த 4 மாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. தற்போது 4 தளங்கள் கொண்ட மகப்பேறு மருத்துவமனை கட்டிட பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுதீ தடுப்புக்கான பாதுகாப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டு வருகின்றது.

மேலும் மருத்துவ தேவைக்கான ஆக்சிஜன் வழித்தடங்களும் அமைக்கப்பட்டு வருகிறது. வருகின்ற டிசம்பர் மாதம் பணிகள் முடிந்து மகப்பேறு கட்டிடம் பயன்பாட்டிற்கு வரும் என்று கூறப்படுகிறது. மேலும் அவசர சிகிச்சைக்கான தரைதளத்துடன் கூடிய 5 மாடி கட்டிடப் பணிகள் நான்கு தளம் வரை முடிவுற்ற நிலையில் இன்னும் சில மாதங்களில் முழுவதுமாக முடிவுற்று இதன் மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனை பல்நோக்கு புதிய 5 மாடி கட்டிடம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi: கவரப்பேட்டை ரயில் விபத்து: கொதித்தெழுந்த ராகுல் காந்தி; சொன்ன அந்த வார்த்தை.!
கவரப்பேட்டை ரயில் விபத்து: கொதித்தெழுந்த ராகுல் காந்தி; சொன்ன அந்த வார்த்தை.!
TN Weather: மக்களே! வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு - எப்போ தெரியுமா?
TN Weather: மக்களே! வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு - எப்போ தெரியுமா?
Jasprit Bumrah:இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட்; துணைக் கேப்டனான பும் பும் பும்ரா!
Jasprit Bumrah:இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட்; துணைக் கேப்டனான பும் பும் பும்ரா!
Vidyarambham : ”வெற்றியை தன்வசமாக்கும் வித்யாரம்பம்” குழந்தைகள் கல்வித் தொடங்க ஏற்ற நாள்..!
Vidyarambham : ”வெற்றியை தன்வசமாக்கும் வித்யாரம்பம்” குழந்தைகள் கல்வித் தொடங்க ஏற்ற நாள்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

PTR on Trichy flight landing : AR Rahman Kamala Harris : OK சொன்ன ரஹ்மான்! கமலா ஹாரிஸ்-க்கு SUPPORT! 30 நிமிட பாடல் ரெடிRahul Gandhi : எதிர்க்கட்சி தலைவர் மாற்றம்? ராகுலை எதிர்க்கும் I.N.D.I.A? பற்றவைக்கும் பாஜகThiruma On DMK : ”பஞ்சமி நிலம் மீட்பு என்னாட்சு?” திமுகவுக்கு விசிக CHECK புது ரூட்டில் திருமா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi: கவரப்பேட்டை ரயில் விபத்து: கொதித்தெழுந்த ராகுல் காந்தி; சொன்ன அந்த வார்த்தை.!
கவரப்பேட்டை ரயில் விபத்து: கொதித்தெழுந்த ராகுல் காந்தி; சொன்ன அந்த வார்த்தை.!
TN Weather: மக்களே! வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு - எப்போ தெரியுமா?
TN Weather: மக்களே! வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு - எப்போ தெரியுமா?
Jasprit Bumrah:இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட்; துணைக் கேப்டனான பும் பும் பும்ரா!
Jasprit Bumrah:இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட்; துணைக் கேப்டனான பும் பும் பும்ரா!
Vidyarambham : ”வெற்றியை தன்வசமாக்கும் வித்யாரம்பம்” குழந்தைகள் கல்வித் தொடங்க ஏற்ற நாள்..!
Vidyarambham : ”வெற்றியை தன்வசமாக்கும் வித்யாரம்பம்” குழந்தைகள் கல்வித் தொடங்க ஏற்ற நாள்..!
10th 12th Exam dates: 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது?- வெளியான அறிவிப்பு
10th 12th Exam dates: 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது?- வெளியான அறிவிப்பு
சூடுபிடிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல்.. கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக களமிறங்கிய ஏ.ஆர்.ரஹ்மான்
சூடுபிடிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல்.. கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக களமிறங்கிய ஏ.ஆர்.ரஹ்மான்
“விஜய் ஏற்றிய கொடி கம்பத்திற்கு தீப ஆராதனை” கட்சி அலுவலகம் முழுவதும் பூஜை செய்த புஸ்ஸி ஆனந்த்!
“விஜய் ஏற்றிய கொடி கம்பத்திற்கு தீப ஆராதனை” கட்சி அலுவலகம் முழுவதும் பூஜை செய்த புஸ்ஸி ஆனந்த்!
Kavaraipettai Accident: கவரப்பேட்டை விபத்து! பீகார் நோக்கி சென்ற சிறப்பு ரயில் - பத்திரமாக செல்லும் பயணிகள்
Kavaraipettai Accident: கவரப்பேட்டை விபத்து! பீகார் நோக்கி சென்ற சிறப்பு ரயில் - பத்திரமாக செல்லும் பயணிகள்
Embed widget