மேலும் அறிய
Advertisement
கடலூரில் வாகன ஓட்டிகளின் கண்களை மறைத்த கடும் பனிமூட்டம்
இன்று காலை கடலூரில் இதுவரை இல்லாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களில் முகப்பு வெளிச்சத்தை ஒளிர விட்டபடி சென்றதை பார்க்க முடிந்தது
மார்கழி மாதம் பனிப்பொழிவு துவங்கும். இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலேயே பனிப்பொழிவு துவங்கியது, பின்னர் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வந்தது நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உறைபனி நிலவியது இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். கடலூர் மாவட்டத்தில் மார்கழி மாதம் தொடங்கிய முதல் பனிப்பொழிவு இருந்து வந்த நிலையில் இன்று காலை கடலூரில் இதுவரை இல்லாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது இதன் காரணமாக வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களில் முகப்பு வெளிச்சத்தை ஒளிர விட்டபடி சென்றதை பார்க்க முடிந்தது.
கடலூர் அண்ணா பாலத்தில் இருந்து கெடிலம் ஆற்றை, பார்த்த போது, ஆறு தெரியாத அளவுக்கு எங்கும் பனி மூட்டமாக இருந்தது இதேபோல் திருவந்திபுரம் பகுதியிலும் பாலத்தில் எதிரே வரும் வாகனம் தெரியாத அளவிற்கு கெடிலம் ஆற்றினை புகை மண்டலம் போல் பனி சூழ்ந்து காணப்பட்டது, மேலும் பெரும்பாலான விளைநிலங்களையும் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு பனி சூழ்ந்தது, ரயில் தடங்களும் கண்களுக்குத் தெரியாத அளவிற்கு காட்சி அளித்தது. பின்னர் காலை விடிந்த பிறகும் சூரியன் உதித்தாலும், அதன் கதிர்கள் தெரியாத அளவுக்கு உறை பனியாக இருந்ததை பார்க்க முடிந்தது, மேலும் பனிப்பொழிவு காரணமாக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் அமைந்துள்ள மத்திய பேருந்து நிலையம் பனி மூட்டமாக காணப்பட்டது.
மேலும் கடலூரின் முக்கிய சாலைகளான பாரதி சாலை, அண்ணா சாலை போன்ற சாலைகளில் கடந்த ஆண்டு தொடங்கிய மார்கழி மாதத்தில் இருந்து தற்போது வரை கடலூரில் இந்த அளவிற்கு பணி பொழிந்தது இல்லை , அதிக அளவில் பணி பொழிந்ததால் குளிர் பிரதேசங்களில் இருக்கும் பனி மூட்டத்தை போன்று காட்சி அளித்ததாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதே போல் சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் என கடலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பனி மூட்டம் சூழ்ந்து காணப்பட்டது. இந்த பனி மூட்டம் காலை 8.30 மணியை தாண்டியும் நீடித்தது இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் பொங்கலுக்காக பானை, கரும்பு, மஞ்சள் போன்ற பொருட்களை விற்பனை செய்த வியாபாரிகள் மிகவும் சிரமப்பட்டனர், பின்னர் காலை 9 மணிக்கு மேல் பனி குறைந்து சூரியன் வெளியே தெரிய தொடங்கியது , பின்னரே மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி தங்கள் பணிகளை தொடர்ந்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
சென்னை
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion