காதலி இறந்த துக்கம் தாங்காமல் காதலன் எடுத்த விபரீத முடிவு; திண்டிவனம் அருகே சோகம்
வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மனம் உடைந்த சஞ்சீவி தனது வீட்டில் சீலிங் ஃபேனில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம்: மயிலம் அருகே காதலி உயிரிழந்த தகவல் அறிந்த நாளிலிருந்து வேதனையில் காதலன் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே பெரியாண்டப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தக்ஷிணாமூர்த்தி மகன் சஞ்சீவி (வயது 23). இவர் திண்டிவனத்தில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் காதலித்து வந்த ஒரு பெண் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். காதலி உயிரிழந்த தகவல் அறிந்த நாளிலிருந்து சஞ்சீவி வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மனம் உடைந்த சஞ்சீவி தனது வீட்டில் சீலிங் ஃபேனில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விவசாய வேலைகளை முடித்துவிட்டு பெற்றோர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது சஞ்சீவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக தெங்கியுள்ளார். இதை கண்ட பெற்றோர் கதறி அழுதனர். பின்னர் அருகில் இருந்தவர்கள் மயிலம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் மயிலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி பிரயோக பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Suicidal Trigger Warning.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104. சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம், எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ.புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)