மேலும் அறிய

நானும் மதுர காரண்டா... சீறிய ஏடிஎஸ் பி... பதற்றமான விக்கிரவாண்டி... நடந்தது என்ன?

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொறவி வாக்குச்சாவடி மையத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு.

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்  Vikravandi bypoll

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தொறவி கிராமத்தில் வாக்குச்சாவடி மையத்திலிருந்து 100 மீட்டருக்குள்ளாக இருந்த பாமகவினரை போலீசார் வெளியேற கூறிய போது பாமகவினருக்கும் போலீசருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பொழுது ஏடிஎஸ்பி சீராளஞ்சன் நா மதுரைக்காரன் தான், அடித்து விரட்டி விடுவேன் என கூறியதாகவும், இதனால் போலீஸாருக்கும் பாமகவினருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் வழக்கறிஞர் பாலு சம்பவ இடத்தில் பேசி வருகிறார். 

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் Vikravandi bypoll வாக்குபதிவு தொடங்கியது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் சி. அன்புமணி ஆகியோர் வாக்கினை பதிவு செய்தார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 4  மணி நிலவரப்படி 54.44 % வாக்குப்பதிவாகியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி, கடந்த 20 நாள்களுக்கு மேலாக நடைபெற்று வந்த தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுகவின் புகழேந்தி உடல்நலக்குறைவால் ஏப்ரல் 6-ஆம் தேதி காலமான நிலையில், இத்தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. விக்கிரவாண்டி தொகுதிக்கு மட்டும் ஜூலை 10 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்கிரவாண்டி தொகுதியைச் சேர்ந்த வெளியூர்களில் பணிபுரியும் நபர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்கள்

விக்கிரவாண்டி தொகுதியில்  1 லட்சத்து 16 ஆயிரத்து 962 ஆண் வாக்காளர்களும் 1 லட்சத்து 20 ஆயிரத்து 40 பெண் வாக்காளர் 29 மாற்று பாலினத்தவர் என மொத்தமாக 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் களத்தில் 29 வேட்பாளர்கள் :

இதைத் தொடர்ந்து ஜூன் 14 முதல் 21-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கலும், 24ஆம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனையும், 26 ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இத்தொகுதியில் திமுக சார்பில் அன்னியூர் அ.சிவா, பாட்டாளி மக்கள் கட்சியின் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் பொ. அபிநயா உள்ளிட்ட 11 கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேச்சை வேட்பாளர்கள் என 29 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.

276 வாக்குச்சாவடி மையங்கள் 

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக 276 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நாளன்று பணிபுரியவுள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றம் வாக்குப்பதிவு நிலை அலுவலர்களுக்கு பணி ஆணை ஒதுக்கீடு செய்யும் பணி கணினி மூலம் குலுக்கல் முறையில் (Third Level Randomization )  நடத்தப்பட்டது. 3 மிகவும் பதற்றமான வாக்கு சாவடிகள் , 41 பதற்றமான வாக்குச் சாவடிகள் உள்ளன.  220 CRPF உட்பட 2651 காவல் ஆளிநர்கள் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் பணியில் 1355 அலுவலர்கள் : 

