Pugar Petti: மரக்காணம்: சிதிலம் அடைந்த அரசுப்பள்ளி கட்டிடம் - மழை நீரால் அவதிக்குள்ளாகும் மாணவர்கள்!
விழுப்புரம், மரக்காணம் அருகே சிதிலம் அடைந்த அரசுப்பள்ளி கட்டடத்தில் மழை நீர் ஒழுகுவதால் மாணவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
விழுப்புரம், மரக்காணம் அருகே சிதிலம் அடைந்த அரசுப்பள்ளி கட்டடத்தில் மழை நீர் ஒழுகுவதால் மாணவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சிக்குட்பட்டது தாழங்காடு கிராமம். இப்பகுதியை சுற்றிலும் ஐந்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள பெரும்பாலானோர் விவசாயிகள் கூலித் தொழிலாளர்கள் ஆவர். இங்கு கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் தற்பொழுது ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் 43 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளி கட்டிடம் கட்டி பல ஆண்டுகள் ஆகிவிட்டது.
இதனால் இந்த பள்ளியின் ஓடுகள் மற்றும் சுவர்கள் சிதிலம் அடைந்து விட்டது. இதன் காரணமாக இங்குள்ள இந்த பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று மரக்காணத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் முதல் மந்திரிகள் வரையில் பல ஆண்டுகளாக அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி பொதுமக்கள் குறை கூறுகின்றனர்.
இந்நிலையில் “தற்பொழுது தொடர்ந்து மரக்காணம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் சிதலமடைந்த அரசு பள்ளி கட்டிடம் முற்றிலும் ஒழுகுகிறது. இதுபோல் மழை நீர் ஒழுகுவதால் பள்ளியில் அமர்ந்து மாணவர்கள் படிக்க முடியாமல் அவதிப்படும் நிலை உள்ளது. எனவே இப்பகுதி மாணவர்களின் நலன் கருதி சிதலமடைந்த பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய பள்ளி கட்டிடம் கட்டிக் கொடுக்க உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்