மேலும் அறிய

விழுப்புரம் மாவட்டத்தில் WASH-OUT ஆனா நாம் தமிழர் கட்சி - சிக்கலில் சிக்கிய சீமான்

தற்போது கட்சி போகும் பாதை மற்றும் தலைமையின் செயல்பாடுகள் கட்சியின் வெற்றிக்கு வழிவகுக்காது என மயிலம் தொகுதி பொருளாளர் ராஜேஷ் விலகியுள்ளார்.

விழுப்புரம்: நாம் தமிழர் கட்சியில் இருந்து மயிலம் தொகுதி பொருளாளர் ராஜேஷ் விலகியுள்ளார். ஏற்கனவே விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து 3 மாவட்டச் செயலாளர்கள் நாதகவில் இருந்து விலகிய நிலையில் தற்போது தொகுதி பொருளாளர் ஒருவர் விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மயிலம் தொகுதி பொருளாளர் விலகல்

விழுப்புரம் மாவட்டம் நாம் தமிழர் கட்சி மயிலம் தொகுதி பொருளாளர் ராஜேஷ் கட்சி பொறுப்பு, அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிக்கை. 
 
அறிக்கையில், தற்போது கட்சி போகும் பாதை மற்றும் தலைமையின் செயல்பாடுகள் கட்சியின் வெற்றி வழிவகுக்காது என்றும் கட்சி பொறுப்பாளர்களுக்கு மறியாதை இல்லை எனவே கட்சியின் பொருளாளராகவும் மற்றும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து 3 மாவட்டச் செயலாளர்கள் நாதகவில் இருந்து விலகிய நிலையில் தற்போது மேலும் ஒரு பொறுப்பாளர் விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாம் தமிழர் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகுவதால் கட்சி தலைமை கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் நெல்லை நாதக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தில் நிர்வாகிகளை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒருமையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சீமானிடம் வாக்குவாதம் செய்து கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் இருந்து வெளியேறினர். அதோடு முக்கியமான நிர்வாகிகள் கட்சியில் இருந்தும் வெளியேறினர்.

தொடர்ந்து வெளியேறும் நிர்வாகிகள்

விழுப்புரம் மாவட்ட நாம் தமிழர் கட்சியில் அனைவரும் வெளியேறும் நிலையில், இவர்கள் யாரையும் தடுத்து நிறுத்த நாம் தமிழர் கட்சியின் சீமான் நினைக்கவில்லை. போனால் போகட்டும்.. கட்சி யாரையும் நம்பி இல்லை என்று சீமான் கூறியதாக தெரிகிறது. அதைத்தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மேற்கு, வடக்கு,  மத்திய மாவட்ட செயலாளர்கள் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இப்படிப்பட்ட நிலையில் தான் நாம் தமிழர் கட்சியின் சேலம் மாநகர மாவட்டச் செயலாளர் அழகாபுரம் தங்கம், கட்சியிலிருந்து விலகுவதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். கட்சியில் 10 வருடங்களுக்கும் மேலாக வேலை செய்தும் மரியாதை இல்லை என்று கூறி அவர் கட்சியில் இருந்து வெளியேறி உள்ளார். கட்சியில் தொடர்ந்து இரண்டாம் கட்ட நிர்வாகிகள் சீமானின் செயலை எதிர்த்து கட்சியில் இருந்து வெளியேறுவது வழக்கம் ஆகி உள்ளது.

இதுகுறித்து கட்சியில் இருந்து வெளியேறிய நிர்வாகி கூறுகையில்.,

இது நாள் வரை நாங்கள் செய்த செயல்கள், உடல் உழைப்பு மற்றும் பண விரயம் இவை எவையும் அவர் பொருட்படுத்தும் படி இல்லை. இது அனைத்து பொறுப்பாளருக்கும் சமம் என தெரிவித்ததற்கு, இதற்கு பதில் கூறிய ஒருங்கிணைப்பாளர் சீமான் , இந்த தொகுதியில் உள்ள எவருக்கும் நான் பதில் சொல்ல முடியாது மற்றும் நீங்கள் என்னிடம் கேள்வியும் கேட்க கூடாது என் இஷ்டப்படி தான் நான் செய்வேன். நீங்கள் இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் கிளம்புங்கள் உங்களை யாரும் போஸ்டர் ஒட்டவும் சொல்லவில்லை செலவு செய்யவும் கூறவில்லை என்று கூறினார்,

பலமுறை பேசியும் நான் செய்வது தான் செய்வேன் நீங்கள் இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் கிளம்புங்கள் என்று கூறியதன் அடிப்படையில் மேலும் 2026 தேர்தலுக்கு இப்பொழுதே முகம் தெரியாத வேட்பாளரை அறிவிக்க வேண்டியதேவை என்ன? அண்ணா நாங்கள் உங்களிடம் கேட்டது பணமோ பொருளோ அல்ல எங்களுக்கான மரியாதை மற்றும் எங்களுக்கான அங்கீகாரம் இதுவே உங்களால் தர முடியவில்லை.

