மேலும் அறிய

திடீரென அதிரடி முடிவு எடுத்த ராமதாஸ்; தமிழகத்தில் என்ன நடக்கப் போகிறது?

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவில்லை என்றால் தமிழ்நாடு மிகப் பெரிய போராட்டத்தை சந்திக்கும் - மருத்துவர் ராமதாஸ்

விழுப்புரம்: வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவில்லை என்றால் தமிழ்நாடு மிகப் பெரிய போராட்டத்தை சந்திக்கும் என்றும் போராட்டத்தை தடுக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மற்றும் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேசியதாவது:

இந்த கூட்டம் வன்னியர் சங்கத்தின் மாநில முக்கிய நிர்வாகிகள் கூட்டம். 1980ல் வன்னியர் சங்கம் தொடங்கப்பட்டது. பல ஆண்டுகளாக வன்னியர் சங்கம் வன்னிய மக்களுக்காக தொடர்ந்து அவருடைய பிரச்சினைகளுக்காக பல்வேறு போராட்டங்கள் செய்திருக்கிறோம். வன்னிய மக்களுக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு பெற்று தந்துள்ளோம். 10.5 இட ஒதுக்கீடு கிடைக்க மாமல்லபுரம் மாநாட்டில் கூறியது போல கடுமையான போராட்டத்தை நடத்துவோம். 10.5 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்கப்படவில்லை என்று சொன்னால் மிகப்பெரிய போராட்டத்தை தமிழ்நாடு சந்திக்கும். அந்த கடுமையான போராட்டத்தை நடக்காமல் செய்ய வேண்டியது அரசின் கடமை. சங்கம் என்றால் ஒற்றுமையாக இருப்பது, ஒன்று கூடுவது, உரிமைக்காக போராடுவது. வன்னியர் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து பேசுவதற்காகவும், சங்கத்தை வலுப்படுத்துவதற்காகவும் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

வருகின்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறுவதற்காகவும் இந்த ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளோம். வன்னியர் சங்கத்தின் கொள்கை என்ன என்பது குறித்து பேசுவதற்காகவும், கடுமையாக உழைக்க வேண்டும் என்பது குறித்தும் பேசுவதற்காக கூடியிருக்கிறோம். தற்போதைக்கு கட்சிப் பொறுப்புகளில் மாற்றம் ஏதுமில்லை. தற்போது குறிப்பிட்ட சில ஊடகங்கள் வதந்தி பரப்பி வருகின்றனர். எப்போதும் போல கட்சியும், சங்கமும் செயல்பட்டு வருகிறது. 10. 5% இட ஒதுக்கீட்டுக்கான போராட்டம் தொடர்பாக அனைவரையும் கூட்டி பேசி தான் அறிவிப்போம் என தெரிவித்தார்.

பாமக கட்சிக்குள் இருக்கும் சலசலப்பு விரைவில் சீராகும், இன்று நடைபெறும் கூட்டத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த போராட்டம் நடத்த முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாகவும் அதற்கான தேதியும் அறிவிக்க வாய்ப்புள்ளதாக வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி தெரிவித்துள்ளார் 

வன்னியர் சங்க கூட்டம் தைலாபுரம் இல்லத்தில் இன்று நடைபெறுவதாக வன்னியர் சங்க தலைவர் பு.த. அருள் மொழி அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து வன்னிய சங்க நிர்வாகிகள் கூட்டம் தைலாபுரத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் வன்னியர் சங்க தலைவர் பு. த. அருள்மொழி ஐந்து மாநில செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். கூட்டத்தில் கெளரவ தலைவர் ஜி கே மணி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், மாநில தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு முன்பாக பேட்டியளித்த வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி 

வன்னியர் சங்க கூட்டத்திற்கு சமூக வலைதளங்கள் மூலமாக அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் அன்புமணி ராமதாசுக்கும் அழைப்பு சமூக வலைதளமான வாட்சப் மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவரும் தனக்கு வாட்சப் மூலமாக தான் தகவல் அளிப்பார் அதே போன்று அவருக்கும் வாட்சப் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது என தெரிவித்தார். பாமக கட்சிக்குள் இருக்கும் சலசலப்பு விரைவில் சீராகும், இன்று நடைபெறும் கூட்டத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த போராட்டம் நடத்த முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாகவும் அதற்கான தேதியும் அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும், தமிழக அரசை சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த நிர்பந்திக்கும் வகையில் கூட்டம் நடைபெறுவதாக வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

விவசாயிகளே உஷார்! இந்த 3 பணிகளை முடிக்காவிட்டால் பி.எம்.கிசான் பணம் நிறுத்தப்படலாம்!
விவசாயிகளே உஷார்! இந்த 3 பணிகளை முடிக்காவிட்டால் பி.எம்.கிசான் பணம் நிறுத்தப்படலாம்!
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
ஆடிப்பூர வளைகாப்பு உற்சவம்: விழுப்புரம் மாவட்டமே ஆன்மிகக் கடலில் மூழ்கியது!
ஆடிப்பூர வளைகாப்பு உற்சவம்: விழுப்புரம் மாவட்டமே ஆன்மிகக் கடலில் மூழ்கியது!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - குழந்தை உட்பட 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - குழந்தை உட்பட 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி சாத்தியம்?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Embed widget