10 ஆண்டுகால வேலைவாய்ப்பின்மைக்கு திமுக ஆட்சியில் தீர்வு- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்
தமிழகம் முழுவதும் வேலை வாய்ப்பு முகாம் நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்
கடலூர் மாவட்டம் வடலூரில் மகளிர் திட்டம் சார்பில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்தது இதில் 67 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டனர். வடலூர், குறிஞ்சிப்பா
இதில் அமைச்சர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் இந்த வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. 67 நிறுவனங்கள் கலந்து கொண்டு இது வரை 500க்கு மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 7 ஆயிரம் பேர் கலந்து கொண்டு உள்ளனர். இந்த அளவுக்கு இளைஞர்கள் அதிகமாக வருவதற்கு காரணம், வேலை வாய்ப்பு இல்லை. இதற்கு காரணம் 10 ஆண்டு காலம் தேக்கம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் வேலை வாய்ப்பு முகாம் நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இது போன்ற சிறப்பான பணிகளை முதல்வர் செய்து வருகிறார். இதனால் அவர் மீது தமிழக மக்களுக்கு நம்பிக்கை வந்துள்ளது. இதே போல் நடைபெற்ற முகாம் மூலம் இளைஞர்களுக்கும் நம்பிக்கை வந்துள்ளது. தமிழக அரசும் அனைத்து துறைகளிலும் வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. தமிழ்நாடு தேர்வாணையமும் வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது என்றார்.
கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் ஆகியன சார்பில் வேலை வாய்ப்பு முகாம் திட்டக்குடி ஞானகுரு வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. முகாமில் 141 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றனர். இதில் கடலூர், விருத்தாசலம், பண்ருட்டி, வேப்பூர், நெய்வேலி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.முகாமில், பல்வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்ற 570 பேருக்கு பணிநியமனத்துக்கான ஆணையை அமைச்சர் சி.வெ. கணேசன் வழங்கினார்.
மேலும் 938 பேர் 2-ம் கட்ட தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர், 101 இளைஞர்கள் திறன் பயிற்சிக்காக பதிவு செய்தனர். 272 பேர் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கு பதிவு செய்தனர்.பின்னர் அமைச்சர் சி.வெ. கணேசன் கூறுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க கடந்த 3 மாதங்களில் தமிழகத்தில் 11 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் 11 ஆயித்து 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்று இருக்கிறார்கள் அதேபோல், கடந்த 10 ஆண்டுகளில் தொழிலாளர் நல வாரியத்திற்கு வேண்டிய நலத்திட்ட உதவிகளை எதுவும் வழங்காத நிலையில், தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற உடன் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது என கூறினார்.