மேலும் அறிய

TVK Vijay Maanadu: தவெக மாநாடு தேதி இதான்...! இறுதி செய்த தொண்டர்கள்...!

தவெக மாநாடு 23ஆம் தேதி நடத்துவதற்கு காவல்துறை அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் அக்டோபர் 15ஆம் தேதி மாநாடு நடைபெறும் என கட்சி நிர்வாகிகள் சுவர் விளம்பரம் செய்து வருகின்றனர்.

விழுப்புரம்: தவெக கட்சியின் முதல் அரசியல் மாநில மாநாடு இந்த மாதம் 23ஆம் தேதி நடத்துவதற்கு காவல்துறையால் 33 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் அக்டோபர் 15ஆம் தேதி மாநாடு நடைபெறும் என கட்சி நிர்வாகிகள் சுவர் விளம்பரம் செய்து வருகின்றனர்.

தவெக முதல் மாநாடு 

தவெக கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை பகுதியில் நடத்துவதற்கு அனுமதி கேட்டு கடந்த மாதம் 28ஆம் தேதி கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார்.

இந்நிலையில் மாநாடு தொடர்பாக 21 கேள்விகளை எழுப்பி விக்கிரவாண்டி காவல் துறையினர் புஸ்ஸி. ஆனந்துக்கு கடந்த 2ஆம் தேதி கடிதம் வழங்கியிருந்தனர். இந்நிலையில் கடிதத்திற்கு கடந்த 6ஆம் தேதி பிஸ்ஸி.ஆனந்த் எழுத்துப்பூர்வமாக விழுப்புரம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வழங்கியிருந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன் மாநாட்டிற்கான அனுமதி என்பது வழங்கப்பட்டுள்ளது. மாநாட்டு அனுமதிக்கான கடிதத்தினை விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பாளர் பரணிபாலாஜி விழுப்புரம் காவல்துணை கண்காணிப்பாளர் சுரேஷிடமிருந்து பெற்றுக்கொண்டார். இதில் 33 நிபந்தனைகளுடன் சீல் இடப்பட்ட கவரில் இந்த அனுமதி கடிதம் என்பது வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தேசிய நெடுஞ்சாலை அருகிலேயே மாநாடு நடத்தப்படுவதால் போக்குவரத்துக்கு எந்தவித இடையூறு ஏற்படக்கூடாது என்றும் காவல்துறை அனுமதித்த இடங்களை தவிர வேறு இடங்களில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்று உள்ளிட்ட 33 நிபந்தனைகள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்டோம்பர் 15 தவெக மாநாடு?

தவெக கட்சியின் முதல் அரசியல் மாநில மாநாடு இந்த மாதம் 23ஆம் தேதி நடத்துவதற்கு காவல்துறையால் 33 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் மாநாடு ஏற்பாட்டுக்கு குறுகிய காலமே உள்ளதால் அக்டோபர் 15ஆம் தேதி மாநாடு நடத்த முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் விழுப்புரம், விக்கரவாண்டி, வி. சாலை உள்ளிட்ட பகுதிகளில் தமிழக வெற்றிக் கழக மாநாடு அக்டோபர் 15ம் தேதி நடைபெறும் என சாலை ஓரங்களில் சுவர் விளம்பரம் செய்து வருகின்றனர். தற்போது வரை தமிழக வெற்றிக் கழக மாநாடு தேதி அதிகார்பபூர்வ அறிவிப்பு வரதாதல் குழப்பத்தில் உள்ளனர்.

மாநாட்டிற்கு காவல் துறை விதித்த நிபந்தனைகள்:-

தமிழக வெற்றிக்கழக மாநாட்டின் மேடை மாநாடு இடம், தேசிய நெடுஞ்சாலை பார்க்கிங் வசதி ஆகியவைகளின் வரைபடங்கள் கொடுக்க வேண்டும், அனுமதி கேட்டு கொடுத்த மனுவில் 1.50 லட்சம் பேர் வருவார்கள் என குறிப்பிட்டுவிட்டு தற்போது கேட்கப்பட்ட 21 கேள்வியில் 50 ஆயிரம் பேர் வருவார்கள் என்று பதில் சொல்வீர்கள் இதற்கு என்ன காரணம்?, 50 ஆயிரம் பேர் அளவுக்கு தான் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படும்,

மாநாடு இரண்டு மணிக்கு நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ள நிலையில் மாநாட்டிற்கு வருபவர்களை 1:30 மணிக்குள்ளே உள்ளே வந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும், வெளி மாவட்ட மற்றும் மாநிலங்களில் யார் தலைமையில் எந்தெந்த ஊரிலிருந்து எவ்வளவு பேர் வருகிறார்கள் என்ற விவரங்களை கொடுக்க வேண்டும்,