எனவே மன வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன் நாம் தமிழர் கட்சியில் இருந்து அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினரிலிருந்து விலகுகின்றேன் தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 14 மாவட்டங்களில் மழை: எங்கெல்லாம்? - வானிலை மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 14 மாவட்டங்களில் மழை: எங்கெல்லாம்? - வானிலை மையம் எச்சரிக்கை
"100 கோடி கேக்குறாங்க" அதிமுகவுடன் டீல் பேசும் கட்சிகள்.. ஓப்பனாக பேசிய திண்டுக்கல் சீனிவாசன்!
மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?
மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?
TVK DMK: தவெக நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச், களமிறங்கிய உளவுத்துறை -  விஜயின் அடிமடியில் கைவைத்த திமுக?
TVK DMK: தவெக நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச், களமிறங்கிய உளவுத்துறை - விஜயின் அடிமடியில் கைவைத்த திமுக?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Keerthi Suresh Wedding : கீர்த்தி சுரேஷ்-க்கு டும் டும் 15 வருடம் காதலா!காதலன் யார் தெரியுமா?Tiruchendur Elephant Attack : உணவு கொடுத்த பக்தர்!மிதித்து கொன்ற கோவில் யானை..Karur Women Crying : ’’Dress-லாம் கிழிச்சு அடிக்கிறாங்க’’கைக்குழந்தையுடன் கதறும் தாய்!NTK cadre resigns : நாதகவின் முக்கிய விக்கெட்!’’சீமான் தான் காரணம்’’பரபரக்கும் சேலம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 14 மாவட்டங்களில் மழை: எங்கெல்லாம்? - வானிலை மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 14 மாவட்டங்களில் மழை: எங்கெல்லாம்? - வானிலை மையம் எச்சரிக்கை
"100 கோடி கேக்குறாங்க" அதிமுகவுடன் டீல் பேசும் கட்சிகள்.. ஓப்பனாக பேசிய திண்டுக்கல் சீனிவாசன்!
மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?
மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?
TVK DMK: தவெக நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச், களமிறங்கிய உளவுத்துறை -  விஜயின் அடிமடியில் கைவைத்த திமுக?
TVK DMK: தவெக நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச், களமிறங்கிய உளவுத்துறை - விஜயின் அடிமடியில் கைவைத்த திமுக?
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே… இன்னும் 2 நாள்தான்; டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன தெரியுமா?
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே… இன்னும் 2 நாள்தான்; டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன தெரியுமா?
சென்னையில் நடிகையை டார்ச்சர் செய்த போதை ஆசாமி..‌ பிடித்துக்கொடுத்த பாஜக பிரமுகர் - நடந்தது என்ன?
சென்னையில் நடிகையை டார்ச்சர் செய்த போதை ஆசாமி..‌ பிடித்துக்கொடுத்த பாஜக பிரமுகர் - நடந்தது என்ன?
Kasthuri: நடிகை கஸ்தூரிக்கு ஜெயிலில் A வகுப்பு சிறையா? கொசுக்கடி தாங்கல போல!
Kasthuri: நடிகை கஸ்தூரிக்கு ஜெயிலில் A வகுப்பு சிறையா? கொசுக்கடி தாங்கல போல!
Post Office Money Double Scheme: ரூ.5 வெச்சா ரூ.10, ரூ.100 போட்டா ரூ.200 - பணத்தை இரட்டிப்பாக்கும் தபால் நிலைய சேமிப்பு திட்டம்
Post Office Money Double Scheme: ரூ.5 வெச்சா ரூ.10, ரூ.100 போட்டா ரூ.200 - பணத்தை இரட்டிப்பாக்கும் தபால் நிலைய சேமிப்பு திட்டம்
Embed widget