மேலும் அறிய

செயற்கை கருவூட்டல் மூலம் குட்டி ஈன்ற முதோல் வேட்டை நாய் - சாத்தியமானது எப்படி?

சினையாகாமல் இருந்த முதோல் வேட்டை நாயை, பல யுத்தியை பயன்படுத்தி வெற்றிகரமாக இன அபிவிருத்தி செய்துள்ளோம்.

புதுச்சேரியில் செயற்கை கருவூட்டல் மூலம் கருவுற்று குட்டியை ஈன்றது முதோல் வேட்டைநாய். இன அபிவிருத்தி மேம்பாட்டு யுத்திகள் செய்யும் வசதிகளால் செல்லப் பிராணிகள் வளர்ப்போர் பயன்பெறலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் உள்ள பாகல்கோட் மாவட்டத்தைச் சேர்ந்த முதோல் (Mudhol) வேட்டை நாய்கள், கென்னல் கிளப் ஆப் இந்தியாவால் அங்ககீகரிக்கப்பட்டது. இந்த இனம் வேட்டை நாயாக கருதப்பட்டாலும், தற்போது துணை நாயாகவும், காவல் நாயாகவும் வளர்க்கப்படுகிறது.

புதுச்சேரியில் செயற்கை கருவூட்டல் முறையை பயன்படுத்தி இந்நாய் இனம் விருத்தி செய்யப்பட்டது தொடர்பாக புதுச்சேரியில் உள்ள ராஜீவ்காந்தி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஈனியல் துறையில் செயற்கை முறை கருவூட்டல் நிபுணர்கள் டாக்டர் ஷாலினி மற்றும் டாக்டர் காந்தராஜ் ஆகியோர் கூறியதாவது: புதுச்சேரியில் உள்ள ராஜீவ்காந்தி கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆண், பெண் இனத்தைச் சேர்ந்த முதோல் வேட்டை நாய்க்குட்டி வாங்கப்பட்டு அறிவியல் ரீதியாக பராமரிக்கப்பட்டு வளர்ந்து வருகிறது. பருவமடைந்து மற்றும் பாலுறவு முதிர்ச்சியடைந்த பிறகு இனப்பெருக்கக் காலத்தில் இரண்டும் உடல் இனச்சேர்க்கை நெருக்கத்திற்கு ஒன்றாக சேரவில்லை.

செயற்கை கருவூட்டல் மூலம் குட்டி ஈன்ற முதோல் வேட்டை நாய் - சாத்தியமானது எப்படி?

இதையடுத்து மேட்டுப்பாளையத்தில் உள்ள கால்நடை ஈனியல் துறையில் ஆண் நாயிடம் இருந்து செயற்கை முறையில் விந்து சேகரித்து ஆராயப்பட்டது. பெண் நாய்க்கு இனப்பெருக்க காலத்தில், கருமுட்டை வெளிவரும் நேரத்தை கணித்து செயற்கை முறை கருவூட்டல் செய்யப்பட்டது. அதன்பின் அதிர்வெண் ஒலிமூலம் நுட்பமாக ஆராய்ந்து ஒற்றை கருவுடன் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. சினைப் பருவக்காலம் முழுவதும் அதிர்வெண் ஒலிமூலம் கருவின் இதய துடிப்பு, அசைவு, ஆரோக்கியத்தை கண்டறியப்பட்டது. சினை பருவக்காலம் முடிந்ததும் கருவறையின் வாய் திறவாமல் குட்டி ஈனும் எந்த அறிகுறியும் வெளிப்படுத்தாமல் இருந்ததால் மீண்டும் அதிர்வெண் ஒலி மூலம் பரிசோதனை செய்யப்பட்டது.

செயற்கை கருவூட்டல் மூலம் குட்டி ஈன்ற முதோல் வேட்டை நாய் - சாத்தியமானது எப்படி?

அந்த பரிசோதனையில் நாய்க்குட்டி இதய துடிப்பும், அசைவும் வெகுவாக குறைந்ததால் அறுவை சிகிச்சை மூலம் உயிருடன் 400 கிராம் எடைகொண்ட ஒரு பெண் நாய்க்குட்டி பிறந்தது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு தாயும், சேயும் நன்கு குணமடைந்து ஆரோக்கியமாக உள்ளனர். சினையாகாமல் இருந்த முதோல் வேட்டை நாயை, பல யுத்தியை பயன்படுத்தி வெற்றிகரமாக இன அபிவிருத்தி செய்துள்ளோம் என்றனர். கல்லூரி முதல்வர் செஜியன் கூறுகையில்,  “இன அபிவிருத்தி மேம்பாட்டு யுத்திகள் செய்யும் வசதிகளால் செல்லப் பிராணிகள் வளர்ப்போர் பயன்பெறலாம் என்று குறிப்பிட்டார். 400 கிராம் எடைகொண்ட ஒரு பெண் நாய்க்குட்டி பிறந்தது. தாயும், சேயும் ஆரோக்கியமாக உள்ளனர்” என்றார்.