அனைவருக்கும் குடிநீர், உணவு ஏற்பாடு செய்ய வேண்டும், மாநாட்டிற்கு 50 ஆயிரம் பேர் வருவார்கள் என்று கூறியுள்ளீர்கள். ஆனால் நீங்கள் கொடுக்கப்பட்ட வாகனங்களில் எண்ணிக்கை 20 ஆயிரம் பேர் தான் அந்த வாகனங்களில் வர முடியும் இதற்கு ஏன் இப்படி கொடுத்துள்ளீர்கள்,

மாநாட்டிற்கு செல்லும் வழிகள் குண்டும்குழியுமாக உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அங்கு சமமான சாலையை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும், மாநாட்டு பரப்பளவு 85 ஏக்கர் என்று குறிப்பிட்டுள்ளீர்கள் மாநாட்டு மேடை, மற்றும் மாநாட்டு வருபவர்கள் அமரும் இடம் தவிர மற்ற இடங்களை பார்க்கிங் வசதிக்கு பயன்படுத்த வேண்டும்,

பார்க்கிங் இடத்திற்கும் மேடை மாநாட்டு இடத்திற்கும் இடையே தடுப்பு அமைக்க வேண்டும், கர்ப்பிணி பெண்கள் முதியோர்களுக்கு தனி இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்,

விஜய் வந்து செல்லக்கூடிய அந்த வழியில் இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும், மாநாடு நடைபெறும் இடம் அருகே ரயில் ரோடு மற்றும் 6 கிணறுகள் உள்ளதால் அந்த பகுதியில் மக்கள் செல்லாதவாறு தடுப்புகளை ஏற்படுத்த வேண்டும், 

தேசிய நெடுஞ்சாலை ஒட்டிய பகுதியில் நடைபெறுவதனால் அவசரத்தில் பலர் இந்த சாலையை கடந்து செல்வார்கள் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் மாநாடு நடத்த வேண்டும், 

பார்க்கிங் வசதியிலிருந்து மக்கள் மாநாட்டு இடத்திற்கு வருவதற்கு பாதுகாப்பிற்கு, தன்னார்வளரை கொண்டு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், 

கொடி அலங்கார, வளைவால், பேனர் போன்ற கட்டுவதனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் முடிந்த அளவிற்கு அதனை தவிர்க்க வேண்டும்,

அடிப்படை வசதிகளை மாநாட்டு வருபவர்களுக்கு செய்து கொடுக்க வேண்டும், 

மழை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதால் மாநாடு இடத்தில் முன்னேற்றப்பாட்டிற்கு நடவடிக்கைகளை எடுக்க தயாராக இருக்க வேண்டும்,

பொதுப்பணித்துறை பொறியாளரிடம் மேடையின் உறுதி தன்மையை பெற வேண்டும்,

மின் பொறியாளர்களிடம் பாதுகாப்புச் சான்றிதழ் பெற வேண்டும், கூம்பு ஒலிபெருக்கி, வானவேடிக்கையை கூடாது, மாநாட்டிற்கு வரும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் விஜயுடன் வருபவர்களுக்கு யார் யாருக்கு பாஸ் வழங்கப்படுகிறது அந்த விவரங்களை காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும்,

மக்கள் கூட்டம் வருவதால் ஆங்காங்கே அவர்கள் எளிதில் காணும் வகையில் எல்இடி அமைக்க வேண்டும், மாநாட்டு மேடை வரும் வழி மாநாட்டு திடல் அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தி அதனை கண்காணிக்கவும் வேண்டும், 

