மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில் அரசு பேருந்துகவிழ்ந்து விபத்து - 30க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்
மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில் அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 30க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்
விழுப்புரம் : மரக்காணம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து, 30க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்.
கிழக்கு கடற்கரை சாலையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து
சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தது. அரசு பேருந்து மரக்காணம் அருகே வந்து கொண்டிருந்தபோது சாலையின் குறுக்கே திடிரென இரு சக்கர வாகனம் வந்ததால் அதன் மீது மோதாமல் இருப்பதற்காக அரசு பேருந்து ஓட்டுனர் சாலையின் ஓரமாக இயக்கியுள்ளார்.
30க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்
அப்பொழுது டிரைவர் கட்டப்பட்ட இழந்து சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அரசு பேருந்தில் பயணித்த 30க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். இந்த நிலையில் பேருந்து விபத்தின் அருகில் இருந்தவர்கள் உடனடியாக பேருந்தில் இருந்தவர்களை மீட்டு படுகாயம் அடைந்தவர்களை புதுச்சேரி மருத்துவமனைக்கும், லேசான காயமடைவதை மரக்காணம் அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர்.