'மொத்தமா போச்சி சார்' நள்ளிரவில் எரிந்த இ-பைக்... வெடித்து சிதறிய பேட்டரிகள்
திண்டிவனம் அருகே வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்ட ஒரு எலக்ட்ரிக் பைக்கு தீ பற்றி எரிந்ததில் அருகில் இருந்த இரண்டு பைக்குகளும் சேதம்.
விழுப்புரம்: திண்டிவனம் அருகே சார்ஜ் போட்ட எலக்ட்ரிக் பைக் நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. எலக்ட்ரிக் பைக்கில் இருந்த பேட்டரி வெடித்து சிதறியது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டு பகுதியில் வசித்து வருபவர் மணி. இவர் எலக்ட்ரிக் பைக்கை வீட்டின் முன்பாக நிறுத்தி சார்ஜ் போட்டுவிட்டு உறங்கச் சென்றுள்ளார். அப்பொழுது சிறிது நேரம் கழித்து திடீரென வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு எலக்ட்ரிக் பைக்கு தீ பற்றி எரிந்துள்ளது. இதனைக் கண்டு வெளியே வந்த மணிகண்டன் தீயை அணைக்க முயற்சி செய்துள்ளார்.
அப்போது தீ கட்டுக்கடகாமல் எறிந்த நிலையில் எலக்ட்ரிக் பைக்கில் இருந்த பேட்டரி வெடிக்க தொடங்கியது. இதில் அச்சமடைந்த மணிகண்டன் திண்டிவனம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். தகவல் என் பேரில் வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அனைத்தனர். இருப்பினும் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இரண்டு எலக்ட்ரிக் பைக் வாகனமும், ஒரு பேஷன் ப்ரோ இருசக்கர வாகனம் தீயில் கருகியது. மேலும் வீடுகளில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் சேதம் அடைந்தது. இதனால் அப்பகுதியில் கரும் புகை சூழ்ந்ததால் பரபரப்பு நிலவியது. சமீப காலமாக எலக்ட்ரிக் பைக்குகள் பற்றி எரிவது வழக்கமாக உள்ள நிலையில் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தீப்பற்றி எரியும் இ-பைக்
இ-பைக் எனப்படும் மின்சார வாகனங்கள் சமீப காலமாக தீப்பற்றி எரிந்ததாக வெளிவரும் செய்திகள், அதன் பயன்பாட்டாளர்களை கலக்கத்தில் ஆழ்த்துகின்றன. பசுமை உலகுக்கு மக்களை மாற்ற கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான பேட்டரி வாகனங்களை வாங்க இந்திய அரசு பல்வேறு மானிய திட்டங்களையும் வரிச்சலுகைகளையும் அறிவித்துள்ளது. வழக்கமாக இ பைக்குகளின் ஃப்ரேமில் பெரிய லித்தியம் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும். அதை கவனமாகக் கையாளாவிட்டால் தீ ஆபத்தை உண்டாக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
இ-பைக்குகள் தீப்பிடிப்பது ஏன்?
இ-பைக்குகளில் லித்தியம் பேட்டரிகள் இரண்டு எலக்ட்ரிக் டெர்மினல்களைக் கொண்டிருக்கின்றன. இடையில் ஒரு எலக்ட்ரோலைட் திரவம் உள்ளது. பேட்டரி சார்ஜ் செய்யப்படும்போதும் டிஸ்சார்ஜ் செய்யப்படும்போதும், சார்ஜ் செய்யப்பட்ட அயனிகள் ஒரு மின் முனையிலிருந்து மற்றொன்றுக்கு நகரும். இந்த எலக்ட்ரோலைட் திரவம் எரியக்கூடிய தன்மை வாய்ந்தது. இது பொதுவாக நடக்ககூடியது அல்ல. ஆனால் பேட்டரி சேதமடைந்தாலோ அதிக வெப்பமடைந்தாலோ, இந்த திரவம் எரிய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
மேலும், பேட்டரி செல் கூடுதலாக வெப்பம் அடைந்தாலும் அருகில் உள்ள (தெர்மல் ரன் அவே எனப்படும் செயல்முறை) அதன் பாதைக்கும் அந்த வெப்பம் பின்தொடர்கிறது. அதன் அழுத்தம் விரைவில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகமாகும்போது பேட்டரி வெடிப்பு ஏற்பட்டு தீ ஏற்படுகிறது.
இ-பைக்குகள் நீண்ட காலமாகமே புழக்கத்தில் உள்ளன. இதுபோலவே, சமீப ஆண்டுகளாக இ-கார்களும் கார் சந்தையில் பிரபலமாகி வருகின்றன. டெஸ்லா போன்ற சில நிறுவனங்கள் இ-பஸ்களை கூட தயாரித்துள்ளன.
தீ விபத்து ஏற்பட்டால் என்ன செய்வது?
உங்கள் இ-பைக்கின் பேட்டரியில் கவனம் செலுத்துங்கள். அதுதான் தீ ஏற்படுவதற்கான மூலமாகும். தீ விபத்து ஏற்படும் முன் நீங்கள் ஆபத்தின் அறிகுறிகளைக் கண்டறியலாம். ஒரு விசித்திரமான வாசனை, வடிவத்தில் மாற்றம், கசிவு, ஒற்றைப்படை சத்தம் அல்லது அது மிகவும் சூடாக உணர்தல் போன்றவை பேட்டரியின் பலவீனமான நிலையை உணர்த்தும் சமிக்ஞைகள்.
தீ ஏற்பட்டால், அதை நீங்களே சமாளிக்க முயற்சிக்காதீர்கள்; லித்தியம் பேட்டரி தீ குறிப்பாக ஆபத்தானது. ஏனெனில் பேட்டரி உறை அதிக வெப்பநிலையில் வெடித்து, குப்பைகள் பறக்கும் அபாயத்தில் இருக்கும். அதற்கு பதிலாக, உடனடியாக அந்த பகுதியை காலி செய்து விட்டு அவசர சேவையை அழைக்கவும்.