தீயணைப்பு மருத்துவம் உள்ளிட்ட வாகனங்கள் அங்கு அனுமதி பெற்று நிறுத்த வேண்டும்,

தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் மாநாட்டில் இருந்து வருபவர்கள் தேசிய நெடுஞ்சாலைக்கு வராத வகையில் தடுப்புகளை அமைக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனை 33 நிபந்தனைகளை வழங்கி காவல்துறை மாநாட்டிற்கு அனுமதி கொடுத்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நாட்டிலேயே நாமதான் டாப்.. வாவ் சொல்ல வைக்கும் அரசு பேருந்துகள்.. விருதுகளை வாரிக்குவித்த தமிழ்நாடு!
நாட்டிலேயே நாமதான் டாப்.. வாவ் சொல்ல வைக்கும் அரசு பேருந்துகள்.. விருதுகளை வாரிக்குவித்த தமிழ்நாடு!
நான் இந்தி இசையா? உயிரையும் கொடுப்பான் பாஜக தொண்டன் - தமிழிசை ஆவேசம்
நான் இந்தி இசையா? உயிரையும் கொடுப்பான் பாஜக தொண்டன் - தமிழிசை ஆவேசம்
Sun TV: டிஆர்பி ரேட்டிங்கில் அதளபாதாளத்தில் கிடக்கும் சன் டிவி சீரியல்கள் இதுதான்!
Sun TV: டிஆர்பி ரேட்டிங்கில் அதளபாதாளத்தில் கிடக்கும் சன் டிவி சீரியல்கள் இதுதான்!
வாவ்… 118 கி.மீ... சென்னையில் மேலும் 3 வழித்தடம்! 128 மெட்ரோ நிலையங்கள்! வெளியான அதிரடி அறிவிப்பு
வாவ்… 118 கி.மீ... சென்னையில் மேலும் 3 வழித்தடம்! 128 மெட்ரோ நிலையங்கள்! வெளியான அதிரடி அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajendra Balaji Vs Mafoi Pandiarajan | மிரட்டிய ராஜேந்திர பாலாஜி!EPS-யிடம் போட்டு கொடுத்த மாஃபா தூதுவிடும் தவெக!Daughter in law Surprise: வைர நெக்லஸ்..தங்க கட்டிகள்..1 கோடியில் BIRTHDAY GIFT!மாமியாருக்கு SURPRISESarathkumar BJP : அண்ணாமலைக்கு ஆப்பு! பாஜக தலைவர் சரத்குமார்? கடுப்பில் சீனியர்ஸ்Chandrababu Naidu Praises Tamilnadu : ’’தமிழர்கள் TOP-ல இருக்காங்கதமிழ்நாடு தான் BEST’’புகழ்ந்து தள்ளிய சந்திரபாபு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நாட்டிலேயே நாமதான் டாப்.. வாவ் சொல்ல வைக்கும் அரசு பேருந்துகள்.. விருதுகளை வாரிக்குவித்த தமிழ்நாடு!
நாட்டிலேயே நாமதான் டாப்.. வாவ் சொல்ல வைக்கும் அரசு பேருந்துகள்.. விருதுகளை வாரிக்குவித்த தமிழ்நாடு!
நான் இந்தி இசையா? உயிரையும் கொடுப்பான் பாஜக தொண்டன் - தமிழிசை ஆவேசம்
நான் இந்தி இசையா? உயிரையும் கொடுப்பான் பாஜக தொண்டன் - தமிழிசை ஆவேசம்
Sun TV: டிஆர்பி ரேட்டிங்கில் அதளபாதாளத்தில் கிடக்கும் சன் டிவி சீரியல்கள் இதுதான்!
Sun TV: டிஆர்பி ரேட்டிங்கில் அதளபாதாளத்தில் கிடக்கும் சன் டிவி சீரியல்கள் இதுதான்!
வாவ்… 118 கி.மீ... சென்னையில் மேலும் 3 வழித்தடம்! 128 மெட்ரோ நிலையங்கள்! வெளியான அதிரடி அறிவிப்பு
வாவ்… 118 கி.மீ... சென்னையில் மேலும் 3 வழித்தடம்! 128 மெட்ரோ நிலையங்கள்! வெளியான அதிரடி அறிவிப்பு
WhatsApp Admin Shot: அடப் பாவிங்களா.! வாட்ஸ்அப் குரூப்பிலிருந்து தூக்கியதால் அட்மின் சுட்டுக்கொலை.. எங்கு தெரியுமா.?
அடப் பாவிங்களா.! வாட்ஸ்அப் குரூப்பிலிருந்து தூக்கியதால் அட்மின் சுட்டுக்கொலை.. எங்கு தெரியுமா.?
BJP TN Leader Sarathkumar?: என்னது.!! நம்ம நாட்டாம பாஜக தலைவர் ஆகப்போறாரா.? அப்போ அண்ணாமலையோட கதி.?!
என்னது.!! நம்ம நாட்டாம பாஜக தலைவர் ஆகப்போறாரா.? அப்போ அண்ணாமலையோட கதி.?!
L Murugan:
L Murugan: "பெண்கள் சாலையில் நடக்க முடிவதில்லை" பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை -எல்.முருகன் ஆவேசம்.
இது அராஜகப்போக்கு: மகளிர் தினத்தில் தமிழக அரசை சரமாரியாக சாடிய விஜய்
இது அராஜகப்போக்கு: மகளிர் தினத்தில் தமிழக அரசை சரமாரியாக சாடிய விஜய்
Embed widget