TN Rain: விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை.. குளிர்ச்சியால் மகிழ்ச்சியில் மக்கள்
விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காலை முதலே பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கடலூர், அரியலூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது, குறிப்பாக விழுப்புரம் நகர பகுதி கோலியனூர், திண்டிவனம், பிரம்மாதேசம், மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. வெயிலால் வாடி வரும் மக்களுக்கு இந்த மழை சற்று குளிர்ச்சியை கொடுத்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் கனமழை
குற்றால அருவியல் தண்ணீர் வரத்து அதிகரிப்பு :-
குற்றால அருவியல் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு குளிக்க தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பிப்பது வழக்கம். ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து சென்ற பக்தர்கள் கடந்த கார்த்திகை மாதம் குற்றாலத்தில் குவிந்த வண்ணம் இருந்தனர்.
18 மாவட்டங்களில் காலை 10 மணி வரை பரவலாக மழை
வானிலை ஆய்வு மையம் கூறுகையில் கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று முதல் தமிழகத்தில் நெல்லை, நாகை, திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, சிவகங்கை, உள்ளிட்ட 18 மாவட்டங்களில் காலை 10 மணி வரை பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