276 வாக்குச்சாவடி மையங்களில், 331 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், 331 வாக்குப்பதிவு நிலை அலுவலர்கள் -1, 331 வாக்குப்பதிவு நிலை அலுவலர்கள் - 2, 331 வாக்குப்பதிவு நிலை அலுவலர்கள் -3, 31 வாக்குப்பதிவு நிலை அலுவலர்கள் - 4 என மொத்தம் 1355 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்புதிவு நிலை அலுவலர்களுக்கும், 44 பதட்டமான மற்றும் மிகவும் பதட்டமான வாக்குச்சாவடிகளில் பணிபுரியவுள்ள 53 நுண்பார்வையாளர்களுக்கும் பணி ஆணை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பரிதாபமாக பறிபோன 2 குழந்தைகளின் உயிர்... வீட்டில் எலி மருந்து அடித்த நபர் கைது - நடந்தது என்ன?
பரிதாபமாக பறிபோன 2 குழந்தைகளின் உயிர்... வீட்டில் எலி மருந்து அடித்த நபர் கைது - நடந்தது என்ன?
Top 10 News: இலங்கையில் ஆளுங்கட்சி முன்னிலை! ஐயப்பன் கோயில் நடைதிறப்பு - இதுவரை நடந்தது!
Top 10 News: இலங்கையில் ஆளுங்கட்சி முன்னிலை! ஐயப்பன் கோயில் நடைதிறப்பு - இதுவரை நடந்தது!
Tamilnadu RoundUp: அரியலூரில் முதலமைச்சர் ஆய்வு! சென்னையில் தொடரும் மழை!
Tamilnadu RoundUp: அரியலூரில் முதலமைச்சர் ஆய்வு! சென்னையில் தொடரும் மழை!
Kanguva: போட்ட காசை எடுக்குமா கங்குவா? முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!
Kanguva: போட்ட காசை எடுக்குமா கங்குவா? முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலாMa Subramanian Issue | மா.சு-வை மாத்துங்க!அமைச்சராகும் எழிழன்? பரபரக்கும் சுகாதாரத்துறைAadhav Arjuna ED Raid |வழிக்கு வராத ஆதவ் !ரவுண்டு கட்டும் பாஜகED ரெய்டின் பின்னணி?Kasthuri Controversy | கைதாகிறாரா கஸ்தூரி? அதிரடி காட்டிய நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பரிதாபமாக பறிபோன 2 குழந்தைகளின் உயிர்... வீட்டில் எலி மருந்து அடித்த நபர் கைது - நடந்தது என்ன?
பரிதாபமாக பறிபோன 2 குழந்தைகளின் உயிர்... வீட்டில் எலி மருந்து அடித்த நபர் கைது - நடந்தது என்ன?
Top 10 News: இலங்கையில் ஆளுங்கட்சி முன்னிலை! ஐயப்பன் கோயில் நடைதிறப்பு - இதுவரை நடந்தது!
Top 10 News: இலங்கையில் ஆளுங்கட்சி முன்னிலை! ஐயப்பன் கோயில் நடைதிறப்பு - இதுவரை நடந்தது!
Tamilnadu RoundUp: அரியலூரில் முதலமைச்சர் ஆய்வு! சென்னையில் தொடரும் மழை!
Tamilnadu RoundUp: அரியலூரில் முதலமைச்சர் ஆய்வு! சென்னையில் தொடரும் மழை!
Kanguva: போட்ட காசை எடுக்குமா கங்குவா? முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!
Kanguva: போட்ட காசை எடுக்குமா கங்குவா? முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!
திக் திக் நிமிடங்கள்! ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட 7 மாத கைக்குழந்தை - பரபரப்பில் திண்டிவனம்
திக் திக் நிமிடங்கள்! ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட 7 மாத கைக்குழந்தை - பரபரப்பில் திண்டிவனம்
Tim Southee : ஓய்வு பெறுகிறார் டிம் சவுதி.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்
Tim Southee : ஓய்வு பெறுகிறார் டிம் சவுதி.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்
மதுரையில் நடுரோட்டில் கிடந்த பாதி எரிந்த தலை! பயத்தில் தெறித்து ஓடிய வாகன ஓட்டிகள்!
மதுரையில் நடுரோட்டில் கிடந்த பாதி எரிந்த தலை! பயத்தில் தெறித்து ஓடிய வாகன ஓட்டிகள்!
யானை தந்ததால் செய்த பொம்மைகள்! இத்தனை கோடியா? பகீர் கிளப்பும் பின்னணி
யானை தந்ததால் செய்த பொம்மைகள்! இத்தனை கோடியா? பகீர் கிளப்பும் பின்னணி
Embed widget