சமத்துவ பொங்கல்; கல்லூரி மாணவர்களின் அசத்தலான பொங்கல் திருவிழா
விழுப்புரம் அரசு மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் வைத்து கல்லூரி மாணவிகள் கோலாகலமாக கொண்டாடினர்.
Pongal festival 2025 : டாக்டர் எம்ஜிஆர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஏழாம் ஆண்டு சமத்துவ பொங்கல் திருவிழா, கல்லூரி மாணவிகளின் ஆட்டம் பாட்டத்துடன் கோலாகலமாக கொண்டாடினர்.
விழுப்புரம் மாவட்டம் டாக்டர் எம்ஜிஆர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 8ஆம் ஆண்டு சமத்துவ பொங்கல் திருவிழா, கல்லூரி மாணவிகளின் ஆட்டம் பாட்டத்துடன் கோலாகலமாக கொண்டாடினர். தமிழர்களின் முக்கியமான பண்டிகையில் ஒன்று தான் பொங்கல் பண்டிகை. இந்த பொங்கல் பண்டிகையின்போது அனைவரும் புத்தாடை அணிந்து, தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள் பல்வேறு பகுதியில், அலுவலகங்கள் மற்றும் கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம் டாக்டர் எம்ஜிஆர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள அனைத்து துறைகளிலும் இன்று சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. இங்க பயிலும் கல்லூரி மாணவிகள் அனைவரும் தமிழர்களின் பாரம்பரிய முறைபடி புடவை அணிந்து வந்து, பொங்கல் வைத்து சிறப்பாக கொண்டாடினர்.
Pongal Festival 2025 Dates in Tamil Nadu:
தமிழ்நாட்டில் முக்கியமாக கொண்டாடப்படும் சில பண்டிகைகள் தை மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இது அறுவடை காலத்தை குறிப்பதாக பார்க்கப்படுகிறது. தை மாதம் 4 நாட்கள் சிறப்பம்சம் வாய்ந்த விழாவில், தைப் பொங்கல், இரண்டாவது நாளில் அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில் போகி பண்டிகை, பொங்கல் பண்டிகை , மாட்டு பொங்கல் மற்றும் காணும் பொங்கல் ஆகியவை எந்த நாளில் கொண்டாப்படுகிறது மற்றும் இந்த பண்டிகைகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது என்பது குறித்தும் தெளிவாக பார்ப்போம்
போகி பண்டிகை (ஜனவரி 13, 2025):
போகி பண்டிகை நாளில், மக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து, பழைய, பயன்படுத்தப்படாத பொருட்களை அப்புறப்படுத்துவர்.
பொங்கள் : ஜனவரி 14 – தை-1
தை பொங்கல் பண்டிகையானது சூரியனுக்கு அர்ப்பணிக்கப்படுகிறத., விவசாய நிலங்களை உயிரூட்டமாக வைத்திருக்க உதவிய, சூரியனுக்கு தெரிவிக்கும் நன்றியைக் குறிக்கிறது.
குடும்பங்கள் புதிதாக அறுவடை செய்யப்பட்ட அரிசியை பால் மற்றும் வெல்லத்துடன், ஒரு புதிய மண்பானையில் சமைக்கும் கலவையானது செழுமையின் அடையாளமாக, பொங்கலாக நிரம்பி வழிகிறது.
பொங்கல் என்று அழைக்கப்படும் உணவு, பழுப்பு சர்க்கரை, நெய், முந்திரி மற்றும் திராட்சையும் கொண்டு அலங்கரிக்கப்பட்டு, வாழை இலையில் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்வதற்கு முன்பு சூரிய கடவுளுக்கு முதலில் சமர்ப்பிக்கப்படுகிறது. தைப் பொங்கல் தமிழ் மாதமான தையின் தொடக்கத்தையும் குறிக்கிறது.
மாட்டுப் பொங்கல் (ஜனவரி 15, 2025):
மாட்டுப் பொங்கல், விவசாயம் மற்றும் வாழ்வாதாரத்தில் கால்நடைகளின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், மூன்றாவது நாள் கால்நடைகளை கௌரவிப்பதற்கும் அலங்கரிப்பதற்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
காணும் பொங்கல் (ஜனவரி 16, 2025):
காணும் பொங்கல், இந்த நாள் குடும்ப உறவுகள் இணைவை குறிக்கிறது, இந்த தினத்தில் அன்பானவர்களுக்கு, பரிசுகளை பரிமாறிக் கொள்ளும் நாளாக பார்க்கப்படுகிறது.
விடுமுறை:
இந்நிலையில், இந்த பண்டிகைகளுக்கு எத்தனை நாள், எப்போது விடுமுறை அளிக்கப்பட்டது என்பது குறித்து பார்ப்போம்.
நடப்பாண்டு பொங்கல் பண்டிகை வரும் செவ்வாய்க்கிழமையான ஜனவரி 14ம் தேதி விடுமுறை
ஜனவரி 15ம் தேதியான புதன் கிழமை மாட்டுப்பொங்கலுக்கு அரசு விடுமுறை
ஜனவரி 16ம் தேதியான வியாழக்கிழமை காணும் பொங்கல் விடுமுறை ஆகும்
மக்கள் வசதிக்காகவும், வெளியூர்களில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்கள் தங்கள் குடும்பத்துடன் போதிய நேரத்தைச் செலவிட வேண்டும் என்பதற்காகவும் தமிழக அரசு ஜனவரி 17ம் தேதியான வெள்ளிக் கிழமையும் விடுமுறை நாளாகவும் அறிவித்துள்ளது.
இதனால், அதிகாரப்பூர்வமாக 4 நாட்களும், அதற்கடுத்த சனி – ஞாயிறு என 6 நாட்களும் விடுமுறையாக உள்ளது. சிலர், ஜனவரி 13 ஆம் தேதியான திங்களும் விடுமுறை கிடைத்தால், அதற்கு முந்தைய இரண்டு நாள் என மொத்தமாக 9 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்றும், இந்த பண்டைகையாக , உறவுகளுடன் சிறப்பாக கொண்டாட முடியும் என்றும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
மேலும், திருச்சி மாவட்டத்தில் ஜனவரி 10ஆம் தேதி வெள்ளிக் கிழமை அன்று வைகுண்ட ஏகாதசி பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசு சார்பில், ஜனவரி 13 அளிக்கப்படும் பட்சத்தில் தொடர்ந்து 10 நாட்கள் அரசு விடுமுறை கிடைக்கும் என்று திருச்சி மாவட்ட அரசு ஊழியர்களும் மாணவர்களும் ஆர்வத்தில் உள்ளனர் . சிலர் , இடையில் வரும் திங்கள் கிழமையை எப்படி விடுமுறை எடுக்கலாம் என்றும் திட்டமிட்டு வருதையும் , சமூக வலைதளங்களில் உரையாடுவதை பார்க்க முடிகிறது. இருப்பினும், அனைவரும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதில் ஆர்வத்துடன் உள்ளனர்.