அண்ணாமலை படித்ததற்கு ஏற்றது போல் பேச வேண்டும் - அமைச்சர் செஞ்சி மஸ்தான்
விழுப்புரம்:- அண்ணாமலை படித்ததற்கு ஏற்றது போல் பேச வேண்டும் - அமைச்சர் செஞ்சி மஸ்தான்
மரக்காணம் அருகே கழுவெளி பகுதியில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணிகளை சிறுபான்மையினர் நல துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டு வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதால் பணிகளை துரிதப்படுத்த துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கந்தாடு பகுதியில் கழுவெளி பகுதியில் கடல் நீர் உட்பகுவதை தடுப்பதற்காக கடந்த அதிமுக ஆட்சியில் 161 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டுவதற்காக நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் துவங்கப்பட்டது இந்நிலையில் தற்போது ஆட்சி அமைத்துள்ள திமுக அரசு அதன் பணிகளை மேற்கொண்டு வருகிறது, இந்த நிலையில் வடகிழக்கு பருவமுறை துவங்க உள்ள நிலையில் தடுப்பணையின் பணிகளை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நல துறை அமைச்சர் ஆய்வு கொண்டு பணிகளை துரிதப்படுத்த துணை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து மரக்காணம் பகுதியில் மீன் விற்பனை கூடம் அமைப்பதற்கு பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் மீன் விற்பனை கூடம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதற்காக இடத்தினை ஆய்வு மேற்கொண்டார், மேலும் மரக்காணம் பேருந்து நிலையம் விரிவாக்கத்திற்கான பணி மேற்கொள்ளப்பட உள்ளதையடுத்து அதற்கான இடத்தையும் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
உடன் மாவட்ட ஆட்சித்தலைவர்,மரக்காணம் ஒன்றிய பெருந்தலைவர், துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்தனர்.@mkstalin | @Udhaystalin @arivalayam | @DMKViluppuram
— Gingee K.S.Masthan ( செஞ்சி மஸ்தான் ) (@GingeeMasthan) September 10, 2022
(2/2) pic.twitter.com/Bb9wtrdIEy
ஆய்வின் இறுதியில் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் மஸ்தான் கூறியதாவது:-
வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதால் கழுவெளி பகுதியில் நடைபெறும் தடுப்பணை பணிகளை ஆய்வு மேற்கொண்டு அதை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் மழை காலங்களில் மரக்காணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவு பாதித்து வருவதால் அதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வெள்ள சேதத்தை தவிர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அண்ணாமலை தொடர்ந்து நிதி அமைச்சரை விமர்சித்து வருவது குறித்த கேள்விக்கு அண்ணாமலை படித்ததற்கு ஏற்றது போல் பேச வேண்டும் எனவும், அனைவரும் படிக்க வேண்டும், அனைத்து நிலைகளிலும் கல்வி வழங்க வேண்டும் என்பதற்காக திராவிட மடல் ஆட்சி பாடுபட்டுக் கொண்டிருக்கிறது, எனவே அவர் படித்ததற்கு ஏற்ற போல் பதில் கூறினால் அவருக்கு அனைத்து இடங்களிலும் நான் பதில் தர தயாராக உள்ளேன் என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்