மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
முதல்வர் குறித்து அவதூறு பேசிய வழக்கு; விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜரான சி.வி. சண்முகம்
முதல்வரையும் தமிழக அரசையும் அவதூறாக பேசிய வழக்கில் மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் இன்று நேரில் ஆஜர்
விழுப்புரம்: விழுப்புரத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வரையும் தமிழக அரசையும் அவதூறாக பேசிய வழக்கில் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் இன்று நேரில் ஆஜராகியதை தொடர்ந்து வழக்கு விசாரனையை வரும் 19 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
முதல்வர் குறித்த அவதூறு வழக்கு
விழுப்புரம் நகர பகுதியான பழைய பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் சார்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி. சண்முகம் தமிழக அரசையும் தமிழக முதலமைச்சரையும் தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக திமுக வழக்கறிஞர் சுப்பிரமணியம் விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கில் சிவி சண்முகம் நேரில் விளக்கமளிக்க வேண்டுமென நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டிருந்தார்.
வழக்கு ஒத்திவைப்பு
இந்த நிலையில், அந்த உத்தரவின் பேரில் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் விழுப்புரம் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினார். இதனை தொடர்ந்து இவ்வழக்கு விசாரனையை நீதிபதி பூர்ணிமா வரும் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். ஏற்கனவே செஞ்சி மற்றும் கோட்டக்குப்பம் பகுதியில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் சி.வி. சண்முகம் தமிழக அரசையும் முதல்வரையும் அவதூறாக பேசிய வழக்கில் 6 முறை விழுப்புரம் நீதிமனறத்தில் ஆஜராகி உள்ள வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
கிரிக்கெட்
கிரிக்கெட்
வணிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion