மேலும் அறிய

ஒரே ஆண்டில் தேசிய அளவில் சாலை விபத்தில் உச்சம் தொட்ட புதுச்சேரி; என்ன செய்யபோகிறது அரசு?

புதுச்சேரி: 2024 ஆண்டு நடந்த 1,329 சாலை விபத்துக்களில், 212 பேர் உயிரிழந்துள்ளனர். தேசிய சராசரி அளவைவிட அதிக சாலை விபத்து நடக்கும் மாநிலமாக புதுச்சேரி மாறியுள்ளது.

புதுச்சேரியில் கடந்த ஆண்டு நடந்த 1,329 சாலை விபத்துக்களில், 212 பேர் உயிரிழந்துள்ளனர். தேசிய சராசரி அளவைவிட அதிக சாலை விபத்து நடக்கும் மாநிலமாக புதுச்சேரி மாறியுள்ளது.

சின்னஞ்சிறிய மாநிலமான புதுச்சேரியில் மாநில மக்கள் தொகையை விட வாகனங்கள் எண்ணிக்கை அதிகம். குண்டும் குழியுமான குறுகிய சாலைகள், சென்டர் மீடியன் இடைவெளி, தாறுமாறான பார்க்கிங், அதிவேக பயணம் உள்ளிட்ட பல காரணங்களால் ஒவ்வொரு ஆண்டும் விபத்துகளும் அதிகரித்து வருகின்றன.

புதுச்சேரியில் நடக்கும் ஒட்டு மொத்த விபத்து உயிரிழப்புகளில் 70 சதவீதம் பைக் விபத்துகளில் ஏற்பட்டவை. ஹெல்மெட் அணியாமல் அதிவேகமாக சென்றதால் தலையில் அடிப்பட்டு உயிரிழக்கின்றனர். ஹெல்மெட் அணிவது, அதிவேக பயணத்தை குறைத்தால் 50 சதவீத விபத்து உயிரிழப்புகளை தடுக்க முடியும்.

போக்குவரத்து போலீசார் விபத்து இல்லா புதுச்சேரியை உருவாக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். நகர பகுதியில் குறைவான வேகத்தில் செ]ல்வதால் ஹெல்மெட் அவசியமா என கேள்வி எழுப்புகின்றனர். புதுச்சேரி முழுவதும் 148 விபத்து பகுதி என அடையாளப்படுத்தப்பட்டு உள்ளது. இதுதவிர, ஒவ்வொரு நாளும் புது புது இடங்கள் விபத்து பகுதியாக அறியப்பட்டு வருகிறது. அந்த இடங்களில் பொதுப்பணித்துறை, நகராட்சி, போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்து விபத்துகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆனாலும் விபத்துக்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த 2023-ம் ஆண்டு மட்டும் புதுச்சேரியில் நடந்த சாலை விபத்துக்களில் 232 பேர் உயிரிழந்தனர்.கடந்த 2024-ம் ஆண்டில் 212 பேர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதபோல் கடந்த 2023-ம் ஆண்டு 1,299 சாலை விபத்துகளும், கடந்த 2024-ம் ஆண்டு 1,329 சாலை விபத்துகளும் பதிவாகி உள்ளன.நாடு முழுதும் சராசரியாக ஒரு லட்சம் மக்கள் தொகை அடிப்படையில் சாலை விபத்தில் 11 பேர் உயிரிழப்பு ஏற்படுவதாக தேசிய அளவில் பதிவாகி உள்ளது. ஆனால் புதுச்சேரியில் 1 லட்சம் மக்கள் தொகைக்கு சாலை விபத்தில் உயிரிழப்பு 15 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து சீனியர் எஸ்.பி., பிரவீன்குமார் திரிபாதி கூறியதாவது; எந்த இடத்தில் எப்போது விபத்து நடக்கும் என யாருக்கும் தெரியாது. போலீசுக்காக ஹெல்மெட் அணிய வேண்டாம். உங்களுக்காக உங்கள் குடும்பத்திற்காக ஹெல்மெட் அணிந்து செல்லுங்கள். புதுச்சேரி முழுதும் 148 விபத்து பகுதி என அடையாளப்படுத்தப்பட்டு உள்ளது.

இதுதவிர, ஒவ்வொரு நாளும் புது புது இடங்கள் விபத்து பகுதியாக அறியப்பட்டு வருகிறது. அந்த இடங்களில் பொதுப்பணித்துறை, நகராட்சி, போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்து விபத்து தடுப்பதிற்கு தேவையான நடவடிக்கைகளை செய்து வருகிறோம். புதுச்சேரியில் நிறுவப்பட்டுள்ள அனைத்து புதிய சிக்னல்களும் மார்ச் மாத இறுதிக்குள் செயல்பாட்டிற்கு வரும்.

புதுச்சேரி முழுதும் சென்டர் மீடியன்களில் 150 இடங்களில் தேவையற்ற இடைவெளி விடப்பட்டுள்ளது. இதன் மூலமும் தினசரி விபத்து நடக்கிறது. இதனை மூட பொதுப்பணித்துறைக்கு அறிவுறுத்திவிட்டோம். ஆனால் பொதுப்பணித்துறை காலம் தாழ்த்தி வருகிறது' என்றார். பேட்டியின்போது எஸ்.பி., செல்வம் உடனிருந்தார்.

புதுச்சேரியில் நடக்கும் ஒட்டுமொத்த விபத்து உயிரிழப்புகளில் 70 சதவீதம் பைக் விபத்துகளில் ஏற்பட்டவை. ஹெல்மெட் அணியாமல் அதிவேகமாக சென்றதால் தலையில் அடிப்பட்டு உயிரிழக்கின்றனர். ஹெல்மெட் அணிவது, அதிவேக பயணத்தை குறைத்தால் 50 சதவீத விபத்து உயிரிழப்புகளை தடுக்க முடியும். போக்குவரத்து போலீசார் விபத்து இல்லா புதுச்சேரியை உருவாக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. நகர பகுதியில் குறைவான வேகத்தில் செல்வதால் ஹெல்மெட் அவசியமா என கேள்வி எழுப்புகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்RN Ravi Walkout : RN ரவியும்.. சட்டப்பேரவையும்அன்றும்... இன்றும் ஸ்டாலின் செய்த சம்பவம் TN AssemblyP Shanmugam CPI (M) History : வாச்சாத்தி போராளி! மாணவன் To தலைவன்! யார் இந்த பெ.சண்முகம்?RN Ravi Walkout : ஆளுநர் ரவி வெளிநடப்பு!’’தேசிய கீதம் அவமதிப்பு’’ உரையை வாசிக்காத ஆளுநர் : TN Assembly

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்
TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்
வசூலில்  கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்
வசூலில் கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்
Embed widget