புதுச்சேரியில் புதிய மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி - கலால் துறை அறிவிப்பு

Naturals CEO : நேச்சுரல்ஸ் சலூன் பெண்களுக்கு தன்னம்பிக்கை தரும் பிசினஸ் - சி.கே.குமரவேல்

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Ratan Tata: தொழிலதிபர் ரத்தன் டாடா மும்பை மருத்துவமனையில் திடீர் அனுமதி; என்ன ஆச்சு?
Ratan Tata: தொழிலதிபர் ரத்தன் டாடா மும்பை மருத்துவமனையில் திடீர் அனுமதி; என்ன ஆச்சு?
Lalu Prasad Yadav: பண மோசடி வழக்கு - லாலு பிரசாத் யாதவ், மகன்களுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்
Lalu Prasad Yadav: பண மோசடி வழக்கு - லாலு பிரசாத் யாதவ், மகன்களுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்
'மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை; உளவுத்துறை தோல்வி; கையலாகாத்தனம்'- ஈபிஎஸ் கடும் கண்டனம்
'மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை; உளவுத்துறை தோல்வி; கையலாகாத்தனம்'- ஈபிஎஸ் கடும் கண்டனம்
Amaran: சிவகார்த்திகேயனின் அமரன் படத்தை தயாரித்தது ஏன்? மனம் திறந்த கமல்ஹாசன்!
Amaran: சிவகார்த்திகேயனின் அமரன் படத்தை தயாரித்தது ஏன்? மனம் திறந்த கமல்ஹாசன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Air show in Marina | கொடூர வெயில்! Traffic-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்கள்! அடுத்தடுத்து மயங்கிய மக்கள்Chennai Councillor Stalin | லஞ்சம் கேட்டாரா கவுன்சிலர்? திமுக தலைமை அதிரடி ஆக்‌ஷன்! நடந்தது என்ன?Haryana election Exit Poll | அடித்து ஆடும் Rahul... சறுக்கிய Modi! ஹரியானா தேர்தல் EXIT POLLVanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ratan Tata: தொழிலதிபர் ரத்தன் டாடா மும்பை மருத்துவமனையில் திடீர் அனுமதி; என்ன ஆச்சு?
Ratan Tata: தொழிலதிபர் ரத்தன் டாடா மும்பை மருத்துவமனையில் திடீர் அனுமதி; என்ன ஆச்சு?
Lalu Prasad Yadav: பண மோசடி வழக்கு - லாலு பிரசாத் யாதவ், மகன்களுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்
Lalu Prasad Yadav: பண மோசடி வழக்கு - லாலு பிரசாத் யாதவ், மகன்களுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்
'மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை; உளவுத்துறை தோல்வி; கையலாகாத்தனம்'- ஈபிஎஸ் கடும் கண்டனம்
'மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை; உளவுத்துறை தோல்வி; கையலாகாத்தனம்'- ஈபிஎஸ் கடும் கண்டனம்
Amaran: சிவகார்த்திகேயனின் அமரன் படத்தை தயாரித்தது ஏன்? மனம் திறந்த கமல்ஹாசன்!
Amaran: சிவகார்த்திகேயனின் அமரன் படத்தை தயாரித்தது ஏன்? மனம் திறந்த கமல்ஹாசன்!
Chennai Air Show:
Chennai Air Show: "வெயில் கொடூரமாக இருந்தது! உயிரிழப்பில் அரசியல் வேண்டாம்" அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Breaking News LIVE 7 Oct : வான்வழி சாகச நிகழ்ச்சி உயிரிழப்பு - முதலமைச்சர் ஸ்டாலின் நிதியுதவி!
Breaking News LIVE 7 Oct : வான்வழி சாகச நிகழ்ச்சி உயிரிழப்பு - முதலமைச்சர் ஸ்டாலின் நிதியுதவி!
“டாஸ்மாக் மதுக் கடைகளை குறைக்கத் திட்டம்?” நாளைய அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள்..!
“டாஸ்மாக் மதுக் கடைகளை குறைக்கத் திட்டம்?” நாளைய அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள்..!
Chennai Airshow: சென்னை விமான சாகச உயிரிழப்பு; கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்! கனிமொழி அட்வைஸ்
Chennai Airshow: சென்னை விமான சாகச உயிரிழப்பு; கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்! கனிமொழி அட்வைஸ்
Embed widget