ராணுவ வீரர்களின் பெயரை பயன்படுத்தி பணம் மோசடி - சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
புதுச்சேரி : ராணுவ வீரர்களின் பெயரை பயன்படுத்தி பணம் மோசடி நடப்பதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
ராணுவ வீரர்களின் பெயரை பயன்படுத்தி பணம் மோசடி நடப்பதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இணையதள மோசடிகள் பெருகிவரும் நிலையில் மோசடி நபர்கள் தற்போது ராணுவ வீரர்களின் பெயர் களையும் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
இதுதொடர்பாக புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு செய்தியில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரியில் தற்போது மோசடி நபர்கள் இணையதளத்தில் பொருட்களை விற்பதுபோல் அறிவிப்பு வெளியிட்டு பணம் பறிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் ராணுவ வீரர்கள்போல் உடையணிந்து அவர்கள் மோசடியில் ஈடு படுவதால் பொதுமக்கள் பலரும் அதை நம்பி பணத்தை இழந்து விடுகின்றனர். ராணுவ சீருடையுடன் கூடிய அடையாள அட்டையுடன் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை பழைய பொருட்கள் விற்பனை செய்யும் தளங்களில் பதிவிடுகின்றனர். தான் வேறு மாநிலத்துக்கு மாறுதல் ஆகி செல்வதால் அந்த வாகனத்தை அவ்வளவு தூரம் எடுத்து செல்ல முடியாததால் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள வாகனத்தை ரு.85 ஆயிரத்துக்கு விற்பதாக பதிவிடுகின்றனர். அதை நம்பி அவர்களை தொடர்புகொண்டு பேசினால், ரூ.5 ஆயிரம் முன்பணமாக அனுப்புங்கள், உடனடியாக பார்சல் செய்து அனுப்புவதாக கூறுவார்கள்.
மேலும் ராணுவ சீருடையுடன் வீடியோ காலில் வந்து பேசுவார்கள். அதை நம்பி ரூ.5 ஆயிரம் போட்டால் வாகனத்தை தயார் செய்வது போல் புகைப்படத்தை அனுப்பி மேலும் ஏதாவது பொய் சொல்லி ரூ.10 ஆயிரத்தை அனுப்ப சொல்வார்கள். அந்த பணம் கிடைத்தவுடன் அவருடைய அனைத்து அழைப்புகளும் துண்டிக்கப்படும். பொதுமக்கள் இது போன்ற மோசடிகளை நம்பி பணத்தை இழக்க வேண்டாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
உங்கள் கண்முன்னே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்கத் தயக்கமாக இருக்கிறதா? காலங்காலமாக மாறவே மாறாத ஒன்றை, நாம் என்ன மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று மலைப்பாக இருக்கிறதா?
என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்