மத்திய அரசு, மாநில அரசு என்ன செய்கிறது? தொடர் மீனவர்கள் கைது - ராமதாஸ் கேள்வி
தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு மிக மோசமாக பாதித்துள்ளது கொலைகார நாடாக மாறியுள்ளது - மருத்துவர் ராமதாஸ்

விழுப்புரம்: தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்காமல் தமிழக அரசும் வேடிக்கை பார்ப்பதாகவும், இதில் மத்திய அரசும் எதுவும் செய்யாமல் வெளியுறவுத்துறை உறங்கி கொண்டிருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், வேளாண் விளை நிலங்கள் வேறு பயன்பாட்டிற்கு மாற்றப்படுவதை தடுக்க சட்டமியற்ற வேண்டும் என்றும் நெல் வயல்வெளிகள் வேறு எந்த பயன்பாட்டிற்கு ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என கேரள அரசு அறிவித்துள்ளது.
உணவு பாதுகாப்பு நிலத்தடி நீர் மட்டத்தை உறுதி செய்யும் வகையில் கேரள சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளனர். நீர் நிலை ஆக்கிரமிப்பினை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என அறிவித்துள்ள கேரள அரசின் இந்த செயல் பாராட்டதக்கது என தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் முப்போகம் நெல் விளையும் பூமியாக இருந்தாலும் அதிகாரிகளை சரிகட்டி விட்டால் அடுத்து பிளாட் போட்டு விற்பனை செய்யும் நிலை உள்ளது. ஏரி குளங்கள் நீர் நிலைகளை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் நில ஒருங்கிணைப்பு சட்டம் அக்டோபர் 14 தேதி மூலம் கொண்டு வந்துள்ளது.
தமிழ்நாட்டில் விளை நிலங்களை வீட்டு மனைகளை மாற்ற கூடாது ஆனால் ஆட்சியாளர்கள் பொறுப்பில்லாமல் வேறு பயன்பாட்டிற்காக மாற்றியுள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் 40 லட்சம் ஏக்கர் பரப்பளவு கடந்த 50 ஆண்டுகளில் விளைநிலங்கள் மனை பட்டாக்களாகவும் வேறு பயன்பாட்டிற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் 15 ஆயிரம் ஏரிகள் காணமல் போய் உள்ளதாக குற்றஞ்சாட்டினார்.
தமிழக அரசு நில ஒருங்கினைப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் சட்டப்பேரவை கூட்ட தொடரை நூறு நாட்கள் நடத்த வேண்டும் ஆனால் திமுக ஆட்சியில் இந்தாண்டு தான் 31 நாட்கள் நிதி நிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெறுவதும் ஒரே நாளில் பல்வேறு மானியக்கோரிக்கைகள் விவாதிப்பது போதுமானது அல்ல பேரவை நிகழ்ச்சிகள் முழுமையாக நேரலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
தமிழ்நாட்டில் தினந்தோறும் திட்டமிட்டு நடத்தப்படும் கொடூர கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் கொலை செய்யபடுகிறார். ஈரோட்டில் பொதுமக்கள் மத்தியில் ஒருவர் வெட்டி கொலை செய்யப்படுகிறார் தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு மிக மோசமாக பாதித்துள்ளது கொலைகார நாடாக மாறியுள்ளதால் அதனை தடுக்கும் வகையில் சட்ட ஒழுங்கினை பாதுகாக்க வேண்டும் என தெரிவித்தார்.
உயர்நீதிமன்ற தீர்ப்பினை மதித்து தற்காலிக அரசு ஊழியர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் நகைகடன் பெறுதற்கான விதிமுறையினை ரிசர்வ் வங்கி மாற்றி உள்ளதை திரும்ப பெற வேண்டுமென என்றும் புதிய விதியால் ஏழை நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கபடுவார்கள் என்றும் அடகுவைத்த நகையை கூட மீட்க முடியாத நிலை உள்ளதால் வட்டியை மட்டும் கட்டி வருகின்றனர்.
கடனை அடைப்பதற்காக நகை மீட்டு மீண்டும் வைக்க நேரிடும் என்பதால் இரு நாட்களுக்காக கந்து வட்டி காரர்களிடம் கடன் பெற வேண்டிய நிலை ஏற்படும் இதனால் ஏழை எளிய மக்கள் பாதிக்கபடுவார்கள் என்பதால் இப்போதுள்ள நடைமுறையை மட்டும் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்துனார்.
தமிழில் கடைகளின் பெயர் பலகைகள் வைப்பது கட்டாயம் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி என அரசு உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது தமிழகத்தின் தெருக்களில் தமிழ் தான் எல்லை என பாவேந்திரர் பாரதிதாசன் பாடியதிற்கு இணங்க மாற்றம் செய்யவேண்டுமென புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் இதே போன்று சென்னை மாநகராட்சியும் அறிவித்துள்ளது வரவேற்கதக்கது என கூறினார்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் பலகைகள் வைக்கும் நாள் வரவேண்டும் என கூறினார்.
மீனவர்கள் கைது செய்யபடுவதை தடுக்காமல் தமிழக அரசும் வேடிக்கை பார்பதாகவும், மத்திய அரசும் எதுவும் செய்யாமல் உள்ளது இதில் வெளியுறவுத்துறை உறங்கி கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டினார். மதுரை உயர்நீதிமன்றம் பொது இடங்களில் வைத்த கொடி கம்பங்களை அகற்ற வேண்டுமென உத்தரவிட்டதின் பேரில் அதனை அகற்ற திமுக பொதுச்செயலாகர் துரை முருகனும் உத்தரவிட்டுள்ளார்.
வெளிநாடுகள் பல்வேறு மாநிலங்களில் சாலைகளின் ஓரங்கள் பாலத்தின் மீது கட்சி விளம்பரங்கள் இல்லை ஆனால் தமிழ்நாட்டில் இது தேவையில்லை சாலைகளும் பாலங்களும் மிளிர வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

