மேலும் அறிய

உரிய அனுமதி பெறாமல் இறால் பண்ணை; கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - விழுப்புரம் ஆட்சியர் எச்சரிக்கை

உரிய அனுமதி பெறாமல் இறால் பண்ணை அமைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், இறால் வளர்ப்பில் வளர்ச்சி தொழில்நுட்பம் மற்றும் நிகழ்கால பிரச்சனைகள் குறித்து விவசாயிகளுடனான கருத்தரங்கு கூட்டம் மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் நேற்று (24.01.2023) நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் கூறுகையில், “தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் தொழிலை மேம்படுத்திடும் பொருட்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியும் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கியும் வருகிறார்கள். மேலும்,மீனவர்கள் தங்களின் வாழ்வாதார தொழிலான மீன் வளர்ப்பு மற்றும் இறால் வளர்ப்பு குறித்து போதிய பயிற்சி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டு மாவட்ட அளவில் கருத்தரங்கு நிகழ்ச்சி நடத்திட உத்தரவிட்டிருந்தார்கள்.

அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில், இறால் வளர்ப்பில் வளர்ச்சி தொழில்நுட்பம் மற்றும் நிகழ்கால பிரச்சனைகள் குறித்து விவசாயிகளுடனான கருத்தரங்கு கூட்டம் நடைபெற்று வருகிறது. இறாலின் ஏற்றுமதி மதிப்பின் காரணமாக அதிக இலாபம் ஈட்டப்படுவதால் உவர்நீர் இறால் வளர்ப்பு 1991-1994ஆம் ஆண்டு காலகட்டத்தில் குறிப்பாக ஆந்திரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் பெரிய அளவில் தொடங்கியது. உலக சந்தையில் இறால் மற்றும் இறால் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருவதால் சர்வதேச சந்தையில் இறால் தேவைக்கான இடைவெளி அதிகரிப்பால் இயற்கையாக அதனை நிரப்பும் விதமாக இறால் உற்பத்தி அதிகரிக்க வேண்டும்.

இயற்கையாக கிடைக்கும் இறாலின் உற்பத்தி போதுமானதாக இல்லை என்பதால் முறையான இடத்தேர்வுடன் உரிய பதிவுகள் பெற்று உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் உவர்நீர் இறால் வளர்ப்பு மேற்கொண்டு இறாலின் தேவைப்பாடு ஈடுசெய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாட்டின் மதிப்பிடப்பட்ட உவர்நீர் இறால் வளர்ப்பு பரப்பு 56,000 ஹெக்டேர் அதனில் சாகுபடி மேற்கொள்ள உகந்த பரப்பு 18,000 ஹெக்டேரில் 8,400 ஹெக்டேர் பரப்பு இறால் வளர்ப்பு மேற்கொள்ளப்பட்டதில் இயற்கை இடர் மற்றும் இதர பிரச்சனைகளால் தற்பொழுது அதனில் பாதிஅளவு 55.3மூ உவர்நீர்ப்பரப்பில் 4800 ஹெக்டேரில் மட்டுமே இறால் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதிலிருந்து 35,000/- 40,000/- மெட்ரிக் டன் இறால் உற்பத்தி செய்யப்படுகிறது. மேற்படி விழுப்புரத்தில் 2072 ஹெக்டேர் உகந்த இடமாக இருப்பினும் 140 ஹெக்டேர் உவர்நீர் பரப்பு மட்டுமே இறால் வளர்ப்பு மேற்கொள்ளப்பட்டதில் தற்பொழுது உற்பத்தி கடந்த வருடத்தில் 1500 மெட்ரிக் டன்னாக உள்ளது. 97% இறால் பண்ணைகள் 2 ஹெக்டேருக்கு கீழ் உள்ளன. 3% இறால் பண்ணைகள் மட்டுமே 2 ஹெக்டேருக்கு மேல் உள்ளது.

மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் 98 இறால் பண்ணைகள் முறையாக பதிவுகள் மேற்கொண்டு 128.82 ஹெக்டேர் பரப்பளவில் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் இறால்குஞ்சு பொறிப்பகங்களில் 39 எண்ணிக்கை விழுப்புரம் கடற்கரையோரம் அமைந்துள்ளது. இறால் குஞ்சு பொறிப்பகத்தில் ஆண்டிற்கு 5,560 மில்லியன் PL உற்பத்தி செய்யப்படுகிறது. இதனில் 40-45% எண்ணிக்கையிலான இறால்  குஞ்சுகள் உள்ளுரில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மீதமுள்ள 50-55% எண்ணிக்கையிலான இறால் குஞ்சுகள் இதர மாநிலமான கேரளா, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, மஹாராஷ்டிரா, ஒரிசா மற்றும் மேற்கு வங்க மாநிலத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இறால் பண்ணை மற்றும் இறால்குஞ்சு பொறிப்பகங்கள் மூலம் அருகிலுள்ள கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுவதுடன் 200 தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் 1500 பணியாளர்கள் இறால் பண்ணை மற்றும் இறால்குஞ்சு பொறிப்பகங்களில் பணியாற்றி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் இறால் பண்ணை மூலம் பெறப்பட்ட நிகர இலாபம் தோராயமாக ரூ.18 கோடி மற்றும் இறால்குஞ்சு பொறிப்பகத்தின் நிகர இலாபம் தோராயமாக ரூ.67 கோடி வரை ஈட்டப்பட்டுள்ளது.

இதுவரை இறால் பண்ணை பதிவு மேற்கொள்ள பரிந்துரை மாவட்ட அளவிலான குழு மூலம் செய்யப்பட்டது. அதனை இன்னும் எளிதாக்கும் வகையில் துணை பிரிவு அளவிலான குழுவால் (Sub Divisional Level Committee) 5 ஹெக்டேர் வரை பதிவு செய்திட கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்திடமும், 5 ஹெக்டேருக்கு மேல் உள்ள இறால் பண்ணைகள் மாவட்ட அளவிலான குழு மூலம் அனுமதி பெற்ற பின்னரே இறால் பண்ணை அமைத்திட வேண்டும். உரிய அனுமதி பெறாமல் இறால் பண்ணை அமைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அத்துடன் பிரதான் மந்திரி மத்திய மீன்வள மேம்பாட்டு திட்டம் மூலம் இறால் வளர்ப்பினை ஊக்குவிக்கும் வகையில் புதிதாக 1 ர்ய அளவில் பண்ணை அமைத்திட 40% மானியமாக ரூ.14 இலட்சத்தில் ரூ.5.60 இலட்சத்து மானியத் தொகை வழங்கும் திட்டம் மற்றும் உயிர் கூழ்ம திரள் முறையில் உவர்நீர் இறால் வளர்ப்பு (Bio-Floc System) தொழில்நுட்ப முறையில் 40% மானியமாக ரூ.18 இலட்சத்தில் ரூ.7,20,000/- வீதம் மானியம் வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது.

மேலும், PMMSY திட்டத்தில் (National Fisheries Development Board) தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் மூலம் "இறால் பயிர் காப்பீடு" என்ற முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 0.5 Ha - 2 Ha வரை பண்ணை வைத்திருப்போர் காப்பீடு செய்து பயன்பெறலாம். 1Ha -க்கு காப்பீடு தொகை ரூ.18,880 முதல் ரூ.28,320/- வரை உள்ளது. அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கழுவெலி பகுதியினை சுற்றி அமைந்திருக்கும் மற்றும் அமைக்கப்படும் இறால் பண்ணை உரிமையாளர்கள் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆணைப்படி கழுவெலி பகுதிக்கு எவ்வித சேதம் ஏற்படுத்தாமலும், பைப்லைன் பதித்தல் ஏதும் இல்லாமல் Coastal Auaculture authority-யின் உரிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் சட்ட விதிகளை பின்பற்றி சூழ்நிலை பாதிப்பு ஏதும் எழாவண்ணம் சிறப்பான இறால் வளர்ப்பினை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், இறால் குஞ்சு பொறிப்பகங்களும் தரமான Post Larva-க்களை உற்பத்தி செய்து இறால் உற்பத்திக்கு வழிவகுக்க வேண்டும். அரசு நலத்திட்டம் மற்றும் வழிகாட்டு நெறிமுறை மூலம் உரிய பதிவுகள் மேற்கொண்டு விவசாயிகள் இறால் வளர்ப்பு மேற்கொண்டு இறால் உற்பத்தியை பெருக்குவதன் மூலம் புரத உணவு பொருள் உற்பத்தியை அதிகரிப்பதுடன் அந்நியச் செலவாணியை அதிகரிக்கச் செய்திட வேண்டும்” என தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்VCK vs PMK  | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்Shakthi Vasudevan | GP Muthu Fight | ரகளை செய்த GP முத்து..BEEP-ல் பூசாரியுடன் சண்டை..என்ன காரணம் தெரியுமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
Embed widget