வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சிறுமிகள்; போராடி மீட்ட இளைஞர்கள் - அதிர்ச்சி வீடியோ
சிறுவந்தாடு அருகே மலட்டாற்று தரைப்பாலத்தில் குளித்துக் கொண்டிருந்த சிறுமிகள் வெள்ளத்தில் அடித்து செல்லபட்டதை அடுத்து இரண்டு இளைஞர்கள் சிறுமிகளை மீட்டு கொண்டு வரும் வீடியோ காட்சி வைரல்

விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு அருகே மலட்டாற்று தரைப்பாலத்தில் குளித்துக் கொண்டிருந்த சிறுமிகள் வெள்ளத்தில் அடித்து செல்லபட்டதை அடுத்து இரண்டு இளைஞர்கள் சிறுமிகளை மீட்டு கொண்டு வரும் வீடியோ காட்சி பதிவுகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
விழுப்புரம் :மலட்டாற்று தரைப்பாலத்தில் குளித்துக் கொண்டிருந்த சிறுமிகள் வெள்ளத்தில் அடித்து செல்லபட்டதை அடுத்து இரண்டு இளைஞர்கள் சிறுமிகளை மீட்டு கொண்டு வரும் வீடியோ காட்சி@abpnadu pic.twitter.com/ipTgLBoBbF
— SivaRanjith (@Sivaranjithsiva) September 12, 2022
சாத்தனூர் அனையில் திறக்கப்பட்டுள்ள வெள்ள நீரால் மலட்டாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக ஆற்றில் வெள்ள நீர் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது மலட்டாற்றில் நீர் குறைந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட சிறுவந்தாடு அருகே உள்ள பரசுரெட்டிப்பாளையம் மேட்டுப்பாளையம் இடையேயான தரைப்பாலம் மூழ்கி முட்டியளவு நீர் செல்லுகின்ற நிலையில் ஞாயிற்று கிழமை தரைப்பாலம் பகுதியில் இரண்டு சிறுமிகள் திடீரென நீரில் அடித்து செல்லப்பட்டனர். இதனையடுத்து அருகில் குளித்து கொண்டிருந்த இளைஞர்கள் இரண்டு சிறுமிகளை மீட்டு கரைப்பகுதிக்கு கொண்டு வந்தனர். சிறுமிகளை இளைஞர்கள் மீட்டு கரைப்பகுதிக்கு கொண்டுவருவதை அப்பகுதியில் இருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ பதிவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இளங்கலை பட்டப்படிப்புகளில் தமிழ் கட்டாயம்: உயர் கல்வித்துறை உத்தரவு
shashi tharoor : காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆகிறாரா சசிதரூர்? உள்கட்சித் தேர்தல் பரபரப்பு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

