விழுப்புரம் நகர மன்ற கூட்டத்தில் மின் விளக்குகள் எரியவில்லை என திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம்
விழுப்புரம் நகர பகுதியில் பொருத்தப்படும் மின் விளக்குகள் 2நாட்கள் கூட எரிவதில்லை என கவுன்சிலர்கள் புகார்.
விழுப்புரம் நகராட்சி நகரமன்ற கூட்டம்
விழுப்புரம்: விழுப்புரம் நகர பகுதிகளில் போடப்பட்ட புதிய தெரு மின் விளக்குகள் எரியவில்லை என வரிந்துகட்டிக்கொண்டு நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆமை வேகத்தில் நடைபெறும் அரசு திட்டங்கள்
விழுப்புரம் நகரமன்ற கூட்டம் நகரமன்ற தலைவி தமிழ்ச்செல்வி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 42 வார்டுகளை சார்ந்த அதிமுக, பாமக, திமுக, விசிக பாஜக நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அப்போது விழுப்புரம் நகர பகுதியில் ஆமை வேகத்தில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தபடுவதாகவும், ஆவின் டெண்டர்கள் உள்ளிட்ட பல்வேறு டெண்டர்கள் நகர மன்ற உறுப்பினர்களுக்கு தெரியாமலையே டெண்டர்கள் விடுப்படுவதால் பல்வேறு குழப்பகள் நிலவுவதாக தெரிவித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம்
அப்போது விழுப்புரம் நகர மன்ற பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் குறைந்த அளவிலான புதியதாக தெரு மின் விளக்குகள் அமைக்கபடுவதாகவும் அவ்வாறு அமைக்கப்படும் புதிய மின் விளக்குகள் இரண்டாவது நாளிலையே எரியாமல் சென்றுவிடுவதால் இது தொடர்பாக புகாரளித்தால் ஒப்பந்த தாரர் உரிய பதிலளிக்கவில்லை என கூறி கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு நகர மன்ற உறுப்பினர்கள் ஒப்பந்ததாரர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்களிடம் கடுமையான வாக்குவாத்தில் ஈடுபட்டனர். இதனால் நகர மன்ற கூட்டத்தில் கூச்சல் குழப்பம் நிலவியதால் பரபரப்பு ஏற்பட்டது.